Advertisment

ஆட்டத்தை தொடங்கிய வில்லி : அதிர்ச்சியில் பைத்தியம் ஆன வில்லன் : இது எங்க போய் முடியுமோ!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
zee tamil anna KP Nv

அண்ணா, கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய்

சண்முகம் கொடுத்த ஷாக்.. பைத்தியமான சௌந்தரபாண்டி?

Advertisment

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் பஞ்சாயத்தை கூட்டிய சௌந்தரபாண்டி தர்மகத்தா பதவியை தக்க வைத்துக் கொள்ள சண்முகத்தால் எல்லாத்தையும் பார்க்க முடியாது என்று சொல்லி என் நிலையில் இன்று, சண்முகம் உங்களுக்கு வயசாகிடுச்சு மாமா நீங்க ஓய்வெடுங்க எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்ல சௌந்தரபாண்டி செய்ததறியாது நிற்கிறார்.

அதன் பிறகு வீட்டுக்கு வந்த அவர் நைட் நேரத்தில் தனியாக உட்கார்ந்து தனியாக பேசிக் கொண்டிருக்க தூக்கத்திலிருந்து எழுந்த பாக்கியம் இதை பார்க்கிறாள். என்னங்க தனியா பேசிட்டு இருக்கீங்க என்று கேட்க தனியாக பேசிட்டு இருக்கேனா? முன்னாடி தான் ஆளுங்க உக்காந்துட்டு இருக்காங்களே என பைத்தியம் போல நடந்து கொள்ள பாக்கியம் அதிர்ச்சி அடைகிறாள். மறுநாள் காலையில் ஒரு குச்சி ஒன்றை எடுத்துக்கொண்டு நான் தர்மகத்தா தேர்தல்ல ஜெயிச்சுட்டேன் என்று சொல்லி முருகனுக்கு காவடி எடுப்பதாக அரோகரா போட்டு ஆடிக்கொண்டிருக்கிறான்.

தர்மகத்தா பதவி கைவிட்டு போறதால தான் இவர் இப்படி ஆகிட்டாரு என்று பாக்கியம் வருத்தப்படுகிறாள். இதனால் சண்முகத்தை சந்தித்து தர்மகத்தா பதவியை தன்னுடைய புருஷனுக்காக விட்டுக்கொடு என்று கெஞ்சி கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆசையாக காத்திருந்து ஏமாந்த மனோகரி.. எழில் கொடுத்த பல்பு

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் எழில் குழந்தைகளிடம் ஹாஸ்டலுக்கு அனுப்ப மாட்டேன் என்று சொல்ல அப்போ சுடரையும் வெளியே அனுப்ப மாட்டீங்களா என்று கேட்ட நிலையில் இன்று, எழில் சுடரையும் வெளியே அனுப்ப மாட்டேன் உங்க கூடத்தான் இருப்பார் என்று சொல்ல குழந்தைகள் சந்தோஷப்படுகின்றனர். குழந்தைகள் இல்லை பெஸ்ட் டாடி என்று தைரியம் எழுதி இருக்க இதற்கெல்லாம் காரணம் நீதான் என்று எழில் சுடருக்கு நன்றி சொல்கிறான்.

உனக்கு என்ன வேணும் கேளு என்று கேட்க சுடர் புடவை வேண்டும் என்று சொல்கிறாள். அதன் பிறகு குழந்தைகள் எல்லோரும் சுடர் உடன் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி சந்தோஷப்படுகின்றனர். இதைத்தொடர்ந்து எழில் மற்றும் மனோகரி ஹாஸ்பிடலில் இருக்கும்போது மனோகரியிடம் ரொம்ப முக்கியமான ஒருவருக்கு புடவை எடுக்கணும் ஒரு நல்ல கடையை கூட்டிட்டு போ என்று சொல்கிறான்.

மனோகரி எழில் தனக்குத்தான் புடவை எடுக்கப் போவதாக நினைத்துக் கொண்டு ஒரு நல்ல கடைக்கு குட்டி செல்கிறாள். மேலும் நானே செலக்ட் பண்ணி தரேன் என்று மனோகரி ஒவ்வொரு புடவையாக எடுத்து தன் மீது வைத்து எழிலுக்கும் தனக்கும் பிடித்தபடி ஒரு புடவையை தேர்வு செய்கிறாள். பிறகு இருவரும் வீட்டுக்கு வர எழில் மனோகரிடம் இருக்கும் புடவையை வாங்கி சுடரிடம் கொடுக்க அதைப் பார்த்து மனோகரி அதிர்ச்சியும் கோபமும் அடைகிறாள்.

அதே நேரத்தில் இந்து இதை பார்த்து பொசசிவ் ஆகிறாள். சுடர் புடவை சூப்பரா இருக்கு ரொம்ப நன்றி சார் என்றும் சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கார்த்தியின் உயிருக்கு ஆபத்து.. ரம்யா செய்யும் சதி

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரம்யாவிடம் என்னால பெங்களூருக்கு வர முடியாது என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பிய நிலையில், இன்று, வீட்டில் தீபா அண்ணி மைதிலியிடம் கோபமாக பேசி வெளியே அனுப்ப கார்த்திக் ரூமுக்குள் வந்து நிற்க தீபா அது பிரம்மை என நினைத்து எனக்கு உங்கள் ஞாபகமாகவே இருக்கு என்று பேச நான் தான் உங்க முன்னாடி வந்து நிற்கிறேன் என்று கார்த்திக் சர்ப்ரைஸ் கொடுக்கிறான்.

உடனே தீபா எனக்காக நீங்க பெங்களூர் போலயா அப்படின்னு கோவிலுக்கு கூட்டிட்டு போங்க என்று சொல்ல கார்த்திக் அவளை கோவிலுக்கு அழைத்துச் செல்கிறான். இருவரும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட ரம்யா இதை அனைத்தையும் வெளியில் இருந்து கவனித்துக் கொண்டிருக்கிறாள். அதன் பிறகு இவர்கள் கோவிலில் இருந்து வெளியே வந்ததும் கார்த்திக்கு தெரிந்த ஒருவர் அவரைப் பார்த்து பேச தீபா பழக்கடை அருகே வந்து நிற்க, அப்போது யாரோ ஒருவன் ஒரு லெட்டரை கொண்டு வந்து கொடுக்கிறான். தீபா அதைப் பிரித்துப் பார்க்க உன் புருஷன் உயிருக்கு ஆபத்து என்று எழுதி இருக்க அதிர்ச்சி அடைகிறாள்.

அந்த நேரம் பார்த்து இளநீர் கடைக்காரர் கார்த்தியை பார்த்து கையில் கத்தியுடன் வர தீபா பதறி போய் கார்த்திகை பிடித்து தள்ளிவிட்டு உங்களை கொல்ல வரான் என்று சொல்கிறாள். நான் இளநீர் கடைக்காரன் இளநீர் வெட்ட தான் வந்தேன் என்று சொல்ல கார்த்திக் அவரை அனுப்பி வைக்கிறான். தீபா உங்க ஊருக்கு ஆபத்துன்னு ஒரு லெட்டரை ஒருத்தன் வந்து குடுத்துட்டு போனான் என்று சொல்லி அந்த பேப்பரை கொடுக்க அதில் எதுவும் இல்லாமல் இருக்க தீபா அதிர்ச்சி அடைகிறாள்.

பிறகு வீட்டுக்கு வந்து விஷயத்தை சொல்ல அபிராமி தீபா ஏதோ அப்செட்டாகவே இருக்கா என்று சொல்கிறாள். இருப்பினும் கார்த்தியை நம்பும் தீபா போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று தன்னுடைய நண்பனிடம் நடந்த விஷயத்தை சொல்ல அவர் எனக்கு தெரிஞ்ச பாரன் சீக் டிபார்ட்மெண்ட் பிரண்டு ஒருத்தன் இருக்கான் அவன் கிட்ட கொடுத்து பார்க்கலாம் என்று சொல்லி கொடுக்க அதை பரிசோதனை செய்து பார்க்க மேஜிக் பெண்ணால் எழுதி இருப்பது தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment