இசக்கி தொடங்கும் புதிய தொழில்.. குழப்பத்தில் தவிக்கும் பரணி, வைகுண்டம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் சொன்னதை கேட்டு இசக்கி கண் கலங்கி வளையலை கழட்டி கொடுத்த நிலையில் இன்று, இசக்கியின் இந்த செயலால் பரணி வருத்தமடைகிறாள், சண்முகம் எதுக்கு இப்படி பேசினான் எனவும் குழப்பம் அடைகிறாள்.
அடுத்த நாள் காலையில் சண்முகம் உடன்குடி மற்றும் வெட்டுக்கிளியிடம் நின்று பேசி கொண்டிருக்கும் போது யாரோ ஒரு பெண்மணி கடைக்கு தேவையான சாமான்களை வண்டியில் கட்டி கொண்டு செல்வதை பார்க்கின்றனர், இது யாரு நமக்கு போட்டியாக என்று பின்தொடர்ந்து சென்று மடக்கி வண்டியை நிறுத்த இசக்கி என தெரிந்து ஷாக் ஆகின்றனர்.
இசக்கி மளிகை கடை வைக்க போவதாக சொல்ல சண்முகம் உன் மனசுக்கு பிடிச்சதை பண்ணு என்று சொல்கிறான். அடுத்து இசக்கி வீட்டிற்கு வந்து அவளது முடிவை சொல்ல சண்முகம் தங்கைகள் சந்தோசப்படுகின்றனர். ஆனால் பரணியும் வைகுண்டமும் அரை மனதோடு இருக்கின்றனர், இசக்கி கடையை ஆரம்பித்து விட்டால் வாழ போகாமல் இங்கேயே இருந்து விடுவாள் என்று அவளது வாழ்க்கையை நினைத்து கவலைப்படுகின்றனர்.
அடுத்து பரணி இசக்கியிடம் வந்து உன் அண்ணன் இப்படி சொன்னதால் தப்பா எடுத்துக்காத என்று சொல்லி பேச என் அண்ணனை பத்தி நான் எப்படி தப்பா நினைப்பேன் என்று சொல்கிறாள். பிளாஷ்கட்டில் இசக்கி தூங்காமல் இருக்க சண்முகம் என்னாச்சு என்று கேட்க எல்லாரும் படிச்சி இருக்காங்க ஒரு வேலை செய்து காசு கொடுக்கிறாங்க. நான் என்ன செய்ய என்று கவலைப்பட சண்முகம் படிச்சா தான் முன்னேற முடியுமா? உனக்கு எது சரினு படுதோ அதை செய்.. அண்ணன் உனக்கு துணையா இருப்பேன் என்று சொல்லியது தெரிய வருகிறது.
இதை கேட்ட பரணி அண்ணனும் தங்கைகளும் சேர்ந்து தான் இப்படியொரு காரியம் பண்ணீங்களா? என்று சந்தோசப்படுகிறாள். அதை தொடர்ந்து சண்முகம் தங்கச்சிங்களுக்கு தான் இடது தோள். பிடிச்சவளுக்கு வலது தோள் வந்து சாய்ந்துக்க என்று சொல்ல பரணி சண்முகம் தோளில் சாய்ந்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மகேஷ்க்கு வந்த வார்னிங்.. கார்த்திக் கொடுத்த ஐடியா, ரேவதி வாழ்க்கையில் நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டேஸ்வரி சிவனாண்டி வீட்டிற்கு சென்று ரேவதிக்கு நிச்சயதார்த்தம் நடக்க உள்ள விஷயத்தை சொல்லி வெறுப்பேற்றிய நிலையில் இன்று, சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு கடைக்காரர் புடவை கொண்டு வந்திருக்க ரேவதிக்காக ஆளாளுக்கு ஒவ்வொரு புடவையை தேர்வு செய்து சொல்ல அது எதுவும் செட்டாகாத நிலையில் கார்த்திக் ஒரு புடவையை தேர்வு செய்து கொடுக்கிறான்.
ரேவதி அந்த புடவையை கட்டி கொண்டு வர எல்லாரும் அசந்து போய் கார்த்தியின் செலக்ஷனை பாராட்டுகின்றனர். அதை தொடர்ந்து எல்லாரும் கார்த்தியை புடவை செலக்ட் செய்து தர சொல்லி புடவை எடுக்கின்றனர். புடவை எடுத்து முடித்ததும் மொத்த பேரும் கிளம்பி நகை எடுக்க நகை கடைக்கு வருகின்றனர். மோதிரம் செலக்ட் செய்யும் போது கார்த்திக் ஜோடியாக (Couple) ரிங் எடுக்கலாம் என்று ஐடியா கொடுக்க அதே போல் ரிங்கை தேர்வு செய்கின்றனர்.
மாப்பிள்ளை மகேஷின் அளவு தெரியததால் கார்த்தியின் விரல் அளவை வைத்து ரிங்கை எடுக்கின்றனர். மறுபக்கம் சந்திரகலா சிவனாண்டியை சந்தித்து என் அக்கா சந்தோசமாக இருக்க கூடாது.. இந்த நிச்சயம் நல்லபடியா நடக்க கூடாது என்று சொல்கிறாள். சிவனாண்டி உனக்கு ஏன் என்னை பிடிக்கும் என்று கேட்க சந்திரகலா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். அதனால் தான் என் அக்காவை பழி வாங்கணும்னு நினைக்கிறேன் என்று சொல்கிறாள்.
அடுத்து ரேவதி மகேஷ்க்கு போன் செய்து கல்யாண வேலைகள் நல்லபடியாக சென்று கொண்டிருப்பதாக சொல்ல மகேஷ் அண்ணி மாயாவிடம் சிலிமிஷம் செய்து கொண்டே ரேவதியிடம் அப்பாவி போல் அம்மா அம்மா என்று சொல்லி பேசுகிறான். ரேவதி நமக்கு கல்யாணம் ஆக போகுது.. இன்னும் எதுக்கு இப்படி பேசுறீங்க? பேரை சொல்லியே கூப்பிடுங்க என்று சொல்ல மகேஷ் சரிங்க ரேவதி என்று சொல்லி போனை வைக்கிறான்.
பிறகு இங்கே மாயா இனிமே தான் நீ உஷாரா இருக்கனும்.. நம்மள பத்தி வெளியே ஏதாவது தெரிந்தா எல்லாம் கெட்டு போய்டும் என்று எச்சரிக்கிறாள், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.