டாக்டர் குழந்தையை சொன்ன வார்தையால் கார்த்திக்கு வந்த சந்தேகம்.. ஆதாரத்தை அழிக்கும் மாயா - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மல்லிகா டாக்டரின் குழந்தையை தூக்கி கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்றிருந்த நிலையில் இன்று, குழந்தைக்கு ஹாஸ்பிடலில் ட்ரீட்மெண்ட் கொடுத்ததும் கார்த்திக் குழந்தையிடம் ஏன் பாப்பா பார்த்து இருக்க மாட்டியா என்று கேட்க அந்த குழந்தை அங்கிள் நான் எதுவும் பண்ணல.. ரெட் கலர் புடவை கட்டிக்கிட்டு இருந்த ஆன்ட்டி தான் இப்படி பண்ணாங்க என்று சொல்கிறது.
இதனால் கார்த்திக் குழப்பமடையும் கார்த்திக், இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்கிறான். அடுத்து கார்த்திக் மண்டபத்திற்கு வர மாயா ரெட் கலர் புடவையில் இருக்க சந்தேகமடைகிறான். கொஞ்ச நேரத்தில் மாயா உள்ளே போய் புடவையை மாற்றி விட கார்த்தியின் சந்தேகம் மேலும் அதிகமாகிறது. அடுத்தகட்ட நடவடிக்கையாக உண்மையை கண்டுபிடிக்க சிசிடிவி காட்சிகளை பார்ப்பதற்காக செல்கிறான்.
இந்த விஷயம் அறிந்து மாயா மெயின் ஆப் செய்து கார்த்தியை திசை திருப்பி உள்ளே சென்று ஆதாரங்களை தீயிட்டு அழித்து விடுகிறாள். பிறகு கார்த்திக் உள்ளே வந்து பார்க்கையில் எல்லாம் எரிந்து கிடக்க அதிர்ச்சி அமையும் அவன், இதையெல்லாம் யாரோ திட்டம் போட்டு தான் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“