/indian-express-tamil/media/media_files/2025/02/04/BLGydTUpZgrVbMv3KGSs.jpg)
குடும்பத்தோடு கைது செய்யப்படும் துளசி.. பிரிந்து செல்லும் தியா - கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டி மேளம் சீரியலில் நேற்றைய எபிசோடில் மோனிகா மற்றும் ஜெகன் என இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் குழந்தையை கடத்தி விட்டதாக சொல்லி துளசி மீது கம்ப்ளைன்ட் கொடுத்த நிலையில் இன்று, துளசி வீட்டுக்கு வரும் போலீஸ் இங்கே துளசி யாரு என்று கேட்டு உன்னையும் குழந்தையும் இன்ஸ்பெக்டர் கூட்டிட்டு வர சொன்னாரு என்று சொல்ல சிவராமன் மற்றும் லட்சுமி ஆகியோர் எங்க பொண்ணை தனியா அனுப்ப முடியாது என அவளுடன் கிளம்பி வருகின்றனர்.
ஸ்டேஷனுக்கு வந்ததும் இன்ஸ்பெக்டர் இது யாரு உன் குழந்தையா என்று கேட்க துளசி ஆமாம் என்று சொல்ல நீ பெத்த குழந்தையா என்று கேட்க சிவராமன் இல்ல ஸ்ரீகாந்த்தோட குழந்தை.. என் பொண்ணுக்கும் அவருக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணியிருந்தோம் ஆனால் கல்யாணத்து அன்று ஏற்பட்ட விபத்துல மாப்பிள்ளை இறந்துட்டாரு அதனால குழந்தையை நாங்க கொண்டு வந்து வளர்க்கிறோம் என்று சொல்கிறார்.
இன்ஸ்பெக்டர் அப்படி எல்லாம் உங்க இஷ்டத்துக்கு கொண்டு போய் வளர்க்க முடியாது. உங்க மேல இப்போ குழந்தையோட உறவினர்கள் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க என்று சொல்ல, மோனிகா மற்றும் ஜெகன் ஆகியோர் என்ட்ரி கொடுக்கின்றனர். சொத்துக்காக ஆசைப்பட்டு குழந்தையை கூட்டிட்டு போய் விட்டதாக சொல்ல இன்ஸ்பெக்டர் குழந்தையை இவர்களிடம் இருந்து பிரித்து மோனிகா, ஜெகனிடம் ஒப்படைக்கிறார்.
பிறகு லட்சுமி மற்றும் சிவராமனை சிறைக்குள் அடைக்கின்றனர். இனிமே அந்த குழந்தைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அந்த குழந்தையை பார்க்க மாட்டேன், பேசமாட்டேன் என எழுதி கையெழுத்து போட்டால் தான் உங்க அப்பா அம்மாவை விடுவேன் என இன்ஸ்பெக்டர் துளசிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். வேறு வழியில்லாமல் துளசி கையெழுத்து போட்டு கொடுக்கிறாள்.
இருந்ததிலும் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் சிவராமனை வெளியே விடாமல் போட்டு அலைக்கழிக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கார்த்தியிடம் நகையை கொடுத்து கண்டிஷன் போட்ட பரமேஸ்வரி பாட்டி.. நலங்கு பங்ஷனில் நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமியாடி உன் பொண்ணு கல்யாணம் கண்டிப்பா நடக்கும் ஆனா நீ நினைச்சது நடக்காது என குறி சொன்ன நிலையில் இன்று, கருப்புசாமி சொன்ன குறியால் சாமுண்டீஸ்வரி சிந்தனையில் இருக்க, உள்ளே வந்த சந்திரகலா நீங்க கவலைப்படாதீங்க அக்கா அதான் ரேவதி கல்யாணம் நல்லபடியா நடக்கும்னு சொல்லி இருக்காங்களே என்று ஆறுதல் படுத்துகிறாள்.
அடுத்ததாக சந்திரகலா சிவனாண்டி மற்றும் மாயா என மூவரும் கூட்டு சேர்ந்து அந்த டிரைவர் மற்றும் மயில் வாகனத்திடம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் என பேசிக் கொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து கார்த்திக் மற்றும் மயில்வாகனம் என இருவரும் தாத்தா ராஜா சேதுபதியை சந்திக்க வீட்டுக்கு வருகின்றனர். அப்போது கோவிலில் நடந்த விஷயத்தையும் நாளைக்கு ரேவதிக்கு நலங்கு வைக்கிறார்கள் என்ற விஷயத்தை சொல்ல முறை பையனா நீ தான் நலங்கு வைக்கணும் என பாட்டி பரமேஸ்வரி சொல்கிறார்.
கார்த்திக் அது எப்படி முடியும் அப்படி பண்ண தப்பாகிடும் என்று சொல்ல பரமேஸ்வரி பாட்டி கொஞ்ச நகைகளை கொடுத்து முறை பையனா நீ தான் முறை எனும் என்று கண்டிஷன் போடுகிறார். மேலும் மயில்வாகனத்திடம் நாங்க தான் நேர்ல வர முடியாது எங்களுக்கு வீடியோ கால்ல அங்கு நடக்கிறது காட்டு என சொல்கிறார். அடுத்த நாள் ரேவதிக்கு நலங்கு வைக்க எல்லா ஏற்பாடுகளும் நடக்க ரேவதி தயாராகி வெளியே வருகிறாள்.
தாய்மாமன் தான் நலங்கு வச்சு தொடங்கி வைக்கணும். யாராவது இருக்கிறார்களா என உறவினர்கள் கேட்க மயில் வாகனம் இருக்கிறார்களே நம்ப டிரைவர் இருக்காரு என்று சொல்ல எல்லோரும் குழப்பம் அடைகின்றனர். டிரைவர் சாமுண்டீஸ்வரி அத்தைக்கு தம்பி மாதிரி அப்போ ரேவதிக்கு மாமா முறை தானே என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.