/indian-express-tamil/media/media_files/2025/09/17/zee-tamh-2025-09-17-16-02-34.jpg)
கார்த்திக்கு பல்ப் கொடுத்த காளியம்மா.. கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட் கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் காளியம்மா வீட்டில் தான் கையெழுத்து வாங்கிய நபர்கள் இருக்கிறார்கள் என்ற விஷயம் தெரிய வந்த நிலையில் இன்று, இரவானதும் கையெழுத்து வாங்கிய இருவரை பிடித்து பஞ்சாயத்தில் ஒப்படைக்க மயில்வாகனம், கார்த்திக் ஆகியோர் கிளப்பி செல்கின்றனர். ஆனால் அங்கு வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து அதிர்ச்சியாக கைதட்டும் காளியம்மா நீ தான் போலி சாமியார் வேஷத்தில் வந்திருக்க என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என்று ஏளனமாக பேசுகிறாள். இதனால் இவர்கள் ஏமாற்றமடைகின்றனர்.
மறுபக்கம் பூட்டப்பட்டு இருக்கும் கோவில் அருகே இருவருக்கு யாரோ சாப்பாடு கொண்டு போவதை கவனிக்கிறார் பரமேஸ்வரி பாட்டி. மேலும் சம்மந்தப்பட்ட அந்த நபர்கள் இங்கு தான் பதுங்கி இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. உடனே பாட்டி கார்த்திக்கு தகவல் கொடுக்கிறார், கார்த்திக் அந்த இடத்திற்கு வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிக்கிய சௌந்தரபாண்டி.. சண்முகத்துக்கு கிடைத்த முதல் வெற்றி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் வைஜெயந்தி சௌந்தரபாண்டியை பிடித்து திட்டிய நிலையில் இன்று, சௌந்தரபாண்டி அந்த விருமன் யாருமே எனக்கு தெரியாதுனு சொல்ல போறேன். நான் சொல்ல போற பதிலில் சண்முகம் திக்கு முக்காடனும். ஜட்ஜ் அம்மாவே என்னை வெளியே அனுப்பிடுவாங்க என்று தனது திட்டத்தை சொல்கிறார். உடன்குடி இதனை மறைமுகமாக வீடியோ எடுக்கிறார்.
பிறகு கோர்ட்டில் மீண்டும் விசாரணை தொடங்க சௌந்தரபாண்டி எனக்கு விருமனை தெரியவே தெரியாது என்று அடித்து சொல்ல உடன்குடி எடுத்த வீடியோவை ஆதாரமாக அளிக்க சௌந்திரபாண்டி சிக்கி கொள்கிறார். பிறகு அவரை விசாரிக்க விருமன் கோவில் நகையை திருடியது, சண்முகம் அதை கண்டுபிடித்தது. பிறகு விருமனே தற்கொலை செய்து கொண்ட விஷயங்களை சொல்கிறார். இதையடுத்து வழக்கை கோர்ட் தள்ளி வைக்கப்படுகிறது.
இது ஷண்முகத்துக் கிடைத்த வெற்றியாக அவனது குடும்பத்தார் கொண்டாடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஈஸ்வரமூர்த்தி போடும் திட்டம்.. வெற்றியை மீறி துளசி எடுத்த முடிவு - கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டி மேளம் சீரியலில் நேற்றைய எபிசோடில் வெற்றி ஊர் அறிய தியாவை தத்தெடுத்துக் கொண்ட விஷயத்தை அறிவிக்க மீனாட்சி அபிராமி ஏற்றி விட்ட நிலையில் இன்று, அபிராமி யாரோ பெத்த பிள்ளைய தத்தெடுத்ததா ஊர் முழுக்க சொல்லிக்கிட்டு இருக்கான் என்று ஆவேசப்பட்டு பேச ஈஸ்வரமூர்த்தி எல்லாம் தேர்தல்ல ஜெயிக்கிற வரைக்கும் தான் அதுக்கப்புறம் துளசி அந்த குழந்தையையும் வீட்டை விட்டு துரத்தி விடுவேன் என்று சொல்ல வெற்றி இதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறான்.
அதன் பிறகு ரூமுக்கு வந்தவன் துளசியிடம் இனிமேல் நீங்க பிரச்சாரத்திற்கு போக வேண்டாம், இவ்வளவு அவமானப்பட்டு எல்லாம் இங்கு எதையும் செய்ய வேண்டாம் என்று சொல்கிறான். மறுபக்கம் திவ்யா மற்றும் மீனாட்சி ஆகியோர் ஒன்று சேர்ந்து துளசியை தோற்கடிப்பது எப்படி என திட்டமிடுகின்றனர். இங்கே அடுத்த நாள் காலையில் வெற்றி எழுந்து கொள்வதற்கு முன்பாக துளசி வெற்றியின் நண்பர்களுடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள்.
வெற்றி இதைப் பார்த்து எதுக்கு மேடம் நீங்க இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க வேண்டாம் என்று சொல்ல துளசி உங்க வீட்ல எல்லாரும் என்ன அவமானப்படுத்தும் போது உங்க அப்பா மட்டும் என் மேல நம்பிக்கை வைத்து பிரச்சாரத்திற்கு கூப்பிட்டு இருக்காரு. அவர் என்னை வீட்டை விட்டு அனுப்பினாலும் பரவால்ல அவருக்காக பிரச்சாரம் செய்வேன் என்று சொல்கிறாள். அடுத்ததாக தேர்தல் நடந்து முடிய ஓட்டு எண்ணிக்கையும் தொடங்க ஈஸ்வரமூர்த்தி 25,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்க திவ்யா, மீனாட்சி ஆகியோர் அதிருப்தி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.