/indian-express-tamil/media/media_files/2025/09/17/zee-tamh-2025-09-17-16-02-34.jpg)
மாரி குறித்து கார்த்திக்கு தெரியவரும் தகவல்.. நடந்தது என்ன? - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஆகியோர் கூட்டு சேர்ந்து மாரியை கடத்திய நிலையில் இன்று ரேவதியின் உடல்நிலை மேலும் மோசமடைய வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு ரேவதி உடல்நிலை தேறி வரவேண்டும் என்பதற்காக ஆசிரமத்தில் உணவு கொடுக்க முடிவெடுக்கின்றனர்.
இதனை தொடர்ந்து மறுபக்கம் மாரியின் செல்போன் கீழே விழுந்து விட கார்த்திக் அந்த நம்பருக்கு போன் செய்ய அந்த வழியாக வந்த இரண்டு முருக பக்தர்கள் போனை எடுத்து பேசுகின்றனர். அதன் பிறகு அவர்கள் சொன்ன முகவரியை வைத்து கார்த்திக் அந்த இடத்திற்கு வருகிறான். பிறகு பரமேஸ்வரி பாட்டி கோவிலில் ஏதாவது வேண்டிக் கொண்டு தீச்சட்டி ஏந்த முடிவெடுக்க துர்கா அக்காவுக்காக நானும் இருக்கிறேன் என்று தீச்சட்டி எடுக்க ரோகிணி ரேவதிக்காக நானும் எடுக்கிறேன் என்று கலந்து கொள்கிறாள்.
மறுபக்கம் ரேவதியின் உடல் நிலையை சிறு முன்னேற்றம் ஏற்பட அதை பார்த்து சாமுண்டீஸ்வரி சந்தோஷப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோவிலில் நடக்கும் விக்கிரக பூஜை.. சௌந்தரபாண்டி செய்யும் சூழ்ச்சி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி வீரா இந்த வீட்டிற்கு வராமல் அந்த வீட்டிற்கு வர மாட்டேன் என்று சொல்லிய நிலையில் இன்று, சண்முகம் அவ விருப்பப்பட்டா இந்த வீட்டிற்கு கூப்பிட்டுக்கோ, நான் எல்லாம் சொல்ல மாட்டேன் என்று சொல்லி சண்முகம் வெளியே கிளம்பி விடுகிறான். பாக்கியம் இவன் ஏண்டி இப்படி பண்ணிட்டு இருக்கான் என்று வருத்தப்பட்டு பேச பரணி அவனை நான் பார்த்துக்கறேன் என்று சொல்லி கிளம்பி செல்கிறாள்.
தொடர்ந்து கோவிலில் விக்கிர பூஜை நடைபெற உள்ள நிலையில் சௌந்தரபாண்டி வைஜெயந்தியை சந்தித்து கோவிலில் நடக்கும் விக்கிரக பூஜையை தொடர்ந்து சிலையை தர்மகத்தா கையில் தான் ஒப்படைப்பார்கள். அது சண்முகம் கைக்கு போக கூடாது. நீங்க கோவிலுக்கு வாங்க. நான் உங்க கையில் வாங்கி கொடுக்கிறேன்.
அந்த விக்கிரம் உங்க வீட்டில் இருந்தா எந்த ஆபத்தா இருந்தாலும் அதில் இருந்து தப்பி விடலாம் என்று சொல்ல வைஜெயந்தி ஓகே சொல்கிறாள். தொடர்ந்து கோவிலில் பூஜை முடிந்து சிலையை பரணியிடம் ஒப்படைக்க செல்லும் நேரத்தில் சௌந்தரபாண்டி அதை வாங்கி வைஜயசந்தியிடம் கொடுத்து விடுகிறார்.
சிலை கை மாறியதால் அது மீண்டும் பரணி கையில் கொடுத்தாலும் சக்தி இருக்காது என்று சொல்ல அந்த சிலை வைஜெயந்தி கையில் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விடுகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
என் பொண்டாட்டிய எப்படி கரெக்ட் பண்றது? ஐடியா கேட்டு பல்பு வாங்கும் வெற்றி - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டிமேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் சிவராமன் உயிரோடு இல்லை என்று தெரிந்து குடும்பத்தினர் உடைந்து போன நிலையில் இன்று, வெற்றி துளசி வீட்டுக்கு வர அபிராமி வழக்கம் போல என்ன வீடா? சத்திரமா? உன் இஷ்டத்துக்கு வர, போற என்று கோபப்படுகிறாள். ஒழுங்கா இந்த வீட்டு மருமகளா நடந்துக்கோ என்று சொல்ல வெற்றி ஒரு நேரம் அவங்கள இந்த வீட்டு மருமகளே இல்லைன்னு சொல்றீங்க இப்போ இந்த வீட்டு மருமகளா நடந்துக்கோனு சொல்றீங்க உங்க இஷ்டத்துக்கு பேசுவீங்களா என்று கேள்வி கேட்கிறான்.
பிறகு ரூமுக்கு வந்ததும் துளசியிடம் நீங்க எதுவும் பெருசா எடுத்துக்காதீங்க அம்மா உங்கள பத்தி புரிஞ்சிக்கும் போது கண்டிப்பா வருத்தப்படுவாங்க என்று ஆறுதல் சொல்லி தோள் மீது கை வைக்க போக துளசி தள்ளி நிற்கிறாள். உங்களுக்கு என்னுடைய காதல் புரியலையா என்று வெற்றி கேட்க நீங்க ஒரு நல்ல மனுஷன் என்பதை புரிஞ்சுகிட்டேன் ஆனா ஒரு பொண்ணோட மனசுல இடம் பிடிக்கிற அளவுக்கு இங்கு இன்னும் மாறல என்று பதிலடி கொடுக்கிறாள்.
அதன் பிறகு வெற்றி தன்னுடைய அண்ணனிடம் ஒரு பொண்ணு எப்படி டா கரெக்ட் பண்றது என்று ஐடியா கேட்கிறான். அவன் பொண்ணு யாரு என்று கேட்க வெற்றி வேற யாரு என் பொண்டாட்டி தான் என்று பதில் கொடுக்கிறான். பிறகு அவனது அண்ணனும் சில ஐடியாக்களை கொடுக்கிறான். மறுநாள் காலையில் எல்லோருக்கும் முன்பாக எழுந்து வெற்றி பூஜை செய்து காபி போட்டு கொடுத்து துளசி எழுந்து கொள்ளும் போது இந்தாங்க மேடம் காபி என்று கையில் கொடுக்கிறான்.
வெற்றி ஓடி ஓடி வேலை செய்வதை பார்த்த துளசி அவனை கூப்பிட்டு இதெல்லாம் எதுக்காக பண்றீங்கன்னு அப்பட்டமா தெரியுது.. இப்படி எல்லாம் பண்ணாதீங்க டோட்டல் டைம் வேஸ்ட் என்று பல்பு கொடுக்கிறாள். அடுத்ததாக துளசி ஆபீசுக்கு நடந்து செல்ல அவளை பின்தொடர்ந்து வரும் வெற்றி ஒரு இடத்தில் நிறுத்தி கண்ணை மூடி காதலை சொல்லி கையில் இருக்கும் ரோஜாக்களை கொடுத்து கண் திறந்து பார்க்க அங்கு ஒரு பாட்டி நிற்பதை பார்த்து ஷாக்காகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.