கணவனை ஜாமினில் எடுத்த மனைவி; வீட்டில் வைத்த புது கண்டிஷன்: உறவு நீடிக்குமா?

தனக்கே தெரியாமல் தாளி கட்டிய கணவனை போலீசில் மாட்டிவிட்ட துளசி இப்போது அவனை ஜாமினில் எடுத்துள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தனக்கே தெரியாமல் தாளி கட்டிய கணவனை போலீசில் மாட்டிவிட்ட துளசி இப்போது அவனை ஜாமினில் எடுத்துள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Kettimelam Ayili and Kd

பாருக்குள் அயலி.. ரித்விகாவால் உருவான சண்டை - அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

அயலி சீரியலில் நேற்றைய எபிசோடில் அயலி வர்மாவை தேடி வந்த நிலையில் இன்று, கபிலன் ரித்திகா மற்றும் தங்கைகளுடன் பாருக்கு வருகிறான். அங்கே சரக்கு ஆர்டர் செய்துவிட்டு திரும்பிப் பார்க்க வர்மா நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். நீங்க ஆரம்பியுங்க வந்துடறேன் என்று சொல்லி அங்கு இருந்து நழுவும் கபிலன் மேலே சென்று வருமாவை பார்க்கிறான்.

வர்மா உன்னால எனக்கு எவ்வளவு லாஸ் தெரியுமா என்று இந்திராணி குறித்து பேச கபிலன் கடுப்பாகிறான். பிறகு வர்மா ஒரு பாக்ஸை கொடுத்து அதை டெலிவரி செய்ய சொல்லி கட்டாயப்படுத்துகிறான்.  ‌  கபிலனும் அதை வேண்டா எதிர்பார்க்க வாங்கி கொண்டு கீழே வருகிறான். இதைத்தொடர்ந்து அயலி மற்றும் சிவா இருவரும் பம்புக்குள் நுழைய பின் தொடர்ந்து வந்த செல்லா புடவையில் இருந்ததால் உள்ளே விட மறுக்கின்றனர். டிக்கெட் விலை 15 ஆயிரம் ரூபாய் என்று சொல்ல செல்லா 350 ரூபாய் வேணா தரேன் என்று பேசி பல்பு வாங்குகிறாள். மேலும் அயலி மாறுவேடத்தில் வந்து குடிக்க சென்று இருப்பதாக தவறாக புரிந்து கொள்கிறாள்.

உள்ளே ரித்திகாவை ஒருவன் கிண்டல் அடித்து பேச அவள் அவனை அடித்து விட பிறகு கபிலன் அங்கு வர கபிலனுக்கும் அந்த நபருக்கும் இடையே சண்டை உருவாகிறது.  இதற்கு இடையில் வர்மா சிவா துப்பாக்கி மறைத்து வைத்திருப்பதை பார்த்துவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயல அயலி அவனை பார்த்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment
Advertisements

வெற்றியை வெளுத்து வாங்கிய துளசி.. ஆசையா இருந்தவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

கெட்டிமேளம் சீரியலில் நேற்றைய எபிசோடில் துளசி ஆட்டோவில் ஸ்டேஷனுக்கு வந்த நிலையில் இன்று, வெற்றிக்கு ஆதரவாக பேசி அவனை வெளியே எடுக்கிறாள் துளசி, பிறகு வெற்றியை கைத்தாங்கலாக ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அழைத்து வருகிறாள். வெற்றியின் வீட்டில் எல்லாரும் இவர்களை கண்டு கொள்ளாமல் இருக்கே வெற்றியே வீட்டிற்குள் சென்று ஆரத்தி கரைத்து எடுத்து வந்து துளசி மற்றும் தியாவை ஆரத்தி எடுத்து அழைத்து செல்கிறான்.

வெற்றியின் அம்மா நீயே பிள்ளை இல்லனு தலை மூழ்கிட்டேன், இவ யாருடா இந்த வீட்டிற்குள் வர என்று ஆவேசப்படுகிறாள். அடுத்து ஈஸ்வரமூர்த்தி உனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணினவை நம்பி இந்த வீட்டிற்கு வந்து இருக்கியே மா என்று கேட்கிறார். துளசி அவர் தப்பு பண்ணிட்டாரு தான்.. அதுக்காக அவர் கட்டின தாலி இல்லனு ஆகிடுமா என்று கேட்கிறாள். வெற்றி நடப்பதையெல்லாம் பார்த்து சந்தோஷப்படுகிறான்.

தியாவை ரூமுக்கு அழைத்து சென்று ஹெட் செட்டில் பாட்டு போட்டு விடுகிறான். இதையடுத்து உள்ளே வந்த துளசி என் அம்மா அப்பாவுக்காக தான் இந்த வீட்டிற்கு வந்தேன்.. வெளியுலகத்துக்கு தான் நாம புருஷன் பொண்டாட்டி.. இந்த ரூமில் நீ யாரோ நான் யாரோ என்று ஆவேசப்படுகிறாள். வெற்றி துளசி திட்ட திட்ட தியாவுக்கு எதுவும் தெரிய கூடாது என்பதால் சிரித்தபடி மேனேஜ் செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடத்தப்படும் அபிராமி.. கோவில் நகையை ஆட்டைய போடும் வில்லன்கள் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் அபிராமியை வீடு மாற்றிய நிலையில் இன்று, சிவணாண்டியின் ஆட்கள் அபிராமி இருக்கும் வீட்டை கண்டுபுடித்து பரமேஸ்வரி பாட்டி குரலில் பேசி அவளை வெளியே வர வைத்து கடத்துகின்றனர். இன்னொரு பக்கம் முத்துவேல் மற்றும் இன்ஸ்பெக்டர் துரை ஆகியோர் கூட்டு சேர்ந்து பரமேஸ்வரி பாட்டியின் வீட்டிற்குள் புகுந்து யாருக்கும் தெரியாமல் கோவில் நகைகளை திருடுகின்றனர்.

அடுத்த நாள் காலையில் கோவிலில் எல்லாரும் காத்துக் கொண்டிருக்க இங்கே நகை காணாமல் போனது தெரியாமல் கோவிலுக்கு கிளம்ப தயாராகுகிறாள். பிறகு அமைச்சர் சிறப்பு விருந்தினராக கோவிலுக்கு வர சாமுண்டீஸ்வரியும் அவரும் தங்களை அறிமுகம் செய்து கொள்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tamil Serial News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: