தாராவின் திட்டத்தை அறியும் சாஸ்திரி.. அடுத்து நடக்க போவது என்ன? மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
மாரி சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டை சுத்தம் செய்யும் போது ஒரு சங்கும் அதில் ஒரு வைரமும் கிடைத்த நிலையில் இன்று, மாரி சித்தரை பார்க்க அந்த சங்கு மற்றும் வைரத்துடன் கோவிலுக்கு வந்து கொண்டிருக்க எதிரே ஆட்டோவில் சாஸ்திரி வருகிறார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வார்களா? இல்லையா? என்ற பில்டப் காட்சிகள் நகர் கடைசியில் பார்த்து கொள்ளாமல் சென்று விடுகின்றனர்.
இங்கே வீட்டிற்கு வந்த மாயா சங்கு மாரி கையில் சிக்கியது தெரிந்து அதிர்ச்சி அடைகிறாள், மாரிக்கு உண்மைகள் அனைத்தும் தெரிந்து விடுமோ என்று பதறுகிறாள். மறுபக்கம் சித்தர் இது விலைமதிப்பில்லாத ஒன்று, இது தான் உங்களை தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கிறது. இதை பத்திரமாக பார்த்துக் என்று சொல்லி அனுப்புகிறார்.
அடுத்ததாக வீட்டில் தாரா மற்றும் சங்கரபாண்டி ரூமில் பேசி கொண்டிருக்கின்றனர், அப்போது சாஸ்திரி வீட்டிற்கு வருகிறார். வீட்டு கதவு சாற்றப்பட்டு இருக்க சாஸ்திரி ஜன்னல் அருகே வந்து பார்க்க அப்போது ரூமில் தாரா சங்கரபாண்டியிடம் மாரி கையில் அந்த சங்கு இருக்க கூடாது எனவும் மாரி குழந்தை தான் இந்த வீட்டில் இருக்கும் குழந்தை என அவளுக்கு தெரிய கூடாது என பேசுகிறாள்.
மேலும் கூடிய சீக்கிரம் குழந்தையை தீர்த்து கட்டணும் என்று பேச இதை சாஸ்திரி கேட்டு அதிர்ச்சி அடைகிறார். பேசுவதை சாஸ்திரி கேட்டு விட்டதை தாராவும் பார்த்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உண்மையை மறைத்த எழில்.. வருத்தத்தில் சுடர் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்
நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் மூத்த மகள் பற்றி தெரிந்து கொள்வதற்காக சுடரின் அப்பா, எழில் மற்றும் ராமையா ஆகியோர் ஆசிரமத்திற்கு வந்திருந்த நிலையில் இன்று, ஆசிரமத்தில் அது வேறொரு பொண்ணு உங்களுக்கு மாற்றி தகவல் கொடுத்து விட்டதாக சொல்ல ஏமாற்றம் அடையும் சுப்பிரமணி மகளை நினைத்து வருத்தம் அடைகிறார். அதன் பிறகு எழில் அவரை காரில் உட்கார வைத்துவிட்டு மீண்டும் உள்ளே வருகிறான்.
ஆசிரம நிர்வாகியை சந்தித்து நான் சொன்ன மாதிரியே சொன்னதுக்கு ரொம்ப நன்றி என சொல்கிறான். பிறகு ராமையா இந்த விஷயம் அவருக்கு தெரிந்திருந்தால் ரொம்ப வருத்தப்பட்டு இருப்பார் என்று சொல்ல எழில் அதற்காகத்தான் இப்படி சொல்ல சொன்னதாக சொல்கிறான். அதைத்தொடர்ந்து இவர்கள் வீட்டுக்கு வர சுடர் ஆர்வமாக சென்று அப்பாவிடம் அக்கா பற்றி விஷயம் தெரிந்ததா என்று கேட்கிறாள்.
அவர் இல்ல மாத்தி சொல்லிட்டாங்களாம் என்று சொல்லி வருத்தப்படுகிறார். பிறகு எழில் தனது ரூமுக்கு வந்து இந்துவின் புடவையை எடுத்து வைத்துக் கொண்டு பீல் செய்கிறான். பிறகு சுடர் கபோர்டில் இருக்கும் இந்துவின் லெட்டரை எடுக்க இதை பார்த்த எழில் சுடர் அதை எதுக்கு எடுத்த அந்த லெட்டரை நீ படிச்சியா என சத்தம் போடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.