Advertisment

மாமனாரிடம் தோற்ற மருமகன்: மனைவிக்கு எதிரான சதியை கண்டுபிடிப்பாரா ஹீரோ; ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
zee ta

அண்ணா, கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய்

இந்துவாக மாறிய சுடர்.. கனகவல்லிக்கு ஷாக், நடந்தது என்ன?

Advertisment

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் இந்து சுடரின் உடம்புக்குள் புகுந்து ரவுடிகளை அடித்து ஓட விட்டு பிறகு வீட்டிற்குள் நுழைந்த நிலையில் இன்று, பிள்ளைகள் ட்ராயிங் செய்து கொண்டிருக்க அங்கு சுடராக வந்த இந்து அம்மா வந்து இருக்கேன் என்று சொல்லி குழந்தைகளோடு விளையாடி சந்தோஷப்படுகிறாள். பிறகு குழந்தைகள் பசிப்பதாக சொன்னதும் வெஜிடபிள் பிரியாணி சமைத்து பிள்ளைகளை சாப்பிட வைத்து சந்தோஷப்படுகிறாள்.

அடுத்ததாக கனகவல்லி ரூமுக்கு வந்து அத்தை என்று சொல்லி கூப்பிட கனகவல்லி என்ன புதுசா அத்தைனு கூப்பிடுற? நீ அப்படி கூப்பிட மாட்டியே என்று குழப்பம் அடைய சுடர் எதையோ சொல்லி சமாளிக்கிறாள். அதன்பிறகு கனக வல்லிக்கு மாத்திரை கொடுத்துவிட்டு வெளியே வருகிறாள். இதையடுத்து இந்து சுடர் உருவத்தில் எழில் ரூமுக்குள் நுழைகிறாள். எழில் தூங்கிக் கொண்டிருக்க அவன் பக்கத்தில் உட்கார்ந்து பேசுகிறாள்.

உங்களோடு சேர்ந்து வாழணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன் ஆனால் அது ரொம்ப நாள் நினைக்காம போயிடுச்சு என்று பேசி ஃபீல் பண்ணுகிறாள். பிறகு எழில் பக்கத்தில் படுத்து அவன் மீது கை போட்டு கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சவால் விட்ட சௌந்தரபாண்டி.. அறிவாளுடன் கிளம்பிய சண்முகம்

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பாண்டியம்மா நகையுடன் இருக்கும் வீடியோவை காட்டி நகை திருடிய பழியை அவள் மீது தூக்கிப் போட்ட நிலையில் இன்று, சௌந்தரபாண்டி கொடுத்த ஆதாரத்தை வைத்து நீதிமன்றம் பாண்டியம்மாவிற்கு பத்தாண்டு சிறை தண்டனை என உத்தரவு போடுகிறது. சௌந்தரபாண்டி தப்பித்து விட்டதால் பரணி, சண்முகம் ஆகியோர் அதிர்ச்சி அடைகின்றனர்.

இதையடுத்து சௌந்தரபாண்டி இவர்கள் எதிரே வந்து உங்களால என்ன எதுவும் பண்ண முடியாது.. அந்த சூடாமணியும் வெளியே வர மாட்டா அப்படியே ஜெயிலுக்குள்ளே இருந்து செத்துப் போயிடுவா என்று சொல்ல சண்முகம் கோபப்பட்டு சட்டையை பிடிக்க இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது.

அதன் பிறகு வைகுண்டம் வீட்டில் எல்லோரும் சாப்பிடாமல் சோகமாக இருக்க பரணி என்ன நடந்தாலும் நீ அறிவாளை எடுக்கக் கூடாது என்று சண்முகத்துக்கு அறிவுரை சொல்கிறாள். இருந்தாலும் அம்மாவை வெளியே கொண்டு வர முடியாத வருத்தத்தில் சண்முகம் உடைந்து போகிறான். அதேபோல் மறுபக்கம் தூக்கம் வராமல் தவிக்கும் சௌந்தரபாண்டி எல்லா பதவியும் கைய விட்டுப் போயிடுச்சு.. கூடவே இந்த அக்கா மேலயே பழியை போட்டு ஜெயிலுக்கு அனுப்பிட்டேன்.

நாளைக்கு காலைல உயிரோடு இருப்பனானுகூட தெரியல என்று மனம் நொந்து புலம்புகிறார். அடுத்ததாக வைகுண்டம் சூடாமணி வெளியே எடுக்க முடியலையே என்று வருத்தப்பட்டு கண்ணீர் விட்டு கலங்க இதை பார்த்த சண்முகம் கோபமாகி அறிவாளை எடுத்துக் கொண்டே சௌந்தரபாண்டி வீட்டை நோக்கி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கார்த்திக்கை மிரட்டி டீல் பேசும் ரியா.. நடக்க போவது என்ன?

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா பரிகாரம் செய்ய தயாராகிய நிலையில் இன்று, ரியா என்கிட்ட ஒரு டைமண்ட் இருக்கு, மார்க்கெட்டில் எப்படியும் பல கோடிக்கு போகும் என்று சொல்ல ராஜேஸ்வரி வாயை பிளக்கிறாள். அதனை தொடர்ந்து ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் வெளியே செல்லும் போது குறி சொல்லும் பெண் ஒருவரை பார்க்கின்றனர்.

அவர் பக்கத்தில் சென்று உட்கார்ந்ததும் அந்த பெண் உங்க மனசுல எதோ ஒரு ஏக்கம் இருக்கு என்று சொன்னதும் இவர்கள் குறி கேட்க வந்திருப்பதாக சொல்கின்றனர். முதலில் ராஜேஸ்வரி இவ என் பொண்ணு, இவளோட மாமியார் ஹாஸ்பிடலில் இருப்பாங்க, எப்போ சாவாங்க என்று கேட்க அந்த பெண் அடுத்த அமாவாசைக்கும் செத்து போய்டுவாங்க என்று சொல்கிறாள். 

அடுத்து ஐஸ்வர்யா, வீட்டு கொத்து சாவி எப்போ என்னுடைய கைக்கு கிடைக்கும் என்று கேட்க அது கண்டிப்பா உன் கைக்கு கிடைக்கும், ஆனால் அதுக்கு நீ கொஞ்சம் கஷ்டப்படணும். சுடுகாட்டில் ஒரு பூஜை செய்யணும், அப்படி செய்தா உன் மாமியார் செத்து போய்டுவாங்க, அதன் பிறகு ஆயுத பூஜை ஒன்னு செய்யணும், அதன் பிறகு கொத்து சாவி உன் கைக்கு வரும் என்று சொன்னதும் இருவரும் சந்தோசப்படுகின்றனர். அந்த குறி சொல்லும் பெண்மணியும் இவர்களிடம் இருந்து பணத்தை கறக்கிறாள்.

இதையடுத்து ரம்யா கோவிலுக்கு வர அங்கு தீபா இல்லாததால் இவ எங்க போனா? இவளை போட்டு தள்ள பிளான் போட்டது நடக்குமா? நடக்காதா? என்று புலம்புகிறாள். மறுபக்கம் கார்த்திக் ஹாஸ்பிடலுக்கு வர செகண்ட் ஒப்பீனியன் கேட்க போய் இருந்தியே என்ன ஆச்சு என்று கேட்க எல்லாரும் இதையே தான் சொல்றாங்க என்று வருத்தப்படுகிறான்.

அடுத்து ரியா சுரேஷ் போனில் இருந்து போன் செய்து ஆனந்திடம் சமாதானம் பேச ஆனந்த் நீ சரண்டர் ஆகி தான் ஆகணும் என்று சொல்ல ரியா நான் சரண்டர் ஆகிடுறேன். ஆனால் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கணும். நான் அந்த வீட்டு மருமகளாக வாழனும் என்று சொல்ல ஆனந்த் முடியாது என்று மறுக்கிறான்.

அதன்பிறகு கார்த்திக்கிடம் போனை கொடுக்க சொல்லி என்னுடைய டீலுக்கு ஓகே சொல்லலைனா உன் பொண்டாட்டியை தூக்கிடுவேன் என்று மிரட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment