Advertisment

மாமியாருக்கு விழுந்த கத்தி குத்து: மருமகன் ஜெயிலுக்கு போவாரா? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Zee tam

அண்ணா கார்த்திகை தீபம் நினைத்தேன் வந்தாய்

பற்றி எறிந்த மனோகரி போட்டோ.. எழிலிடம் சண்டைக்கு போன சுடர்

Advertisment

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் நான்கு குழந்தையுடன் ஸ்கூலுக்கு சென்று கொண்டிருக்க அஞ்சலி நீயே எங்களுக்கு அம்மாவாக வந்துடு என்று சொல்லிய நிலையில் இன்று, அஞ்சலி சுடரே எங்களுக்கு அம்மாவா வரணும், அப்பாவுக்கும் மனோகரிக்கும் கல்யாணம் நடக்க கூடாது என்று வேண்டுகிறாள்.

மறுபக்கம் வீட்டில் பத்திரிக்கை அடிக்க சாமியார் எழுதி கொடுத்த பத்திரிக்கை, போட்டோ ஆகியற்றை பூஜையறையில் வைத்திருக்கும் நிலையில் காற்றில் மனோகரின் போட்டோ பறந்து விளக்கில் பட்டு எரிந்து நாசமாகிறது, சுடர் தன்னுடைய போட்டோ மற்றும் விசாவை வைத்திருக்கும் நிலையில் அந்த போட்டோ அப்படியே இடம் மாறி விடுகிறது.

இதையடுத்து எழில் அனுப்பிய நபர் வீட்டிற்கு வந்து ஐயா பத்திரிக்கை அடிக்க சாமியார் கொடுத்த போட்டோ, பத்திரிக்கை ஆகியவற்றை வாங்கிட்டு வர சொன்னதாக சொல்லி கனகவல்லி பத்திரிக்கை எழுதிய பேப்பரையும் போட்டோவையும் கொடுத்து அனுப்புகிறாள். அடுத்து ஸ்கூலில் இருந்து நேராக எழில் ஹாஸ்பிடலுக்கு வரும் சுடர் எழிலிடம் உங்க 4 பசங்களுக்கும் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்ல, உங்களுக்கு இந்த கல்யாணம் தேவையா என்றுகேட்கிறாள்.

ஒரு நன்றி கடனுக்காவது நான் மனோகரியை கல்யாணம் செய்து கொள்ளணும் என்று தனது முடிவில் எழில் உறுதியாக இருப்பதால் சுடர் வருத்தமாக வீட்டிற்கு வருகிறாள், வீட்டிற்கு வந்ததும் அவளது அப்பா போன் செய்து அந்த ஹாஸ்டல் வார்டன் சாரதா கிடைச்சிட்டாங்க, அவங்களுக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட் நடந்து ஹாஸ்பிடலில் இருக்காங்களாம் என்று சொல்ல சுடர் சந்தோசப்படுகிறாள்.

இதை ஒட்டு கேட்கும் மனோகரிக்கு தகவல் கொடுக்க அந்த ரவுடி ஹாஸ்பிடல் கிளம்பி வருகிறான். அதே போல் சுடர் அப்பாவும் ஹாஸ்பிடலுக்கு வர முன்னாடியே வரும் ரவுடி அந்த சாரதாவை வேறொரு பெட்டிற்கு மாற்றி விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சண்முகத்தால் நடந்த கத்திக்குத்து.. உயிருக்கு போராடும் பாக்கியம்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் சௌந்தரபாண்டியை குத்த செல்ல சூடாமணி இறந்து விட்டது போல் தகவல் பரவிய நிலையில் இன்று, சூடாமணி இறந்து போனதாக தகவல் பரவ பாண்டியம்மா என்னனமோ நிரூபிக்கணும்னு சொன்னா ஆனால் ஒண்ணுமே நடக்காமல் செத்து போய்ட்டா என்று சந்தோசப்பட சூடாமணி அலறி எழுந்து கொள்ள அது கனவு என்று தெரிய வருகிறது.

இதையடுத்து சூடாமணி நான் நிரூபிக்க வேண்டியது நிறைய இருக்கு அது எல்லாமே நடக்கணும். குறிப்பாக அந்த சௌந்தரபாண்டி தான் நகையை திருடியாதுனு நிரூபிக்கனும், 20 வருஷமா பிரிந்து இருக்கிற என் பிள்ளைகளோடு சேர்ந்து இருக்கனும் என்று வேண்டுகிறாள். அதன் பிறகு சண்முகம் ஆவேசமாக வந்து சௌந்தரபாண்டியை குத்த போக பரணி தடுக்க முயற்சி செய்ய ஒரு கட்டத்தில் பாக்கியம் குறுக்கே வந்து நிற்க சண்முகம் சௌந்தரபாண்டியை குத்த போய் கடைசியில் கத்தி பாக்கியத்தின் வயிற்றில் இறங்குகிறது.

இதனால் பரணி பதறி போக முத்துப்பாண்டி அம்மாவுக்கு கத்திக்குத்து நடந்ததும் இதுவரை காட்டாத பாசத்தை காட்டி குழந்தை போல் கலங்கி நிற்கிறான், உன்னை சாக விட மாட்டேன் மா என்று துடிதுடிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தீபாவை தேடும் கார்த்திக்கை திசை திருப்பிய ரம்யா.. அடுத்து நடக்க போவது என்ன?

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக், மாணிக்கம் என இருவரும் தீபாவை தேடி கிளம்பிய நிலையில் இன்று, கார்த்திக் கோவிலுக்கு வந்து தேட அங்கு அவனது நண்பன் இளையராஜாவை பார்க்க அவன் என்ன மாப்ள கோவிலுக்கு வந்திருக்க என்று கேட்க தீபா காணாமல் போன விஷயத்தை சொல்கிறான். பிறகு மூவரும் சேர்ந்து தேட தொடங்குகின்றனர். இதையடுத்து கார்த்திக் ரம்யாவுக்கு போன் செய்து தீபாவை பார்த்தீங்களா என்று விசாரிக்க அவள் இல்லை என்று பொய் சொல்கிறாள், மேலும் ரியா ஏன் தீபாவை கடத்தி இருக்க கூடாது, அந்த கோணத்தில் விசாரித்து பாருங்க என்று சொல்லி போனை வைக்கிறாள்.

உடனே ரம்யா ஆனந்திற்கு போன் செய்து தீபாவை ரியா கடத்தி இருக்க வாய்ப்பிருக்கு, அவ வேற உங்களுக்கு போன் செய்து தீபாவை கடத்துவேனு சொல்லி இருக்கா என்று சொல்ல ஆனந்திற்கும் சந்தேகம் வருகிறது. அதன் பிறகு ரம்யா ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்து ராஜேஸ்வரியிடம் பேச்சு கொடுத்து அப்படியே ரூமிற்குள் உள்ளே சென்று ரியாவை தேட அவள் பாத்ரூமுக்குள் ஒளிந்து கொள்கிறாள். பாத்ரூமில் ஒளிந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ரம்யா நெருங்கி வருகிறாள்.

அப்போது ரியா கரப்பான் பூச்சியை தூக்கி போட ரம்யா அதை பார்த்து பயந்து அங்கிருந்து நகர்ந்து வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment