Advertisment

தோழியை கொல்ல துணிந்த வில்லி: மருமகனை காப்பாற்றுவரா மாமியார்? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
zee tamil Serial

அண்ணா - கார்த்திகை தீபம் - நினைத்தேன் வந்தாய்

கார்த்திக்கு கிடைத்த அடுத்த குளு.. தீபாவால் பதறிய ரம்யா

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபாவை தேடி வரும் நிலையில் மறுபக்கம் பூஜைக்கான ஏற்பாடுகள் எல்லாம் தயார் நிலையில் இருக்க இன்று, ரம்யா நினைத்தபடியே தீபாவை அந்த டாப்புக்குள் உட்கார வைத்து ஆணியை அடித்து தள்ளிவிட தீபா உருண்டு செல்கிறாள், உடனே தீபா ரம்யாவை தட்டி என்ன கனவா என்று கேட்க ரம்யா கனவு என்பதை சுதாரித்து கொண்டு சமாளிக்கிறாள்.

இதையடுத்து மறுபக்கம் கார்த்திக் மற்றும் இளையராஜா என இருவரும் முனீஸ்வரன் கோவில் பூசாரி வீட்டிற்கு வந்து தீபா சொன்ன சாமியார் குறித்து விசாரிக்கின்றனர், சாமியாரா அப்படி யாரும் இல்லையே என்று சொல்லும் பூசாரி பரிகாரத்தை கேட்ட பிறகு ஆமாம் ஒருத்தன் சாமியார் வேடத்தில் இந்த பக்கம் சுத்திகிட்டு இருந்தான்.

அவன் காவி துணி எல்லாம் கூட போடல, வெள்ளை கலர் ட்ரெஸ் போட்டு தான் சுத்திகிட்டு இருந்தான் என்று சொல்லி முனீஸ்வரன் பிரசாதத்தை கொடுத்து அனுப்ப கார்த்திக், இளையராஜா தீபாவை தேடி அலைகின்றனர். மறுபக்கம் பரிகாரத்திற்கான ஏற்பாடுகளை செய்த போலி சாமியார் சீக்கிரம் வாங்க, இருட்டுவதற்குள் பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்ட சண்முகம்.. பாக்கியத்தின் பதிலால் நடந்தது என்ன?

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகத்தின் தங்கைகளும் வைகுண்டமும் சௌந்தரபாண்டி காலில் விழுந்து கெஞ்ச அவர் சண்முகத்தை காப்பாற்ற முடியாது என்று துரத்தி விட்ட நிலையில் இன்று, மீண்டும் பரணியிடம் கெஞ்ச அவள் சண்முகம் இனிமே அருவாள் எடுக்க மாட்டேன்னு சொல்ல சொல்லுங்க நான் அம்மாவிடம் பேசுறேன் என்று சொல்கிறாள், சண்முகம் என்னால் அப்படி சொல்ல முடியாது. என்ன நடந்தாலும் சரி அதை நான் பார்த்துகிறேன் என்று சொல்கிறான். 

இதையடுத்து கோர்ட்டுக்கு எல்லாரும் வந்து சேர்க்கின்றனர். பாக்கியத்தையும் அழைத்து வர அவள் சண்முகத்தை பார்க்க சண்முகம் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறான். எல்லாரும் பாக்கியம் சொல்ல போவது என்ன என்ற பதற்றத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக நீதிமன்றம் கூடுகிறது, சண்முகத்தையும் பாக்கியத்தையும் கூண்டில் ஏற்றி விசாரணையை தொடங்குகின்றனர்.

முதலில் பாக்கியத்திடம் நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சத்திய வாக்குமூலம் வாங்கி கொண்டு விசாரணையை தொடங்குகின்றனர். கத்தி குத்து சம்பவத்தில் நடந்தது என்ன என்று கேட்க, பாக்கியம் ஒவ்வொன்றாக விளக்கி சொல்கிறாள். இறுதியாக உங்களை கத்தியால் குத்தியது இந்த சண்முகம் தானே என்று கேட்க பாக்கியம் சண்முகமா? அவன் எப்படி என்னை குத்துவான்? என்னை குத்தியவன் பார்க்கறதுக்கு என் புருஷன் உருவ ஜாடையில் தான் இருந்தான் என்று சொல்ல சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு கோர்ட் சண்முகத்தை விடுதலை செய்து இந்த வழக்கை விசாரித்து குற்றவாளியை கண்டுபிடிக்க போலீசுக்கு உத்தரவிடுகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பத்திரிக்கையில் சுடர் போட்டோ.. ஆவேசமான மனோகரி, இந்து கொலை குறித்து உடையும் உண்மை

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடருக்கு எழில் மாப்பிள்ளையாக தெரிய அந்த விஷயத்தை இந்துவிடம் சொல்லிய நிலையில் இன்று, எழில், மனோகரி கல்யாணத்திற்காக அடிக்க கொடுத்து இருந்த பத்திரிக்கை வீட்டிற்கு வர அதை வாங்கிய கனகவல்லி ராமையாவை கூப்பிட்டு பத்திரிக்கையை கொடுத்து பூஜையறையில் வைக்க சொல்கிறாள். மேலும் ஒரு பத்திரிகையை கொண்டு போய் கோவிலில் வைத்து அர்ச்சனை செய்து வர சொல்கிறாள்.

ராமையா பத்திரிகையுடன் பூஜையறை நோக்கி செல்ல எதிரே வந்த செல்வி என்ன இது கேட்க ராமையா கல்யாண பத்திரிக்கை என்று சொன்னதும் ஓடி போய் மனோகரியிடம் விஷயத்தை சொல்கிறாள். மனோகரி மிகுந்த எதிர்பார்ப்போடு கல்யாண பத்திரிகையை எடுத்து பார்க்க அதில் அவளது போட்டோவுக்கு பதிலாக சுடர் போட்டோ பிரிண்ட்டாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இதனால் கோபமடையும் மனோகரி பத்திரிகையை கொண்டு வந்து சுடர் முகத்தில் வீசி எரிந்து என்ன பண்ணி வசிருக்க என்று கோபப்படுகிறாள்.

மறுபக்கம் ஒரு பத்திரிக்கையை கொண்டு வந்த ராமையா கோவிலில் வைத்து இந்த கல்யாணம் நடக்க கூடாது என்று வேண்டிக் கொள்ள அங்கு வந்த சித்தர் நீ நினைக்கிறது நடக்காது என்று சிரித்து கொண்டே செல்ல ராமையா குழப்பம் அடைகிறான். அதன் பிறகு மனோகரி டல்லாக இருப்பதை பார்த்த எழில் என்னாச்சு என்று கேட்க எனக்கு இந்த கல்யாணம் நடக்குமானு சந்தேகமாக இருப்பதாக சொல்ல எழில் கண்டிப்பா கல்யாணம் நடக்கும் என்று ஆறுதல் சொல்கிறான்.

அடுத்ததாக இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு வர ராமையா ஓடி வந்து எழிலை கீழே கூட்டி செல்ல அவர் உங்க மனைவி இந்து ஆக்சிடென்ட்டில் சாகல.. திட்டமிட்டு தான் கொலை செய்யப்பட்டு இருக்காங்க. அவங்கள கொன்னது இவன் தான் என்று போட்டோவை கொடுக்க எழில் இவனை என் கையால் கொல்லனும் என்று ஆவேசப்படுகிறான். மனோகரி இன்ஸ்பெக்டர் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள்.இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment