Advertisment

வெளிநாடு செல்லும் மனைவி: பெயிலில் வெளி வரும் அம்மா; ஹீரோ யார் பக்கம்? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
anna KD And Nv

நினைத்தேன் வந்தாய் - கார்த்திகை தீபம் - அண்ணா

போலீசால் வந்த ட்விஸ்ட்.. பரிகார பூஜையில் வந்த தடங்கல்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் போலி சாமியார் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்து ரம்யாவையும் தீபாவையும் சீக்கிரம் வர சொல்லி இருந்த நிலையில் இன்று, போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு போன் கால் வருகிறது. அந்த போனில் காட்டுக்குள் நடுவே இருக்கும் ஆற்று பகுதியில் கள்ள சாராயம் காய்ச்சப்படுவதாக சொல்லி தகவல் வர போலீஸ் அந்த இடத்திற்கு கிளம்பி செல்கின்றனர்.

போலீஸ்க்கு தகவல் கிடைத்தது போலவே ஒரு ட்ரம்மிற்கு பூஜை போட்டு இருப்பதை பார்த்த போலீஸ் கள்ள சாராயம் காய்ச்சுவதே தவறு, இதுல அதுக்கு பூஜை வேற என்று கோபப்பட போலீசை பார்த்த போலி சாமியார் ஒளிந்து கொள்ள சாராயம் காய்ச்சறவங்க இங்க எங்கயாவது பக்கத்தில் தான் இருக்கனும் தேடி கண்டு பிடிங்க என்று சொல்ல போலீஸ் லத்தியை தட்டி தட்டி தேட அது மறைந்திருந்த போலி சாமியார் மீது படுகிறது.

அடுத்து போலீஸ் அந்த பொருட்கள் எல்லாவறையும் பறிமுதல் செய்து கொண்டு செல்ல சாமியார் ரம்யாவுக்கு போன் செய்ய அவள் எடுக்காமல் இருக்க திரும்ப திரும்ப போன் அடிக்க காரில் இருந்து இறங்கிய அவள் அங்க தான் வந்திட்டு இருக்கோம் என்று கோபப்பட சாமியார் நடந்த விஷயங்களை சொல்ல ரம்யா அதிர்ச்சி அடைகிறாள்.

மேலும் போலி சாமியார் எல்லா பொருளையும் எடுத்துட்டு போய்ட்டாங்க, நாளைக்கு புதுசா செட்டப் செய்து தீபாவையும் போட்டு தள்ளிடலாம் என்று சொல்ல ரம்யா தீபாவிடம் டைம் ஆகிருச்சு என்பதால் சாமியார் நாளைக்கு பரிகார பூஜையை செய்து கொள்ளலாம் என்று சொல்வதாக சொல்கிறாள். ஆனால் தீபா அத்தையோட உயிரை காப்பாத்தணும் அதனால் இன்னைக்கே பரிகாரம் செய்து விடலாம் என்று அடம் பிடிக்கிறாள்.

ரம்யா சாமியாருக்கு போனை செய்து சமாளிக்க சொல்லி தீபாவிடம் போனை கொடுக்க அவர் இந்த பரிகாரத்தை காலை நேரத்தில் செய்யணும், இனிமே செய்தால் அது தீய பலனை தான் தரும், உங்க அத்தையோட உயிரை காப்பாற்ற நான் பூஜை பண்றேன். பரிகாரத்தை நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று சொல்ல தீபா யோசித்து ஓகே சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வெளியே வரும் சூடாமணி.. அமெரிக்கா கிளம்பும் பரணி, சண்முகத்துக்கு ஷாக் 

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பாக்கியத்தை கோர்ட்டில் மாற்றி சொல்லி சண்முகத்தை காப்பாற்றிய நிலையில் இன்று, வீட்டிற்கு கோபமாக வந்த சௌந்தரபாண்டி பாக்கியத்திடம் நான் உன்கிட்ட என்ன சொல்ல சொன்னேன்.. நீ என்ன சொல்லி இருக்க என்று ஆவேசப்படுகிறார். பாக்கியம் கோவில் நகை நம்ம வீட்டில் தான் இருந்தது, அதையும் நீங்களும் சனியனும் தான் திருடி இருக்கீங்க.. நீ தான் அதை இடமும் மாற்றி இருக்கீங்க என்று கோர்ட்டில் சொல்லி இருந்தா அதையும் சேர்த்து தான் சொல்லி இருப்பேன் என்று பேசி ஷாக் கொடுக்கிறாள். 

இங்கே சண்முகம் வீட்டில் அவனது தங்கைகள் பரணியிடம் நீ அத்தை கிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்ட.. ஆனால் அத்தையே அண்ணாவை காப்பாத்திட்டாங்க என்று பேசி கொண்டிருக்க இந்த விஷயம் பரணிக்கு ஏற்கனவே தெரியும் என்ற விஷயம் தெரிய வருகிறது. அடுத்து சூடாமணிக்கு மீண்டும் தான் இறந்து போவது போல் கனவு வர அவள் பதறி கொண்டிருக்க அங்கு வந்த பாண்டியம்மா நீ செத்து தான் டி போக போற.. உன்னால் எதுவுமே செய்ய முடியாது என்று சொல்ல இருவருக்கும் வாக்குவாதம் உருவாகிறது.

அதை தொடர்ந்து சூடாமணி ஜெயிலர் அம்மாவிடம் பரோல் கேட்க அவர் இதுவரைக்கும் நீங்க எதுவுமே கேட்டது இல்ல.. முதல் முறையா கேட்டு இருக்கீங்க. கண்டிப்பா பரோல் தரேன். அதுவும் துணைக்கு போலீஸ் யாரும் இல்லாமல் உங்களை அனுப்பறேன் என்று சொல்ல சூடாமணி சந்தோசம் அடைகிறாள். மறுபக்கம் சிவபாலன் பரணி கேட்ட சர்டிபிகேட்டுகளை எடுத்து கொடுத்து விட்டு வெளியே வருகிறான்.

அப்போது சண்முகத்தை பார்க்க சிவபாலன் அக்கா சர்டிபிகேட் கேட்டா அதை கொடுக்க வந்ததாக சொல்ல பரணி அமெரிக்கா போக போகும் விஷயத்தை சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மனோகரியுடன் சேர்ந்து மாட்டும் ரவுடி? உச்சகட்ட ஆக்ரோஷத்தில் எழில் 

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு வந்து இந்துவை திட்டமிட்டு தான் கொலை செய்து இருக்காங்க என்று ரவுடியின் போட்டோவை காட்டிய நிலையில் இன்று, எழில் இதுவரைக்கும் டாக்டராக எவ்வளவோ பேரை காப்பாற்றி இருக்கேன், ஆனால் இவனை என் கையால் தான் கொல்லனும் என்று ஆவேசப்படுகிறான். போலீஸ் இன்னும் 1 வாரத்தில் அவனை பிடித்து ஒப்படைகிறோம் என்று சொல்கிறார்.

இதையடுத்து எழில் இந்துவை நினைத்து வருத்தமாக இருக்க அங்கு வந்த சுடர் கவலைப்படாதீங்க சார் என்று ஆறுதல் சொல்கிறாள். மறுபக்கம் மனோகரி போலீஸ் போட்டோவை காட்டிய ரவுடிக்கு போன் போட்டு போலீசுக்கு நீ தான் கொலை பண்ணது என்ற உண்மை தெரிந்து போச்சு.. நீ ஊரை விட்டு போய்ட்டு என்று சொல்கிறாள். அடுத்ததாக எழில் தூங்கி கொண்டிருக்கும் நான்கு குழந்தைகளின் முகத்தை பார்த்து உங்களுக்காக தான் நான் என் கோபத்தை அடக்கிட்டு இருக்கேன், உங்களுக்காக எப்பவும் நான் இருப்பேன் என்று பேசுகிறான்.

பிறகு ரவுடி தொடர்ந்து மனோகரிக்கு போன் செய்ய அவள் போனை எடுக்காமல் இருக்கிறாள். ஒரு கட்டத்தில் ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வந்த ரவுடி மனோகரியை சந்தித்து பேசி கொண்டிருக்கும் போது எழில் ரவுடியின் முகத்தை பார்த்து அவனை நெருங்கி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment