கனகவல்லி சொன்ன வார்த்தை.. எழிலால் வருத்தத்தில் சுடர் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்
நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் குழந்தைகள் சுடரை புரிந்து கொள்ளாமல் சத்தமிட்ட நிலையில் இன்று, சுடர் இந்துவிடம் வருத்தப்பட்டு பேச இந்து எல்லாம் கூடிய சீக்கிரம் மாறும், இந்த வாழ்கை உனக்கு பிடிச்ச மாதிரி ஆகும் என்று சொல்கிறாள். அடுத்து சுடர் கோவிலுக்கு ரெடியாகி கனகவல்லியை கோவிலுக்கு அழைக்க அவள் உடம்பு முடியாததால் வரவில்லை என்று சொல்கிறாள்.
அடுத்து எழில் கீழே இறங்கி வர கனகவல்லி பூஜையறையில் இருந்து குங்குமத்தை எடுத்து வந்து சுடருக்கு வைத்து விட சொல்ல எழில் முடியாது என்று மறுக்க கனகவல்லி வச்சி தான் ஆகணும் என்று உறுதியாக இருக்க எழில் வேண்டா வெறுப்பாக குங்குமம் வைத்து விடுகிறான். அடுத்து போகும் போது சுடரை கோவிலில் இறக்கி விட்டு போக சொல்ல எழில் மறுக்க முடியாமல் அழைத்து செல்கிறான்.
காரில் போகும் போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது. ஹாஸ்பிடலில் டாக்டர்கள் எழிலை பார்க்க வந்து ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருப்பதாவும் நீங்க சுடருடன் வந்து மேடை ஏறி பேச வேண்டும் என்று அழைப்பு கொடுக்க எழில் மறுக்க முடியாமல் சம்மதம் சொல்கிறான். இந்த பக்கம் சுடரின் அப்பா சுடருக்கு போன் செய்து அவளை பார்க்க வருவதாக சொல்ல சுடர் இந்த விஷயத்தை கனகவல்லியிடம் சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வீரா கொடுத்த வாக்கு.. போட்டிக்களத்தில் மாறன், ராமச்சந்திரனின் கௌரவம் காப்பாற்றப்பட்டதா? வீரா சண்டே ஸ்பெஷல் எபிசோட் அப்டேட்
வீரா சீரியலின் சண்டே ஸ்பெஷல் எபிசோட் வரும் அக்டோபர் 6-ம் தேதி மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த சண்டே ஸ்பெஷல் எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, ராஜாவின் தங்கை ப்ரியாவை கல்யாணத்திற்காக ராமசந்திரன் குடும்பம் மொத்தமும் சொந்த ஊருக்கு வந்திருக்க ராஜாவின் குடும்பம் மாறன் வீராவை ஆரத்தி எடுத்து அமோக வரவேற்பு கொடுத்து உபசரிக்கின்றனர்.
அடுத்து ப்ரியா அண்ணன்களை அழைத்து கொண்டு ஊரை சுற்றி காட்ட கிளம்புகிறாள். அடுத்து இரண்டு ஊருக்கும் இடையே இருக்கும் பிரச்சனை, மல்யுத்த போட்டி ஆகியவை பற்றி தெரிய வருகிறது. இந்த மல்யுத்த போட்டியில் ராஜாவின் ஊர் ஜெயித்து மானத்தை காப்பாற்றிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்த சமயத்தில் போட்டி நடக்கும் இடத்தில வீரா விளையாட்டாக மாறனை பிடித்து உள்ளே தள்ளி விட மாறன் மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. முதலில் மாறன் சரமாரியாக அடிவாங்க ராமசந்திரன் இவனால் ஊர் மானமே போய்டும் போல.. அவன் ஜெயித்தா தான் வீட்டிற்கு வரணும் என்று சொல்லி விட மாறன் முழுவீச்சில் விளையாடி கோப்பையை கை பற்றுகிறான்.
அதை தொடர்ந்து பிரியாவுக்கும் பிரச்சனையில் இருக்கும் ஊர் தலைவர் பையன் சந்தோஷுக்கும் இடையேயான காதல் விஷயம் மாறன், வீராவுக்கு தெரிய வர வீரா இருவரையும் சேர்த்து வைப்பதாக வாக்கு கொடுக்கிறாள். அதன் பிறகு நடந்தது என்ன? மாறன் வீரா கொடுத்த வாக்கு என்னாவது? ஊர் பிரச்சனை முடிவுக்கு வந்ததா? இல்லையா? என்ற கோணத்தில் வீரா சண்டே ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“