ஒளிபரப்பு நேரம்... கூடவே ஹீரோயினும் மாற்றம் : ஜீ தமிழ் சீரியலின் முக்கிய அப்டேட்

முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்களை ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில், ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று சந்தியா ராகம்.

முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்களை ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில், ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று சந்தியா ராகம்.

author-image
WebDesk
New Update
Santhiya ragam

சந்தியா ராகம் சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஜீ தமிழின் சந்தியா ராகம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சமீபத்தில் இந்த சீரியல் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது சீரியல் நாயகியும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்களை ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில், ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று சந்தியா ராகம். இந்தியில் வெளியான, சொப்னோ சுஹானி லடக்பென் கே என்ற சீரியலின் ரீமேக்காக தயாராகியுள்ள இந்த சீரியல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இரவு 7 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ராஜீவ் பரமேஷ்வர், சந்தியா ஜகர்லம்முடி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில், தனலட்சுமி என்ற கேரக்டரில் வி.ஜே தாரா நடித்து வந்தார். தற்போது சந்தியா ராகம் சீரியல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூடவே நடிகையின் மாற்றம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தனலட்சுமி கேரகடரில் நடித்து வந்த நடிகை வி.ஜே.தாரா மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக பாவனா லஸ்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக வி.ஜே தாரா சீரியலில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. நேர மாற்றத்துடன் சீரியலில் முக்கிய கேரக்டரின் மாற்றம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zee Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: