அவமானப்பட்ட ராமசந்திரன்.. உண்மையை உடைத்த மாறன், வீரா கொடுத்த ஷாக்
வீரா சீரியலின் நேற்றைய எபிசோடில் வீராவுக்கு பார்த்த மாப்பிள்ளை வீட்டில் ராமச்சந்திரனை அவமானப்படுத்தி அனுப்பிய நிலையில், இன்று ராகவன் மாறனுக்கு போன் செய்து நடந்த விஷயங்களை சொல்ல மாறன் நீங்க எங்க இருக்கீங்க, நான் வரேன் என்று ஆத்திரப்பட ராகவன் அதெல்லாம் வர வேண்டாம், அப்பா இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்கணும்னு நினைக்கிறாரு என்று சொல்கிறான்.
அதன் பிறகு மாறன் இந்த விஷயம் குறித்து வீராவிடம் பேசுவதாக சொல்லி போனை வைத்து கடைக்கு வர வீரா மற்ற பெண்களுடன் சாப்பிட்டு கொண்டிருக்க பேச முடியாமல் நிற்கிறான். வீராவுக்கு நிற்காமல் விக்கல் வர உங்களை யாரோ நினைக்கிறாங்க என்று கலாய்க்க, மாறன் நான் தான் கேப் விடாமல் நினைச்சிட்டு இருக்கேன் என்று மைண்ட் வாய்ஸில் பேசி கொள்கிறான்.
அடுத்ததாக ராமசந்திரன் போன் செய்ய மாறன் யார் என்று கேட்டு பிறகு அப்பா குரலை கண்டுபிடித்து பேச அவர் வீராவை வீட்டிற்கு அழைத்து வர சொல்கிறார். மாறன் வீராவை கூப்பிட அவள் பைக்கில் வர மாட்டேன் என்று ஆட்டோவில் வர மாறன் பின்தொடர்ந்து வருகிறான். பிறகு ராமசந்திரன் கல்யாணம் வரைக்கும் வேலைக்கு வர வேண்டாம், ஆட்டோ ஓட்ட வேண்டாம் என்று சொல்ல வீரா மறுப்பு சொல்ல முடியாமல் ஓகே சொல்ல ராமசந்திரன் கண்மணியை பார்த்து ஓகே தானே என்று கேட்க வீரா அவளை முறைக்கிறாள்.
அதன் பிறகு வீராவை வீட்டில் விட்டு வர சொல்ல மாறன் அவளை கூட்டி வரும் போது வழியில் வண்டியை நிறுத்தி மாப்பிள்ளை வீட்டில் வரதட்சணை கேட்பதாக விஷயத்தை சொல்லி நீயே ஒரு முடிவு எடு என்று சொல்ல, வீரா அவன் சொல்வதை நம்பாமல் ராமசந்திரன் சாருக்கு போனை போட்டு அவரை சொல்ல சொல்லு, இல்ல ராகவனுக்கு போனை போடு என்று சொல்ல மாறன் இரண்டும் செய்ய முடியாமல் நிற்கிறான்.
வீரா இந்த கல்யாணத்தை நிறுத்திட்டு உன்னை கட்டிக்கணும் அதானே உன்னுடைய பிளான் என்று கேட்க மாறன் அப்படி இல்ல என்று சொல்லியும் நம்ப மறுக்கிறாள். வீட்டிற்கு வந்தவள் அம்மாவிடம் ராமசந்திரன் வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லி விட்டதை பற்றி பேசி வருத்தப்பட்டு கண் கலங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சீனுவை உசுப்பேத்தி விட்ட மணி.. மாயா விஷயத்தில் எடுக்க போகும் முடிவு என்ன?
சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் புவனேஸ்வரி மற்றும் பசுபதி ஆகியோர் ஒன்று சேர்ந்து சீனுவுக்கும் மாயாவுக்கும் கல்யாணம் செய்து வைக்க சொல்லி ஏற்றி விட்ட நிலையில் இன்று, மணிவண்ணன் காத்து கொண்டிருக்க மாயா எதிரே வர சீனு இன்னொரு பக்கம் வருகிறான். இதை பார்த்த மணி மாயாவிடம் அவளது அம்மா பற்றி பேசி வருத்தப்பட வைக்க மாயா கண் கலங்குகிறாள்.
உடனே மணி அழாத மா. உனக்கு மாமா நான் இருக்கேன் என்று ஆறுதல் சொல்கிறான். இதை கவனித்த சீனு அப்பாவிடம் வந்து எதுக்கு மாயா அழுவுற என்று கேட்க உன்னை நினைச்சி தான், அவ உன்னை ரொம்ப காதலிக்கிறா என்று சொல்ல சீனு அவ தானே எதுவும் வேணாம்னு சொன்னா என்று கேட்க அவ பொண்ணு டா.. பையன் நீ தான் ரிஸ்க் எடுக்கணும் என்று சொல்கிறார்.
அதன் பிறகு ஜானகி மாயாவை பாராட்டி உனக்கு திருஷ்டி சுத்தி போடணும் என்று சொல்ல தனம் மாயாவுக்கு தான் அவ ஆசைப்பட்ட மாதிரி வாழ்க்கை அமையல என்று வருத்தப்பட ஜானகியும் சோகமாக மாயா அவர்களுக்கு கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க வைத்து அவர்கள் வெளியேறியதும் வருத்தப்படுகிறாள்.
அதனை தொடர்ந்து சீனு யோசனையில் இருக்க மணிவண்ணன் என்னடா மகனே யோசனையில் இருக்க என்று கேட்க மாயாவை பத்தி தான் என்று சொல்கிறான். இப்போ என்ன பண்றது என்று பேச ஆரம்பிக்கும் மணி நான் சரியான நேரமா பார்த்து சொல்றேன் நீ வீட்டை விட்டு ஓடி போய்ட்டு என்று ஐடியா கொடுக்கிறார். அடுத்து மாயாவும் தனமும் காலேஜ் கேம்ப் விஷயமா வெளியே போகணும் என்று சொல்ல எல்லாரும் நோ சொல்ல ரமணி போயிட்டு வர சொல்ல அனைவரும் ஷாக்காகின்றனர்.
பந்தக்கால் நட போறோம். அந்த நேரத்துல மாயா இல்லாமல் இருக்கிறது நல்லது தான் என்று சொல்லி காயப்படுத்துகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.