Advertisment

மாமியாரை கடத்தும் மருமகள்... அம்மாவை காப்பாற்றுவாரா நாயகன்? ஜீ தமிழ் சீரியலில் சனி, ஞாயிறு எபிசோடுகள்

ஜீ தமிழில் அண்ணா, கார்த்திகை தீபம், மற்றும் சந்தியா ராகம் ஆகிய சீரியல்களின் சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகள் குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
zee tamil serial 223

ஜீ தமிழ் சீரியல்கள்

சௌந்தரபாண்டியை கிழித்தெடுத்த பரணி.. கனியால் கண்ணீர் விடும் சண்முகம் - அண்ணா சீரியல் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட்

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் உடன்குடி சொன்னதை கேட்டு லாட்ஜில் தங்கியிருக்கும் மீனாட்சி குடும்பத்தை பார்க்க கிளம்ப இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, இங்கே சௌந்தரபாண்டி மீனாட்சியை சந்தித்து கேஸ் போட்டு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து கனி உங்க பொண்ணு தான் என்பதை நிரூபித்து கூட்டி போங்க, ஆனால் உங்க பொண்ணை உஷாரா பார்த்துக்கோங்க என்று பேசி கொண்டிருக்க ஓடோடி வரும் சனியன் சண்முகம் வரும் விஷயத்தை சொல்ல சௌந்தரபாண்டியும் சனியனும் மறைந்து கொள்கின்றனர்.

இதனையடுத்து பரணி மீனாட்சியை சந்தித்து இங்க இருக்காதீங்க, கனியை பார்க்க வராதீங்க என்று பேச, நான் என் பொண்ணு இல்லாமல் ஊருக்கு போக மாட்டேன் என்று மீனாட்சி சொல்ல, பரணி இதையெல்லாம் யார் உங்கள பண்ண சொல்றாரு எனக்கு நல்லாவே தெரியும், எங்க அப்பா சௌந்தரபாண்டி தான் சண்முகத்தின் மீது இருக்கும் பகையில் இப்படி பண்ணிட்டு இருக்காரு என்று கிழித்தெடுக்க இதை பார்த்து சனியன் சிரிக்க சௌந்தரபாண்டி அவரை அடி வெளுத்தெடுக்கிறார்.

அடுத்து பரணி கனி உங்க கூட வரமாட்டா என்று சொல்ல மீனாட்சி தன்னுடைய தாய் பாசத்தை சொல்லி புரிய வைக்க, பரணி 13 வருஷமாக வளர்த்த சண்முகத்தை நினைத்து பாருங்க. அவளுக்கு எல்லாமே அவ அண்ணன் சண்முகம் தான் என்று சொல்லி அங்கிருந்து கிளம்புகிறாள். பிறகு மீனாட்சி நைட் நேரத்தில் சண்முகம் வீட்டருகே வந்து கனிக்கு பாடிய தாலாட்டு பாடலை பாட தூக்கத்தில் இருந்த கனி அந்த பாட்டை கேட்டு எழுந்து கொள்கிறாள்.

மறுநாள் கனி அதே பாட்டை முணுமுணுக்க அதை பார்த்து சண்முகம் அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறான். பரணி கனியை தனியாக அழைத்து சென்று இந்த பாட்டை எதுக்கு பாடுற? இதை பாடத என்று எடுத்து சொல்ல கனி எனக்கு என்னமோ அந்த பாட்டை பாடணும் போல் இருக்கு, அந்த பாட்டை எங்கயோ எப்பயோ கேட்ட மாதிரியே இருக்கு என்று சொல்கிறாள். பரணி இந்த பாட்டை பாடாத என்று சொல்லி புரிய வைத்து வெளியே வர இவர்கள் பேசியதை சண்முகம் கேட்ட வருத்தப்பட்டு நிற்கிறான்.

ரூமுக்குள் இருக்கும் கனி மீண்டும் இதே பாட்டை பாட வைகுண்டம் கோபமாக உள்ளே போக சண்முகம் தடுத்து நிறுத்தி அவளுக்குள்ளவே அந்த பாட்டு இருக்கு, அவள் மேல எந்த தப்பும் இல்ல. எதுவும் சொல்ல வேண்டாம் விட்டுடுங்க என்று சொல்கிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. கார்த்திக் தெரிய வரும் விஷயம், தீபா கையில் சிக்கிய ஐஸ்வர்யா போன் - கார்த்திகை தீபம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமியின் கிட்னிக்கு டீலிங் நடந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, தீபா ஐஸ்வர்யா இல்லாத நேரமாக அவளது ரூமுக்குள் நுழைந்து போனை எடுத்து ஆராய நார்மல் கால் லிஸ்டில் புது நம்பர் எதுவும் இல்லாமல் இருக்க வாட்ஸப் கால் சென்று பார்க்க புது நம்பர் இருக்கிறது. அந்த நம்பருக்கு கால் பண்ணும் பொது ஐஸ்வர்யா வந்து போனை பிடிங்கி தீபாவை வெளியே துரத்தி விடுகிறாள்.

அடுத்து அபிராமி ஹாஸ்பிடலில் இருக்க ரவுடி அவரை தேடி அலைகிறான், ஒரு கட்டத்தில் அபிராமியை ஹாஸ்பிடலில் சேர்த்த டிரைவரின் போன் நம்பரை கண்டு பிடித்து அபிராமி என்னுடைய அம்மா தான், எந்த ஹாஸ்பிடலில் சேர்த்தீங்க என்று கேட்டு தெரிந்து கொண்டு ஹாஸ்பிடல் வந்து பார்க்கிறான், அங்கு அபிராமி இருக்க நைட்டோடு நைட்டாக கடத்த பிளான் போடுகிறான்.

இதனையடுத்து ஆட்டோ ட்ரைவர் வீட்டிற்கு வர ராணி டல்லாக இருக்க என்னாச்சு என்று கேட்க கார்த்திக் சாரோட அம்மாவை காணோம் என்ற விஷயத்தை சொல்கிறார், இவர் சீக்கிரம் கிடைச்சிடுவாங்க என்று சொல்லி வெளியே கிளம்பும் போது நானும் ஒருத்தருக்கு அடிபட்டு ஹாஸ்பிடலில் சேர்த்தேன், பெரிய வீட்டு பெண்மணி போல இருந்தாங்க. நீ அவங்க போட்டோவை காட்டு என்று கேக்க ராணியும் காட்ட அது அபிராமி தான் என்ற உண்மை தெரிய வருகிறது.

உடனே இவர்கள் இந்த விஷயத்தை சொல்ல கார்த்திக் வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர், ஐஸ்வர்யா ரவுடி மணிக்கு போன் போட்டு அபிராமி குறித்து விசாரிக்க அவன் இருக்கும் இடம் தெரிந்து போச்சு, நைட்டோட நைட்டா தூக்கிடுறோம் என்று சொல்கிறான். இவர்கள் வெளியே நின்று பேசி கொண்டிருக்கும் நேரத்தில் ராணியும் அவளது கணவரும் வர தடுத்து நிறுத்தி யார் என்னவென்று விசாரிக்க அபிராமி பற்றி சொல்கின்றனர்.

ஐஸ்வர்யா இவங்க கார்த்தியை பார்த்த பிரச்னையாகிடும் என்று அவர்களிடம் நல்லவள் போல் பேசி அனுப்பி வைக்க வழியில் தீபா இவர்களை பார்த்து விட தீபாவிடமும் எல்லா உண்மையையும் சொல்கின்றனர். தீபா அவர்களை வீட்டிற்கு கூட்டி வந்து கார்த்தியிடம் விஷயத்தை சொல்கிறாள். ராணி முதலில் இவங்க கிட்ட தான் விஷயத்தை சொன்னோம் என்று கை காட்ட அவர்களும் ஆமாம் அதனால் தான் ஹாஸ்பிடல் கிளம்பிட்டு இருக்கோம் என்று சமாளிக்கின்றனர்.

உடனே கார்த்திக் மற்றும் தீபா ஹாஸ்பிடல் கிளம்பி செல்கின்றனர். ரவுடிகளும் ஹாஸ்பிடல் நோக்கி வருகின்றனர், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காதலை சொன்ன தனா.. பளார் என விழுந்த அறை, எதிர்பாராத ட்விஸ்டுடன்  சந்தியா ராகம்

சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் சீனு மற்றும் மணிவண்ணன் பத்மாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டி வந்திருந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்

அதாவது, பத்மா இது கல்யாணம் நடக்கும் தானே உனக்கு சாருவை பிடித்து இருக்கு தானே என்று கேட்க சீனு கண்டிப்பா கல்யாணம் நடக்கும் நீங்க கவலைப்படாதீங்க என்று சொன்னது பத்மா நிம்மதியாகிறாள். 

அதன் பிறகு மாயா மற்றும் தானா என இருவரும் காலேஜ் வர கார்த்தியை பார்த்து குட்மார்னிங் சொல்லிவிட்டு நகர்ந்து செல்கின்றனர். பிறகு கார்த்திக் தனாவை கூப்பிட்டு இன்னைக்கி ஒரு முக்கியமான ப்ராக்டீஸ் சக்சன் இருக்கு நீ கண்டிப்பா கலந்துக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு பெண் ஓடிவந்து எதையோ சொல்ல வர கார்த்திக் என்ன ஆச்சு என்று கேட்க நீங்களே வந்து பாருங்க என்று சொல்ல கார்த்திக் தனா என இருவரும் ஓடிச்சென்று பார்க்கின்றனர்.

அங்கு சுவத்தில் கார்த்திக் தனா பெயரை சேர்த்து எழுதி வைத்திருக்க அதைப் பார்த்து எல்லோரும் அதிர்ச்சடைகின்றனர். எல்லோரும் அந்த தனா இவதான் என்று தனத்தை கை காட்ட அவள் உடைந்து போய் அழுது கொண்டு கிளாஸ் ரூமுக்கு ஓடுகிறாள். கார்த்திக் இதுக்கெல்லாம் காரணம் அந்த மூணு பொண்ணுங்கள தான் இருக்கும் என்று சொல்லி வர அவர்கள் இனிமேல் அந்த தனா போட்டியில் கலந்துக்க மாட்டார் என்று சிரித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

கார்த்திக் மோதுரதா இருந்தா நேரடியா மோதணும், இப்படி கோழை மாதிரி பண்ண கூடாது என பதிலடி கொடுக்கிறார். பிறகு தனத்தை பார்க்க வந்து இதுக்கெல்லாம் கவலை பட கூடாது நமக்குள்ள ஸ்டுடென்ட் கோச்சுத் தவிர வேற என்ன இருக்கு ஒன்னும் இல்ல என்று சொல்ல தனா ஒன்னும் இல்லையா கோச்? ஆனா என் மனசுல இருக்கு என்று ஐ லவ் யூ என்று சொன்னதும் கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான்.

மேலும் கோபத்தில் தனாவை அறைந்து இப்படியான எண்ணத்தோட என்கிட்ட பழகாத என சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment