Advertisment

மீண்டும் உயிருடன் மகா... முத்துப்பாண்டிக்கு சண்முகம் எச்சரிக்கை : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா - கார்த்திகை தீபம் - சீதாராமன் ஆகிய சீரியல்களின் இன்றைய எபிசோடு

author-image
WebDesk
New Update
Zee amma K

அண்ணா - கார்த்திகை தீபம் - சீதாராமன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தீபாவுக்காக ரவுடிகளிடம் மல்லு கட்டிய கார்த்திக்.. அவமானப்பட்ட அபிராமி

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா, ரூபஸ்ரீ, மாயா ஆகியோர் கூட்டு சேர்ந்து போஸ்டரை கிழிக்க ப்ளான் போட்டு இருந்த நிலையில் இன்று, ரவுடிகள் போஸ்டரை கிழித்து கொண்டிருக்க இளையராஜா இதை பார்த்து விடுகிறான். அதன் பிறகு அவன் ரவுடிகளிடம் எதுக்கு போஸ்டரை கிழிக்கறீங்க என்று கேட்க அவனையும் அடித்து விடுகின்றனர்.

உடனே இளையராஜா கார்த்திக்கு இந்த விஷயத்தை தெரியப்படுத்துகிறான். இதனால் கடுப்பாகும் கார்த்திக் ரவுடிகளிடம் சண்டை போடுகிறான். அபிராமிக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இதை வீடியோ எடுத்து அபிராமிக்கு அனுப்பி என்ன உன் பையன் இப்படி சண்டை போடுறான் என்று கேட்கிறாள்.

இதனால் அபிராமி இதை அவமானமாக நினைத்து அருணாசலத்திடம் கார்த்திக்கு எதுக்கு இந்த வேலை? ஏன் இப்படி பண்ணிட்டு இருக்கான் என சொல்லி வருத்தப்பட்டு தீபாவை திட்ட கண் கலங்குகிறாள். பிறகு கார்த்திக் மீண்டும் அனைத்து இடங்களிலும் போஸ்டரை ஒட்ட சொல்ல போஸ்டர் ஒட்டியவர்கள் வேறு இடத்தில் வேலை இருப்பதால் வர முடியாது என சொல்லி விடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உயிர் பிழைக்க பிளான் போடும் சௌந்தரபாண்டி.. சண்முகம் பதிலடி என்ன?

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி வீட்டுக்கு திரும்பி வர சண்முகம் சத்தியம் வாங்கிய நிலையில் இன்று, சண்முகம் பைக் நேராக செளந்தரபாண்டி வீட்டில் வந்து நிற்கிறது. இங்க எதுக்குடா வந்த என்கிறாள் பரணி.  அத்தை கிட்ட ஒரு தகவல் சொல்லிட்டு போகனும் என்கிறான் சண்முகம். உள்ளே செல்கின்றனர்.

பிறகு சண்முத்தை பார்த்ததும் செளந்தரபாண்டியன், முத்துபாண்டி, சனியன் மற்றும் பாண்டியம்மாள் மிரளுகின்றனர்.  அத்தே ஊ மகன் உயிரோட இருக்கனுன்னா ஒரு வாய்ப்பு தரேன், கவிதா சாவுக்கு நான் தான் காரணன்னு போலீஸ்ல சரண்டர் ஆகச்சொல்லு இல்லே நான் உயிருக்கு உத்திரவாதம் குடுக்க முடியாது என்று சொல்லிவிட்டு செல்கிறான்.

பிறகு பாண்டியம்மாளிடம் வந்து எல்லாத்துக்கும் காரணம் நீதான்னு தெரியும் நீயும் சரண்டர் ஆயிடு இல்லே சதையை சந்து சந்தா வெட்டுவேன் என்று சொல்லிவிட்டு செல்கிறான். பிறகு என்ன பண்ண போற என்கிறாள் பாண்டியம்மாள். ஒரு யோசனை இருக்கு என்கிறார் செளந்தரபாண்டி.  அப்பற கேஸ் நிக்காது, கவிதா குடும்பத்த மிரட்டிட்டே என்கிறான் முத்துபாண்டி. கவிதா குடும்பம் பயப்படும் சண்முகம் பயப்படுவானா என்கிறாள் பாண்டியம்மாள். அவனுக்கு பயமே இல்லை. பயம் அவன் ரத்தத்திலயே இல்ல என்கிறார் செளந்தரபாண்டி. என்னதா முடிவு என்கிறாள் பாண்டியம்மாள்.

இப்போதைக்கு உயிர் தப்பிக்கனும் பிறகு தான் எல்லாமே அதுக்கு ஒரே வழி பஞ்சாயத்த கூட்டி கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு இசக்கிகூட வாழ போறேன்னு சொல்ல வேண்டியது தான் என்று செளந்தரபாண்டி சொல்ல, முத்துபாண்டிக்கு கோபம் வருகிறது.  பாண்டியம்மா அவன் சொல்றதுதா சரி, நீ வாழ வேண்டாம், குடுக்குற இம்சையில அவளே ஓடிப்போவா, இல்ல தீத்துகட்டிட்டு ஆத்தா மாதிரி இவளும் ஓடிட்டான்னு சொல்லி கதைய முடிச்சிட்டு, ரத்னாவுக்கு தாலி கட்டு என்று பாண்டியம்மாள் சொல்ல, முத்துபாண்டி சம்மதிக்கிறான்.

விடிகாலை ஊர் பெரிய மனிதர்கள் இருவர் வருகின்றனர். சண்முகத்திடம் முன்னால் தலைவர் செளந்தரபாண்டியன் பஞ்சாயத்து கூட்டி இருப்பதாக சொல்ல, எதுக்கு பஞ்சாயத்து வர முடியாதுன்னு சொல்லுங்க என்கிறான் சண்முகம். நீங்க அப்படி சொல்லக்கூடாது. நீங்கதா புரசிடெண்ட், இப்படியே இழுத்துக்கிட்டு போனா நல்லா இல்லயே பேசி முடிச்சு விட்டா தானே நல்லது என்று சொல்கின்றனர்.

பரணி பஞ்சாயத்து ஏற்பாடு செய்யும்படி சொல்கிறாள். வரும்போது இசக்கியையும் அழைச்சிட்டு வாங்க என்று சொல்லி செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நான்சியாக என்ட்ரி கொடுத்த மகா.. எதிர்பாராத ட்விஸ்ட்டுடன் சீதாராமன்

சீதாராமன் சீரியலின் முந்தைய எபிசோட்டில் சீதா வக்கீல், ராம் என எல்லோரையும் நிற்க வைத்து தனக்காக வாதாடிய நிலையில் இன்று சீதாவின் விசாரணைக்குப் பிறகு நீதிபதி சீதா தான் கொலை செய்தார் என்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் அவரை விடுதலை செய்யலாம் என்று தீர்ப்பு வழங்க போகும் கடைசி நிமிடத்தில் ஒரு நிமிஷம் என மகா நான்சி என்ற பெயரில் என்ட்ரி கொடுக்கிறார்.

நான் மகாவின் உடன் பிறந்த தங்கை, என்னுடைய பெயர் நான்சி நான் ஒரு அட்வகேட் எனும் தன்னை அறிமுகம் செய்து கொள்ள சீதா உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மேலும் இனிமே என்னுடைய அக்கா கொலை கேஸை நானே இடத்தில் வாதாட போகிறேன் எனவும் அனுமதி கோருகிறார் நான்சி. அதன் பிறகு சீதா வீட்டுக்கு வர நான்சியும் வீட்டுக்கு வந்து மகாவின் சமாதிக்கு சென்று மலர் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு வீட்டிற்குள் வந்து எல்லோரிடமும் பேசுகிறாள். சீதா குறித்து கேட்டு தெரிந்து கொள்கிறாள்.

அதன் பிறகு வீட்டுக்கு வந்த அஞ்சலி, பிரியா, ஸ்வேதா ஆகியோர் நான்சியை சென்று சந்தித்து அப்படியே மகா சித்தி போலவே இருக்கீங்க உங்கள எப்படி கூப்பிடுறது என்று கேட்க என் பேரு நான்சி என்னை பேர் சொல்லி கூப்பிடுங்க என்று கூறுகிறாள்.   மறுபக்கம் இருவரும் சீதாவை சென்று நான்சியிடம் பேச சொல்ல சீதா முடியாது என மறுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment