Advertisment

இங்கு மனைவிக்கு விழா... அங்கு மனைவி மீது கொலைப்பழி : தங்கையை காப்பாற்றுவாரா அண்ணா?

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், சீதாராமன் ஆகிய சீரியல்களின் இன்றைய எபிசோடு

author-image
WebDesk
New Update
Karthika Anna

ஜீ தமிழ் சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தீபாவின் கச்சேரிக்கு அடுத்தடுத்து வரும் சிக்கல்.. மாஸ் காட்டிய கார்த்திக்

Advertisment

கார்த்திகை தீபம்  சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவளி கச்சேரியை தடுத்து நிறுத்த ரூபஸ்ரீ ஐஸ்வர்யா மற்றும் மாயா ஆகியோர் கூட்டு சேர்ந்து ஏதோ சதி திட்டம் தீட்டிய நிலையில் இன்று, நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்த சபாவின் மேனேஜர் உங்களுடைய பாட்டுக் கச்சேரியை இங்கு நடத்த முடியாது என சொல்கிறார்.

உடனே இளையராஜா மற்றும் கார்த்திக் சபாவிற்கு வந்து ஏன் நடக்க முடியாது என்ன விஷயம் என்று கேட்க பில்டிங் ரொம்ப மோசமான கண்டிஷனில் இருப்பதால் பாட்டு கச்சேரி நடக்கும்போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார். ஆனால் கார்த்திக் நம்ப மறுக்கிறான்.

இதனால் கார்த்திக் தன்னுடைய ஆபீஸில் வேலை செய்பவர்களை கூப்பிட்டு சபா முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவ ஐஸ்வர்யா அபிராமியிடம் காட்ட அபிராமி கார்த்திக் எதுக்கு இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கணும் என்று கடுப்பாகிறாள்.

உடனே போலீசும் அங்கு வந்துவிட கார்த்திக் நான் இங்க கச்சேரி நடத்துவதற்காக அட்வான்ஸ் எல்லாம் கொடுத்து புக் பண்ணி இருக்கேன் ஆனா கடைசி நிமிடத்தில் இங்கு கச்சேரி நடத்தக்கூடாதுன்னு சொல்றாங்க அத பத்தி நீங்களே கேளுங்க என்று ஆதாரங்களை கொடுக்க மேனேஜர் ஜெர்க் ஆகிறார். கார்த்திக் பில்டிங் எஞ்சினியரை வர சொல்லுங்க என்று கூப்பிட மேனேஜர் அதெல்லாம் வர சொல்ல முடியாது என்று சொல்கிறார்

சரி ஓனருக்கு போன் போடுங்க என்று சொல்ல அவர் கார்த்தி தனியாக கூட்டிச்சென்று நீங்க புக் பண்ண மாதிரி கச்சேரி நடத்துங்க பிரச்சனை வேண்டாம் என்று சொல்கிறார். மேலும் ரூபஸ்ரீக்கு ஃபோன் செய்து நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன் உங்களுடைய பிளான் ஒர்க் ஆகல, இங்கே கார்த்திக் சொன்ன மாதிரி கச்சேரி நடக்கும் என சொல்கிறார்.

மறுபக்கம் அபிராமி கார்த்தியை நினைத்து புலம்ப அருணாச்சலம் அவன் எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்காங்க தெரியல முழுசா உண்மை தெரிஞ்சதும் அது பத்தி பேசுவோம் என்று சொல்லி விடுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கூடிய பஞ்சாயத்து.. காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட முத்துப்பாண்டி, ண்முகம் முடிவு என்ன?

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ஊர் பெரியவர்கள் வந்து சௌந்தரபாண்டி பஞ்சாயத்தை கூட்ட சொல்லி இருப்பதாக சொல்ல சண்முகம் வர முடியாது என்று மறுக்க பரணி நீங்க ஏற்பாடு பண்ணுங்க என்று சொல்லி அனுப்பிய நிலையில் இன்று, ஊர் பெரியவர்கள் அடுத்து நேராக சௌந்தரபாண்டி வீட்டிற்கு வந்து சண்முகம் பஞ்சாயத்துக்கு வருவதாக சொல்லி விட்டதாக கூறுகின்றனர்.

முதலில் வர மாட்டேன்னு தான் சொன்னா. பரணி பாப்பா கூட்டி வருவதாக சொல்லி இருக்கு என்று சொல்ல இவர்கள் சந்தோசப்படுகின்றனர்.  அடுத்து சௌந்தரபாண்டி பாக்கியத்தை கூப்பிட்டு நீ தான் பேசணும், பேசி இந்த வீட்டிற்கு கூட்டி வரணும் என்று மைண்ட் வாஸ் செய்ய அவளும் ஒப்பு கொள்கிறாள். அதோடு முத்துபாண்டியிடம் பஞ்சாயத்தில் எல்லாரது காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கணும் என்று சொல்லி வைக்கின்றனர்.

இதனை தொடர்ந்து பஞ்சாயத்து கூட பாக்கியம் இசக்கியை தனது வீட்டிற்கு அனுப்பி வைக்க சொல்ல சண்முகம் முடியாது என்று மறுக்கிறான், முத்துப்பாண்டி ஊர் பெரிய மனுஷங்க காலில் விழுந்து தப்பு பண்ணிட்டேன் தான், என்னை மன்னிச்சிடுங்க, இசக்கியை நான் நல்லபடியா வச்சி வாழுறேன் என்று சொல்கிறான்.  ஊர் பெரியவர்கள் ஒரு பொண்ணுங்க ஒரு முறை தான் கல்யாணம் நடக்கும், அது இசக்கிக்கு நடந்து போச்சு.

அவனும் தப்பை உணர்ந்து நல்லா வச்சி பார்த்துக்கறதா சொல்றான், அனுப்பி வை பா என்று சொல்ல சண்முகம் அப்போதும் மறுப்பு தெரிவிக்க ஊர் பெரியவர்கள் இசக்கி முடிவை கேட்க சண்முகம் அவ என்ன சொல்லணும், நான் சொன்னது தான் அவளோட முடிவு என்று சொல்ல இசக்கி வாயால் சொல்லட்டும் என்று கூறுகின்றனர்.  இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நான்சிக்கு சவால் விட்ட சீதா.. கோபப்பட்ட ராம்

சீதா ராமன் சீரியலின் நேற்றைய எபிசோடில் நான்சி மகா வீட்டுக்கு வர எல்லோரும் சீதாவை நான்சியிடம் பேச சொல்ல அவள் நோ சொன்ன நிலையில் இன்று சீதா எல்லோரும் திரும்பத் திரும்ப சொன்ன காரணத்தினால் நான்சியிடம் பேச வருகிறாள். ஆனால் நான்சி நீ குற்றவாளி என்பது போல பேச சீதா ஒருவேளை இது மகாவா இருக்குமோ என சந்தேகப்படுகிறாள்.  மேலும் நான்சியிடம் மகாவை நான் கொல்லவில்லை என்னுடைய குழந்தை ஒரு கொலைகாரிக்கு பொறக்க கூடாது, நான் அப்படி பொறக்க விடவும் மாட்டேன்.

இந்த நிரபராதி சீதாவுக்கு தான் அந்த குழந்தை பிறக்கும் நான் தப்பு பண்ணலன்னு நிரூபித்து காட்டுகிறேன் என்று சவால் விடுகிறாள்.  அதன் பிறகு அர்ச்சனா கல்பனாவிடம் மகாவை கொன்னது நீ தானே என்று போனில் பேசிக் கொண்டிருக்க அங்கே நான்சி வந்துவிட அர்ச்சனா பதற்றம் அடைகிறார். நான் பேசுனது எதையும் கேட்கலல்ல என்று பதற நான்சி நான் எதுவும் கேட்கல காபி கேட்க தான் வந்தேன் என்று சொல்கிறாள்.

அர்ச்சனா திரும்பத் திரும்ப கேட்க போனில் இருந்த கல்பனா இவளே மாட்டி விட்டுடுவா போல என்று போனை வைத்து விடுகிறாள். அதன் பிறகு நான்சி சீதா குற்றவாளி என்பது போல பேசுகிறாள். சீதாவுக்கு நிச்சயமா தண்டனை கிடைக்கும் என்பது போல கூறுகிறார். அதைத்தொடர்ந்து ராம் மற்றும் சீதா ரூமுக்குள் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போதுஇவர்களுக்குள் மீண்டும் கோர்ட்டு பிரச்சனை குறித்த பேச்சு எழ ராம் கோபப்பட சீதா கோபித்துக் கொண்டு ஷோபாவில் வந்து படுத்து விடுகிறார். இதனால் ராம் சீதாவிடம் வந்து கெஞ்சுகிறான்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment