Advertisment

அண்ணனை கைவிட்ட தங்கை... வில்லி ப்ளானை முடித்த ஹீரோ : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
Zee tamil Serial news 1

ஜீ தமிழ் சீரியல்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

கார்த்தியை சிக்க வைக்க நடந்த சதி.. இன்கம் டேக்ஸ் ரைடில் சிக்கியது யார்?

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் வில்லிகளின் சதியை வீழ்த்தி கச்சேரி நடத்த ஏற்பட்ட தடையை உடைத்த நிலையில் இன்று கார்த்திக் ஆபிசில் இருக்கும் போது ரூபஸ்ரீ மற்றும் கோகிலா என இருவரும் உள்ளே வருகின்றனர். இவர்கள் வருவதை சிசிடிவி கேமராவில் பார்த்து விடும் கார்த்திக் அவர்களை உள்ளே விட சொல்கிறான், பிறகு உள்ளே வந்த இவர்கள் அப்படியே நல்லவர்கள் போல பேசி நடிக்கின்றனர்.

கார்த்திக் நீங்க தான் கச்சேரியை நடக்க விட கூடாதுனு பிளான் போட்டது என்று கேட்க நாங்க எதுக்கு அப்படி பண்ணனும் நாங்க இல்ல என்று சமாளிக்கின்றனர். பிறகு சரி தர்மலிங்கம் வீட்டிற்கு போய் ஏன் பணத்தை கேட்டீங்க என்று கேட்க, அவங்க கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டோம். கொடுத்துட்டாங்க என்று சொல்லி சமாளிக்கின்றனர்.

பிறகு ரூபாஸ்ரீ இங்கும் அங்கும் சுத்தி பாத்து விட்டு பாத்ரூம் எங்கே என்று கேட்டு உள்ளே சென்று கையில் எடுத்து வந்திருந்த பணப்பையை வைத்து வெளியே வந்து இன்கம் டேக்ஸ் டிபார்ட்மென்ட்டிற்கு தகவல் கொடுக்கின்றனர். அவர்கள் சோதனையிட கார்த்திக் ஆபிஸ்க்கு வருகின்றனர். வெளியே போன கோகிலா மற்றும் ரூபாஸ்ரீ மீண்டும் உள்ளே வருகின்றனர்.

ஆபிஸ் முழுவதும் பணத்தை தேட எங்கும் எதுவும் கிடைக்காத நிலையில் இவர்கள் பாத்ரூமில் தேடி பார்க்க சொல்ல பிறகு அங்கும் தேடி பார்க்கின்றனர், பிறகு நீங்க இங்க எல்லாம் வர கூடாது என்று ரூபாஸ்ரீ மற்றும் கோகிலாவை வெளியே துரத்தி விடுகின்றனர். எங்கும் பணம் கிடைக்கவில்லை தவறான தகவல் வந்ததாக சொல்லி வெளியே கிளம்புகின்றனர்.

பிறகு கார்த்திக் கோகிலா வீட்டிற்கு வந்து ஒரு கவரை கொடுத்து உங்க பணத்தை உங்க அக்கவுண்ட்லயே போட்டுட்டோம் என்று ஷாக் கொடுக்கிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

பஞ்சாயத்தில் ட்விஸ்ட் கொடுத்த இசக்கி.. கோபத்தில் ஷண்முகம் எடுத்த முடிவு

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பஞ்சாயத்தில் முத்துப்பாண்டி எல்லார் காலிலும் விழுந்து இசக்கியோட சேர்த்து வைக்க சொல்லி கேட்க சண்முகம் மறுத்த நிலையில் இன்று, ண்முகம் இசக்கியை அனுப்ப முடியாது என்று சொல்ல ஊர் பெரியவர்கள் அவன் தான் நல்லா பாத்துக்கறேன்னு சொல்றானே பா அனுப்பி வை என்று சொல்ல சண்முகம் தனது முடிவில் உறுதியாக இருக்கிறான்.

இதனால் ஊர் பெரியவர்கள் இசக்கியோட முடிவை சொல்லட்டும் என்று சொல்ல சண்முகம் அவ என்ன சொல்லணும் என்னுடைய முடிவு தான் அவளோட முடிவு என்று சொல்ல இசக்கி வாயால சொல்லட்டும் என்று பேசுகின்றனர். உடனே சண்முகம் இசக்கியிடம் அவ வேண்டான்னு சொல்லிட்டு தாலியை கழட்டி போட்டுட்டு வா புள்ள என்று சொல்ல இசக்கி நான் சேர்ந்து வாழறேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறாள்.

சண்முகம் குடும்பம் மொத்தமும் அதிர்ச்சியாக சௌந்தரபாண்டி சந்தோசப்படுகிறார், ண்முகம் இந்த அண்ணன் முக்கியமா? இல்ல அவன் முக்கியமா? அவன் தான் முக்கியம்னா இந்த துண்டை தாண்டி போ. அதுக்கப்புறம் உனக்கும் எனக்கும் எந்த ஒட்டும் உறவும் இருக்காது என்று சொல்ல இசக்கி துண்டை தாண்டி சென்று பேரதிர்ச்சி கொடுக்கிறாள்.

இசக்கி அண்ணனுக்காகவும் ரத்னாவின் வாழ்க்கைக்காகவும் எடுத்த முடிவை புரிந்து கொள்ளாத சண்முகம் இனிமே நீ இந்த வீட்டிற்க்கு வர கூடாது என்று அவளது துணிகளை எடுத்து வெளியே போட்டு கொளுத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? இசக்கி என்ன செய்ய போகிறாள் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீதா ராமன்:

அர்ச்சனாவுக்கு விழுந்த தர்மஅடி.. ராமுக்கு ஷாக் கொடுத்த ராஜசேகர் –

சீதா ராமன், சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா நான்சிக்கு நான் நிரபராதி என்று நிரூபித்து காட்டுவதாக சவால் விட்டிருந்த நிலையில் இன்று, சுபாஷ் ரவுடிக்கு போன் செய்து மகாவை கொன்றது பற்றி கேட்க அவன் நான் கொல்லவில்லை என்ற உண்மையை உடைக்க சுபாஷ் அர்ச்சனாவிடம் இதை பற்றி சொல்லி புலம்பும் போது மகாவை கொன்றது நானும் கல்பனாவும் தான் என்று சொல்ல முதலில் அதிர்ச்சியாகும் சுபாஷ் பிறகு சிப்பேர் என சந்தோசப்படுகிறான்.

அடுத்து நான்சியையும் விட கூடாது என்று அர்ச்சனா முகத்தை மறைத்து கொண்டு கட்டையால் தாக்க செல்ல இருட்டில் இதை பார்த்து பெண் ஒருவரும் பின்னாடியே செல்ல கடைசியில் சீதா இருட்டில் யார் என்று தெரியாமல் அர்ச்சனாவை கட்டையால் அடித்து விட எல்லாரும் கூடி விடுகின்றனர்.

ராம் சீதாவிடம் எதுக்கு நீ சித்தியை அடித்த என்று கேட்க அவள் இதையும் கொலை முயற்சியில் சேத்துடாதீங்க பாஸ், இவங்க எதுக்கு கட்டையோட செல்வி அக்கா ரூமுக்கு போனாங்கனு கேளுங்க என்று கோர்த்து விடுகிறாள். பிறகு அர்ச்சனாவும் சுபாஷும் நான்சியை பார்த்து பேச அவள் எல்லாத்தையும் நீங்க பண்ணீங்கன்னு தெரியும் என்பது போல பேச இவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.

பிறகு ராம் ஸ்டேஷனுக்கே ராஜசேகர் ட்ரான்ஸ்வர் வாங்கி வந்து ஷாக் கொடுக்க ராம் நீங்க எதுக்கு வந்தீங்க என்று கேட்க அரசாங்கம் அனுப்பிச்சு வந்தேன் என்று பதிலடி கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment