Advertisment

தியாகியான தங்கை... புரிந்துகொள்ளாத அண்ணன் : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக TRP புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
Anna Kd And

ஜீ தமிழ் சீரியல்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் முதன்மை தமிழ் தொலைகாட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக TRP புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

கார்த்திக் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்.. தீபாவுக்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல்

கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில் ரூபாஸ்ரீ ஏற்பாடு செய்த இன்கம்டேக்ஸ் ரைடில் இருந்தும் கார்த்திக் தப்பிய நிலையில் இன்று, கார்த்திக் வீட்டிற்கு வந்ததும் அபிராமி நீ எதுக்கு ரோடுல இறங்கி ரவுடிகளுடன் சண்டை போடுற, தர்ணா செய்யுற? இதனால் நம்ம குடும்ப கவுரவம் தான் கெட்டு போகும் என்று சொல்ல, கார்த்திக் இல்லமா நம்ம குடும்பத்தில் இருந்து ஒரு பாடகி உருவாகினால் அது நமக்கு பெருமை தான் என்று சொல்கிறான்.

அடுத்ததாக ரூமுக்குள் இருக்கும் தீபாவிற்கு கார்த்திக் காரில் இருந்து ஒரு கிஃப்ட்டை கொண்டு வந்து கொடுக்க, அது கல்யாண போட்டோவாக இருப்பதை பார்த்து தீபா சந்தோசப்படுகிறாள். மறுபக்கம் மாயாவும் ரூபஸ்ரீயும் கூட்டு சேர்ந்து தீபா பாடுவதை எப்படி தடுப்பது என்று யோசிக்கின்றனர். கடைசியில் ஐஸ்வர்யாவை வைத்து ஒரு பிளானை போட்டு ஒரு மயக்க மருந்து மாத்திரையை கொடுத்து அனுப்ப ஐஸ்வர்யா அதை கொண்டு வந்து அவளது அம்மாவிடம் கொடுக்கிறாள்.

பிறகு தீபாவுக்காக மீனாட்சி ஸ்பெஷலாக பாலை காய்ச்சி கொண்டிருக்கும் போது அபிராமி கூப்பிட மீனாட்சி வெளியே வர இந்த நேரம் பார்த்து கிச்சனில் நுழையும் ஐஸ்வர்யாவின் அம்மா அந்த மாத்திரையை பாலில் கலந்து விடுகிறாள். பிறகு மீனாட்சி இந்த பாலை கொண்டு போய் தீபாவுக்கு கொடுக்கிறாள். தீபாவும் பாலை குடிக்க போகும் சமயத்தில் தர்மலிங்கம் போன் செய்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? தீபா பாலை குடிப்பாளா? இல்லையா? என்பது குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா:

சூடாமணிக உயிருக்கு வந்த ஆபத்து.. இசக்கியை தலை மூழ்கிய சண்முகம்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பஞ்சாயத்தில் வைத்து இசக்கி முத்துபாண்டியிடம் வாழ்வதாக அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று, பஞ்சாயத்துக்கு நடக்கும் நேரத்தில் ஜெயிலில் இருக்கும் சூடாமணிக்கு உடல்நிலை சரியில்லாமல் சென்று சாக போய் கடைசியாக கண் விழிக்கிறாள். அடுத்து வீட்டிற்கு வந்த சண்முகம் இனிமே இந்த வீட்டில் யாரும் இசக்கியை பற்றி பேச கூடாது. அவளுக்கும் இந்த குடும்பத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்கிறான்.

இந்த நேரம் பார்த்து இசக்கியும் பாக்கியமும் ஆட்டோவில் வந்து இறங்க உள்ளே வர விடாமல் தடுத்து நிறுத்தும் சண்முகம் இசக்கியின் துணிகளை தூக்கி வெளியே போட்டு கொளுத்துகிறான். இனிமே ஓட்டும் இல்ல உறவும் இல்ல என்று சொல்ல இசக்கி கண்ணீருடன் வெளியேறுகிறாள். அடுத்து பாக்கியம் அவளை ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து செல்கிறான்.

ரூமுக்குள் சென்ற இசக்கி ரத்தனாவோட வாழ்க்கைக்காகவும் நீ கொலைகாரனாக ஆகிட கூடாது என்பதற்காகவும் தான் இப்படியொரு முடிவை எடுத்தேன், இதை நான் பிடித்து எடுக்கல என்று கலங்கி அழ சிவபாலன் இதை கேட்டு விடுகிறான். உடனே அவன் ரூமுக்குள் வர இசக்கி அழுகையை அடக்கி கொண்டு எதுவும் காட்டி கொள்ளாமல் இருக்க சிவபாலனும் எதையும் கேட்காதது போல் இருக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீதா ராமன்:

நான்சியிடம் சிக்கிய அர்ச்சனா.. பளாரென விழுந்த அடியும் அடுத்த அதிரடி பிளானும்

சீதா ராமன் சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜசேகர் ராம் ஸ்டேஷனுக்கு டிரான்ஸவர் வாங்கி கொண்டு வந்த நிலையில் இன்று  நான்சி அர்ச்சனாவை கூட்டி கொண்டு ஓரிடத்திற்கு கிளம்ப அர்ச்சனா எங்கே என்று கேட்க நான்சி எதையும் சொல்லாமல் கூட்டி வருகிறாள். அதன் பிறகு ஒரு குடோனிற்கு வருகின்றனர். மகாவை கொன்னது நீதானே என்று நான்சி கேட்க அர்ச்சனா இல்லை என்று சமாளிக்கிறாள்.

உடனே நான்சி பளாரென அறைந்து எனக்கு எல்லாமே தெரியும், கொஞ்சம் அங்க பாரு என்று கல்பனாவை வாயை அடைத்து கட்டி போட்டிருப்பதை காட்ட அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறாள். பிறகு நாங்க ரெண்டு பேரும் பிளான் பண்ணோம். ஆனால் நாங்க கொல்லல என்று சொல்கிறாள். நான்சி எனக்கு கல்பனாவை வச்சி சில வேலைகள் இருக்கு என்று சொல்லி அவளை அர்ச்சனா கெட்டப்பிற்கு மாற்றி வீட்டிற்கு அழைத்து வருகிறாள்.

இங்கே வீட்டில் ராமும் ராஜசேகரும் வர சீதா அப்பாவை ஆரத்தி எடுத்து வீட்டிற்கு அழைத்து செல்கிறாள். ராம் ராஜசேகர் டிரான்ஸர் வாங்கிட்டு வந்த விஷயத்தை சொல்லி இந்த ஏற்பாடுகளை செய்தது தெரிய வருகிறது. அடுத்து நான்சி கல்பனாவுடன் வீட்டிற்கு வர அது அர்ச்சனா என்று நினைத்து அவளையும் சுபாஷையும் நிற்க வைத்து கல்யாண நாளை கேக் வெட்டி கொண்டாட வைக்கின்றனர். இப்படியான  நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment