Advertisment

பெண்ணுக்கு பெண் தான் வில்லி... சரியாக சொல்லும் ஜீ தமிழ் சீரியல்கள் : இன்றைய எபிசோடு

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
zee tamil Serial news

அண்ணா - கார்த்திகை தீபம் - சீதாராமன்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி  புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

இசையமைப்பாளருடன் தொடர்பு.. தீபாவை அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா, கார்த்திக் செய்தது என்ன?

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்தியால் ரெசார்ட்டை அடித்து உடைந்தது மாயா தான் என அருணுக்கு தெரிய வர அருண் அவளை அடிக்க பாய கார்த்திக் போலீஸிடம் ஒப்படைத்த நிலையில் இன்று, தீபாவை மியூசிக் டைரக்டர் ரக்ஷன் டிராப் செய்ய தீபா அவரை வீட்டிற்கு அழைக்க ரக்சன் வேலையிருப்பதாக சொல்லி கிளம்புகிறார். இவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்த ராஜேஷ்வரி போட்டோ எடுத்து கொள்கிறாள்.

உடனே ஐஸ்வர்யாவிடம் சென்று போட்டோவை காட்டி தீபாவை அசிங்கப்படுத்த முடிவெடுத்து தீபாவுக்கும் ரக்சனுக்கும் தொடர்பு என மீடியாவில் செய்தியை பரப்ப வைக்கின்றனர். மறுபக்கம் வீட்டுக்கு வந்த தீபா ரக்சன் தன்னை ட்ராப் செய்த விஷயத்தை சொல்வதோடு அருண் விஷயம் என்னாச்சு எனவும் விசாரிக்கிறாள். மறுநாள் எல்லாரும் அபிராமிக்கு போன் போட்டு இது பற்றி விசாரிக்க பேப்பரை பார்த்து அவளும் அதிர்ச்சி அடைகிறாள்.

வீட்டில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டு இது பற்றி பேச கார்த்திக் இது தப்பான நியூஸ் என நடந்தவற்றை சொல்ல அபிராமி அதை ஏற்காமல் கோபத்தில் ஏதோ சொல்ல வர சாமியார் சொன்ன விஷயம் நினைவுக்கு வர அமைதியாகி விடுகிறாள். தீபா செய்தியை பார்த்து கண்ணீருடன் ரூமுக்குள் சென்று விட கார்த்திக் ஆறுதல் சொல்கிறான். எது பண்ணாலும் அபிராமி இப்படி அமைதியா இருக்க என்ன காரணம் என ஐஸ்வர்யா கன்பியூசியஸ் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

முத்துப்பாண்டிக்கு வார்னிங் கொடுத்த டிஎஸ்பி.. ஸ்டேஷனை தேடி வந்த ஆப்பு

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டுக்கு கோபமாக வந்த சண்முகம் அப்பாவிடம் என்னை ஏமாத்தி கோயிலுக்கு கூட்டிட்டு போனியா என்று சத்தம் போட்ட நிலையில் இன்று, பரணி சண்முகத்தை சமாதானம் செய்யும் முயற்சி செய்ய அவன் இனிமே இசக்கி முகத்தில் முழிக்கவே மாட்டேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறான். பிறகு பரணி சண்முகத்தை சாப்பிட கூப்பிட அவன் சாப்பாடு வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று சொல்ல, நீ சாப்பிடாம உன் தங்கச்சி இங்க சாப்பிட மாட்டேன்னு உக்காந்துட்டு இருக்காங்க என்று செல்கிறாள்.

அதன்பிறகு சண்முகம் தன்னுடைய தங்கைகளுக்காக சாப்பிடுகிறான். அதே நேரத்தில் தங்கைகளையும் சாப்பிட வைக்கிறான். இதனை தொடர்ந்து மறுநாள் பரணி கோலம் போட்டுக் கொண்டிருக்க சண்முகம் காலையிலேயே எழுந்து வெளியில் கிளம்ப பரணி போட்ட கோலத்தை பார்த்து ரசிக்கிறான். பிறகு வெளியே கிளம்ப பரணி இவனுக்கு காபி போட்டு கொடுக்கணும் என்று யோசித்து சட்டையில் பின்னாடி ஏதோ அழுக்கா இருக்கு மாத்திட்டு போ என்று சொல்கிறாள்.

சண்முகம் அதெல்லாம் எப்படி கடந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை என்று சொல்ல நீ ஒன்னும் இப்போ சாதாரண ஆள் கிடையாது ஊர் பிரசிடெண்ட் ஒழுங்கா டிரஸ் பண்ணு என்று திட்டியதன் சண்முகம் சட்டையை மாற்றிக் கொண்டு வருவதற்குள் பரணி காபி போட்டு தயாராக காத்திருக்கிறாள். ஆனால் சண்முகம் நீ போட்ட காபி எல்லாம் எனக்கு தேவையில்லை என்று சொல்ல நீ இதை குடிக்கலைன்னா நான் வெளியே எங்கேயும் போக மாட்டேன்.

இந்த ஊருக்கான மக்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க மாட்டேன், இதுக்கெல்லாம் காரணம் நீதான் என்று சொல்லுவேன் என பேசி அதிர்ச்சி கொடுக்கிறாள். இதனால் சண்முகம் காபி குடித்துவிட்டு, இது உனக்காக இல்ல இந்த ஊர் மக்களுக்காக கொடுக்கிறேன் என்று சொல்கிறான். மறுபக்கம் முத்துப்பாண்டி ஸ்டேஷனுக்கு வந்த டிஎஸ்பி அவனது துப்பாக்கியை கேட்க, துப்பாக்கி தொலைந்து போன விஷயத்தை சொல்ல கண்டமேனிக்கு ரைட் விடுகிறார்.

இன்னும் இரண்டே நாள்தான் டைம் அதுக்குள்ள நீ துப்பாக்கியை கண்டுபிடிக்கணும் இல்லன்னா சஸ்பெண்ட் பண்ணிடுவேன் என்றும் இந்த ரெண்டு நாள் டைம் கொடுக்கட்டும் உன் சண்முகம் மச்சான் என்ற ஒரே காரணத்துக்காக தான் என்று எச்சரிக்கிறார். இதனால் முத்துப்பாண்டி இதுக்கெல்லாம் காரணம் சண்முகம் தான் என்று கோபம் கொள்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீதா ராமன்:

சீதாவை தோற்கடிக்க புதிய கூட்டணி போடும் நான்ஸி.‌. மீண்டும் பழிவாங்க வரும் விஷால்

சீதா ராமன் சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் சீதாவுக்கு நான்சி மீது சந்தேகம் வர நான்சி மகா போட்டோ முன்பு நின்று இன்னொரு முறை அந்த சீதாவை ஜெயிக்க விடமாட்டேன் என்று சொன்ன நிலையில் இன்று, சேதுவின் கம்பெனியில் கவர்மெண்ட் ஆர்டர் கொடுத்திருந்தவர்கள் சிலர் வீட்டிற்கு வந்து மகா இருக்கும்போது ஆர்டர் கொடுத்திருந்தோம். அவங்க இருந்திருந்தால முடிச்சு கொடுத்திருப்பாங்க உங்களுக்கு ஒரு வாரம் டைம் தரும் அதுக்குள்ள நீங்க ஆர்டர் முடிச்சு கொடுக்கணும் இல்லனா உங்க கம்பெனி மேல கேஸ் போடுவோம் என்று வார்னிங் கொடுத்து விட்டு செல்கின்றனர்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க சீதா என்னாச்சு என்று கேட்டு டைலர்களிடம் நீங்க பேசுங்க நீங்க கூப்பிட்டா கண்டிப்பா வந்து வேலை பண்ணுவாங்க என்று கூறுகிறார். சேதுவும் எல்லோரிடமும் பேச அவர்கள் வருவதாக சொல்லி கடைசி நேரத்தில் கை விரித்து விடுகின்றனர். இந்த விஷயம் அறிந்த சீதா இதெல்லாம் நான்சி வேலையா இருக்கும் என சந்தேகப்பட்டு இதற்கு தீர்வு காண முடிவெடுக்கிறாள். அதைத்தொடர்ந்து நான்ஸி விஷாலை சந்தித்து பேச அவன் நீங்க எதுக்கு மகாவை கொன்னுட்டு நான்ஸியா வந்திருக்கீங்க என்று கேள்வி கேட்க அதற்கு நான்ஸி பதில் சொல்ல மறுக்கிறாள்.

பிறகு இந்த சீதாவை தோற்கடிக்கணும் இன்னொரு முறை அவள ஜெயிக்க விடக்கூடாது அதுக்கு உன்னுடைய உதவி தேவை என்று கேட்க நான் ஜெயிலுக்கு போக காரணமும் அந்த சீதா தான். அவளை பழிவாங்க நான் ரெடி என நான்ஸியோடு கூட்டு சேர்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment