Advertisment

சூழ்ச்சியை கண்டுபிடித்த ஹீரோ... தங்கைக்காக மனைவியை வெறுக்கும் கணவன் : அடுத்து என்ன?

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
Zee tamil Serial Update

அண்ணா - கார்த்திகை தீபம் - சீதாராமன்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி  புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

தர்மலிங்கத்துக்கு நேர்ந்த அவமானம்.‌. வில்லிகளுக்கு ஷாக் கொடுத்த கார்த்திக்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தர்மலிங்கம் தீபாவுக்காக நகை வாங்கி வந்து கொடுத்த நிலையில் இன்று, தீபா ரூமுக்குள் அப்பா வாங்கி கொடுத்த நகைகளை எடுத்து பார்த்து கண் கலங்க கார்த்திக் உங்க அப்பா வாங்கி கொடுத்தது தானே, சந்தோஷமா போட்டுக்கங்க என்று சொல்கிறான். தீபா எப்படி சார் இதை நான் சந்தோஷமா போட்டுக்க முடியும்? அப்பாவுக்கு பெருசா வருமானம் இல்ல, அப்படி இருக்கும் போது நிச்சயமாக அதிக வட்டிக்கு கடன் வாங்கி தான் வாங்கி இருப்பாரு என வருந்துகிறாள்.

கார்த்திக் அந்த கடனை அடைக்க எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது, ஆனால் உங்க அப்பா அந்த பணத்தை வாங்கிக்க மாட்டாரு. ஆனால் நீங்க பாடி சம்பாதித்து பணத்தை கொடுத்தா கண்டிப்பா வாங்கிக்குவாரு, ஏனெனில் அது பொண்ணு சம்பாதித்து கொடுத்தது என்ற சந்தோஷம் இருக்கும் என சொல்கிறான். இதையடுத்து தர்மலிங்கம் வீட்டுக்கு வரும் இருவர் தீபா குறித்து பேப்பரில் வந்த விஷயத்தை சொல்லி அவமானப்படுத்தி பேச அது பொய்யான செய்தி என சொல்கிறார்.

மைதிலி, போறீங்களா போலீஸை கூப்பிடுவா என அவர்களை துரத்தி விடுகிறாள். இந்த ஆட்களை ஏற்பாடு செய்த கோகிலா தூரத்தில் இருந்து இதையெல்லாம் பார்த்து ரசித்து தர்மலிங்கம் இனிமே தீபாவை பாட விட மாட்டாரு என கணக்கு போடுகிறாள். மறுபக்கம் கார்த்திக் நியூஸ் பேப்பரில் வந்த போட்டோ நம்ம வீட்டு வெளியே எடுத்தது தான். அப்படின்னா நம்ம வீட்டில் யாரோ தான் இந்த செய்தியை கொடுத்திருக்கணும் என்று சொல்கிறான்.

இதை கேட்ட ராஜேஸ்வரி என்ன கார்த்திக் வீட்ல இருக்காங்களை சந்தேகப்படுறியா என கேட்க, கார்த்திக் சந்தேகம் இல்லை, யார் பண்ணி இருப்பாங்கனு உறுதியாக தெரியும் என ஷாக் கொடுக்கிறான். இப்படியான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

சண்முகத்துக்கு தெரிய வந்த உண்மை.. பரணி மீது கோபத்தை கொட்டிய குடும்பம்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் கனி சாப்பிடாமல் இருக்க பரணி கையில் சாப்பாட்டுடன் வீட்டுக்குள் நுழைந்த நிலையில் இன்று, இசக்கி இருந்து இருந்தா இப்படி ஆகியிருக்காது என பேசியவர்கள் அந்த இடத்தை பரணி பிடிச்சுட்டா என்பது போல சந்தோஷப்படுகின்றனர். மறுநாள் காலையில் முப்பிடாதி சண்முகத்தை பார்த்து பேசிய போது இசக்கியை முத்துப்பாண்டி அடித்த விஷயத்தை உலற அதை கேட்டு சண்முகம் அதிர்ச்சி அடைகிறான்.

ஆனால் இசக்கி மேல் இருக்கும் கோபத்தில் அவளுக்கு இதெல்லாம் தேவை தான் என்று சொல்கிறான். வீட்டுக்கு கோபமாக வரும் சண்முகம் பரணியிடம் முத்துப்பாண்டி இசக்கியை அடித்தானா என்று கேட்க, முதலில் சண்முகத்தை சமாதானப்படுத்தும் பரணி ஒருகட்டத்தில் ஆமாம் என சொல்ல சண்முகம் இசக்கிக்கு இது தேவை தான் என்று சொன்னாலும் நான் போய் அவனை எதுவும் கேட்க முடியாதே, கேட்டா என் புருஷன் என்னை அடிச்சானு சொல்லுவா என்று வருந்துகிறான்.

பரணி சமாதானம் செய்ய முயற்சிக்க அடித்தது உன் அண்ணனு சொல்லலையோ என்று சொல்ல, தங்கைகளும் பரணி இந்த விஷயத்தை சொல்லாததால் அவளை தப்பாக நினைத்து கோபித்துக் கொள்கின்றனர். இதனால் பரணி சாப்பாடு சமைத்து வைத்து விட்டு ரூமுக்குள் சென்று வருத்தமாக இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீதா ராமன்:

விவகாரத்து பேப்பரில் கையெழுத்து போட்ட சீதா.. ராம் கொடுக்கும் அதிர்ச்சி 

சீதா ராமன் சீரியலின் நேற்றைய எபிசோடில் நான்ஸி சவாலை ஏற்பதாக சீதா சொல்லிய நிலையில் இன்று, சீதா சவாலில் தோற்றால் ராமை விவாகரத்து செய்து பிரிவதாக ஒப்புக்கொண்டு கையெழுத்து போடுகிறாள். பிறகு ராஜசேகர் ராமிடம் இந்த விஷயத்தை சொல்லி என் பொண்ணு லூசு மாப்ள, அவ எப்படியும் தோற்க தான் போறா என்று சொல்ல ராம் கோபமாக வீட்டுக்கு வருகிறான்.

சீதாவை பார்த்து உனக்கு என்ன தெரியும்னு கையெழுத்து போட்ட எதுக்கு சவால் முடியும் வரைக்கும் காத்திருக்கணும்? இப்போவே வீட்டை விட்டு போயிடு என கோபம் அடைய, சீதா சமாதானம் செய்ய முயற்சி செய்ய ராம் கோபம் குறையாமல் இருக்கிறது. பிறகு சீதா கீழே வரும் போது ராமின் தங்கைகளும் உனக்கு என்ன தெரியும்னு கையெழுத்து போட்ட என்று கேள்வி கேட்க எனக்கு துணையாக முத்தாரம்மன் இருப்பா என்று சொல்லி படுக்க சென்று விடுகிறாள்.

இரவு சீதா அசந்து தூங்கி கொண்டிருக்க கொலுசு சத்தம் கேட்டு கண் திறக்க முத்தாரம்மனா வந்து நிற்கிறார். என் கூட வா என மகாவின் கல்லறைக்கு அழைத்து சென்று சமாதியை தட்டி காட்ட சீதா புரியாமல் நிற்கிறாள். நான்சியும் மொட்டை மாடியில் இருந்து இது அனைத்தையும் பார்க்க அவளுக்கு சீதா மட்டும் தான் தெரிகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment