Advertisment

போலீஸ் அராஜகம்... மாமியார் சதி வேலை : இதுக்கு முடிவே கிடையாதா?

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா சீதாராமன் மற்றும் கார்த்திகை தீபம் சீரியல்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Anna and See

சின்னத்திரை சீரியல்கள்

உயிருக்கு போராடும் தர்மலிங்கம்.. கோகிலா செய்த சதி, அடுத்து நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தர்மலிங்கம் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட தீபா பாட கிளம்ப கார்த்திக் உண்மையை மறைத்த நிலையில் இன்று, கார்த்திக் தீபாவை ஸ்டுடியோவிற்கு அழைத்து வந்து விட இசையமைப்பாளர் ரக்ஷன் பாடலை கொடுத்து இது தான் நீங்க பாட வேண்டியது என்று சொல்ல தீபா அது அப்பா பாடலாக இருப்பதை பார்த்து எமோஷனலாகிறாள்.

உடனே அப்பா கிட்ட பேசணும் என்று ஏங்குகிறாள். ஜானகிக்கு போன் செய்ய அவர் அப்பா முருகன் கோவிலுக்கு போய் இருக்கார் என்று பொய் சொல்லி போனை வைக்கிறார். ஹாஸ்பிடலில் டாக்டர்கள் தர்மலிங்கத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக சொல்கின்றனர். கார்த்திக் ஹாஸ்பிடல் பார்மில் கையெழுத்து போட்டு கொடுக்கிறான்.

மறுபக்கம் கோகிலா தீபாவுக்கு தர்மலிங்கம் ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை சொல்லி அவள் பாடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிளான் போட்டு ஸ்டூடியோவிற்கு கிளம்பி வர அவளை உள்ளே விட மறுக்கின்றனர். அடுத்து தீபா எந்தவொரு தடங்கலும் இல்லாமல் பாடி முடிக்கிறாள். ரக்சன் பாடியதற்கான பணத்தை செக்காக கொடுக்க தீபா மிகுந்த சந்தோசம் அடைகிறாள்.

இதை உடனே அப்பா கிட்ட கொடுக்க வேண்டும் என்று கிளம்ப கார்த்திக் அவளை பிக்கப் செய்து அழைத்து செல்கிறான். போகும் வழியில் தீபா காரை நிறுத்த சொல்லி அப்பாவுக்கு பிடித்தவற்றை வாங்க கார்த்திக் தர்மலிங்கம் ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை சொல்ல தீபா உடைந்து போகிறாள். கண்ணீருடன் அப்பாவை பார்க்க ஹாஸ்பிடலுக்குள் ஓடி வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வெட்டுக்கிளியை வெளுத்தெடுக்கும் முத்துப்பாண்டி.. அதிர விட்ட இசக்கி - அண்ணா சீரியல் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட் 

அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி முத்துபாண்டியை மன்னிப்பு கேட்க வைத்த விஷயம் தெரிய வந்து தங்கைகள் பரணியிடம் மன்னிப்பு கேட்ட நிலையில் இன்று சண்முகம் பசிக்குது என்று வீட்டிற்கு வர சாப்பிட உட்கார்ந்த சண்முகத்திடம் தங்கைகள் பரணி மீது எந்த தப்பும் இல்ல, அவ முத்துபாண்டியை சும்மா விடல ஊர் ஜனங்கள் முன்னாடி முத்துபாண்டியை இசக்கி கிட்ட மன்னிப்பு கேட்க வைத்திருக்கா என்று சொல்ல சண்முகம் அதுக்கு என்ன இப்போ என்று அசால்டாக எடுத்து கொள்கிறேன்.

இதனையடுத்து பரணி இன்னும் சாப்பிடல என்ற விஷயத்தை சொல்ல சண்முகம் அதையும் பெருசா எடுத்து கொள்ளாமல் சாப்பிட்டு விட்டு சாப்பிடாமல் கிடக்கும் பரணி அருகே சென்று ஏப்பம் விட்டு வெறுப்பேற்றுகிறான். இதனால் பரணி இதுவரைக்கும் நான் நல்ல டாக்டரா தான் இருக்கேன், என்ன விஷ ஊசி போட்டு கொலை பண்ண வச்சிடாதே என்று சொல்ல சண்முகம் பயத்துடன் போர்வையை இழுத்து போத்தி படுக்கிறான்.

இங்கே இசக்கி முத்துப்பாண்டி ரூமில் படுத்து கொண்டிருக்க அவன் இசக்கியிடம் மன்னிப்பு கேட்ட விஷயத்தை நினைத்து அவளை வம்பிழுத்து அடிக்க முயற்சி செய்ய இசக்கி அன்னைக்கு மாதிரி அடி வாங்கிட்டே இருக்க மாட்டேன் என்று அரிவாள்மனையை எடுத்து காட்டி அதிர்ச்சி கொடுக்க முத்துப்பாண்டி நீ என் ரூம்ல படுக்க கூடாது என்று வெளியே துரத்த, பாக்கியம் இங்கு வந்து அப்படினா அவ என் ரூம்ல படுக்கட்டும் நான் உங்க அப்பாவை இங்க அனுப்பறேன் என்று சொல்ல முத்துப்பாண்டி அந்த ஆளா வேண்டாம், இசக்கி இங்கயே இருந்து தொலையட்டும் என்று சொல்கிறான்.

அடுத்து பரணி தூக்கம் வராமல் சாப்பிட போகிறாள். அங்கு எதுவும் இல்லாமல் இருக்க தங்கைகள் அங்கு வந்து அவளுக்காக எடுத்து வைத்த சாப்பாட்டை கொடுக்க பரணி சாப்பிடும் போது சண்முகம் அதை பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றதும் பரணி சண்முகத்தின் மீது இருக்கும் காதலை பற்றி சொல்கிறாள். அன்னைக்கு நான் சண்முகத்தை புரிந்து கொள்ளல, இன்னைக்கு அவன் என்னை புரிந்து கொள்ளல. கண்டிப்பாக என் காதலை புரிய வைப்பேன் என்று சொல்ல அதை கேட்டு தங்கைகள் சந்தோசப்படுகின்றனர்.

மறுநாள் முத்துப்பாண்டி தன்னை அடித்த நான்கு பேரில் ஒருத்தன் வெட்டுக்கிளி தான் என்று தப்பாக நினைத்து அவனை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று அடித்து வெளுக்க அவன் அது நான் இல்ல என்று சொல்லியும் முத்துப்பாண்டி விடாமல் அடிக்கிறான். இசக்கியை ஸ்டேஷனுக்கு சாப்பாடு கொண்டு வர சொல்கிறான். மறுபக்கம் சண்முகம் பரணி மற்றும் கனியை கூட்டி கொண்டு ஆட்டோவில் வெளியே செல்கின்றனர்.

இதையடுத்து இசக்கி ஸ்டேஷனுக்கு வர வெட்டுக்கிளியை போட்டு முத்துப்பாண்டி அடித்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். பிஸ்டலை எடுத்தது நீ தானு ஒத்துக்க, இல்லனா அந்த சண்முகம் தான் எடுத்ததுனு சொல்லு என்று அடிக்க முப்பிடாதி சண்முகத்துக்கு தகவல் கொடுக்க அவன் ஸ்டேஷனுக்கு வந்து முத்துப்பாண்டி சட்டையை பிடிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீதாவுக்கு எதிராக அடுத்தடுத்து அரங்கேறும் சதி.. டென்ஷனில் சேது

சீதா ராமன் சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா நம்ம டைலர்களை வைத்தே தைக்கலாம் என்று சொல்லிய நிலையில் இன்று, சீதா சொன்னதை அர்ச்சனா கேட்டு அதை அப்படியே நான்சியிடம் பற்ற வைக்க அவள் விஷாலுக்கு போன் போட்டு இங்க வேலை செய்த டைலர் யாரும் வேலைக்கு வர கூடாது அவர்களை மிரட்டி தடுத்து நிறுத்து என்று சொல்கிறாள்.

இதனையடுத்து வீட்டில் நான்சி மகாவின் புடவையை எடுத்து கட்ட அதை பார்த்து சீதா மகா புடவையை நீங்க கட்ட கூடாது என்று தடுக்க நான்சி அதை ஏற்க மறுக்கிறாள். இதனால் சீதா சேதுவிடம் விஷயத்தை சொல்ல அவரும் கடுப்பாக நான்சி மகா புடவையில் வந்து நிற்க சேதுவும் மகா புடவையை நீ கட்ட கூடாது என்று சத்தம் போட நான்சி என் அக்காவை கொன்னவளே இந்த வீட்ல இருக்கும் போது நான் அவ புடவையை கட்ட கூடாதா என்று சொல்லி செல்ல டென்ஷன் ஆன சேது கார்டனுக்கு சென்று விடுகிறான்.

அங்கு வந்த துரை பழைய டெய்லர் யாரும் வரல, வர மாட்டேன்னு சொல்றாங்க என்று சொன்னதும் சேது அதிர்ச்சி அடைய சீதா புதிய டெய்லர்களை வைத்து செய்யலாம் என்று சொல்ல அது சரி வராது என்று நான்சி சொல்ல, சீதா என்கரேஜ் பண்ணலானும் பரவாயில்ல, டிஸ்கரேஜ் பண்ணாதீங்க என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

    Zeetamil Serial
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment