Advertisment

தங்கைக்காக பழி ஏற்ற அண்ணன்... பிச்சை எடுக்கும் வில்லன் கோஷ்டி : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா கார்த்திகை தீபம் மற்றும் சீதாராமன் சீரியல்களின் இன்றைய எபிசோடு.

author-image
WebDesk
New Update
seetha raman anna Kardf

அண்ணா - கார்த்திகை தீபம் - சீதாராமன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கனிக்காக பழியை ஏற்கும் சண்முகம்.. ட்விஸ்ட் வைத்த பரணி

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி கனியை கைது செய்து கூட்டி வந்த நிலையில் இன்று, கனியை முத்துப்பாண்டி ஸ்டேஷனுக்கு கூட்டி வர அதை பார்த்த முப்பிடாதே ஸ்கூல் பொண்ணு எதுக்குயா ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்க என்று கேட்க ஹோம் வொர்க் கொடுக்க தான் என்று நக்கலாக பேசுகிறான்.

அதைத் தொடர்ந்து முப்பிடாதே வேணாமய்யா ஸ்கூல் படிக்கிற பொண்ணு விட்டுடுங்க என்று கெஞ்ச, அவன் என்ன மிளகாய் பொடி தூவி அடிச்சது உங்க அண்ணன் தான் துப்பாக்கி தூக்கினது உங்க அண்ணன் தானே ஒத்துக்க உன்னை விட்டு விடுவேன் என்று சொல்ல கனி முடியாது என் அண்ணன பத்தி அப்படி சொல்ல மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாள்.

அடுத்து அங்கு வரும் சண்முகம் கனியை கட்டிப்பிடித்துக் கொண்டு என் தங்கச்சியை விட்டு ரா என்று கேட்க அப்படின்னா என்னை அடித்தது நீ தான் என் துப்பாக்கி திருடியது நீ தானு ஒத்துக்க, ஒரு லெட்டர் எழுதி அதுல கையெழுத்து போட்டுக் கொடு உன் தங்கச்சியை விட்டு விடுகிறேன் என்று சொல்ல கனியை காப்பாற்றுவதற்காக சண்முகம் லெட்டர் எழுதி கையெழுத்து போட போக்க முப்பிடாதி தடுத்தும் சண்முகம் கையெழுத்து போட்டு கொடுக்கிறான்.

இதைத்தொடர்ந்து சண்முகத்தை ஜெயிலுக்குள் தள்ளி சிரிக்கும் முத்துப்பாண்டி நான் சொன்னா மாதிரியும் உன் தங்கச்சி விடுறதுக்கு நான் என்ன உன்ன மாதிரி நல்லவனா என்று பேச, சண்முகம் என் தங்கச்சிக்காக தான் நான் கையெழுத்து போட்டு கொடுத்தேன் அவளை விட்டுட்டு என்ன சொல்லி அப்படியெல்லாம் விட முடியாது என அதிர்ச்சி கொடுக்கிறான்.

உங்க ரெண்டு பேர் மேலயும் கேஸ் போடப் போவதாக சொல்ல சண்முகம் பயங்கர கடுப்பாகிறான். முத்துப்பாண்டி பயப்படாத எனக்கு தேவை நீதான் உன் தங்கச்சி விட்டுறேன் என்று சொல்கிறான். பிறகு பரணி ரத்னா ஆகியோர் ஸ்டேஷனுக்கு வருகின்றனர். சண்முகம் எந்த தப்பும் பண்ணல அவனை விட்டுடு என்று சொல்லி பரணி கேட்க எல்லாத்தையும் பண்ணது நான் தானே அவனை எழுதி கொடுத்திருக்கான். என்று லெட்டரை காட்டுகிறான். 

பரணிக்கும் முத்துப்பாண்டிக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற பரணி ஒரு கட்டத்தில் அந்த லெட்டரை கொளுத்துகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரியா குறித்து வெளிவந்த உண்மைகள்.. கார்த்திக் போடும் ஸ்கெட்ச்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் அபிராமியால் ராஜேஸ்வரி போலீஸிடம் இருந்து தப்பிய நிலையில், இன்று, ஆபீஸ் வரும் கார்த்திக் தீபாவின் பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கு இதை அப்படியே விட்டுவிடக்கூடாது இன்னும் நிறைய கவனம் செலுத்தணும் என்று பிஏவிடம் சொல்கிறான். அதைத்தொடர்ந்து கார்த்திக் வந்து கொண்டிருக்கும் போது வழியில் மது என்பவரை பார்க்க அவர் ரியாவின் உண்மையான கணவர் என்பது தெரியவருகிறது.

மேலும் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்ற விஷயமும் தெரிய வர, ரியா காசை நல்லா செலவு பண்ணி ஊர சுத்தணும்னு நினைக்கிறவ ஆனா நான் சாதாரண வேலை செய்கிறவன் அவளுடைய ஆசைகளை என்னால நிறைவேற்ற முடியல, அதனால ரெண்டு பேரும் பேசி விவாகரத்து வாங்கிக்கிட்டோம் என்று சொல்கிறான். அதோட கார்த்திக்கு இப்போ ரியா, என் அண்ணனோட தான் சுத்திக்கிட்டு இருக்கா எனக்கு உங்களோட உதவி தேவை என்று கேட்க அவர்கள் கண்டிப்பாக உதவுகிறேன் என சொல்கிறார்.

பிறகு கார்த்திக் அங்கிருந்து கிளம்பும்போது ஒரு நல்ல குரலில் பாட்டு கேட்க திரும்பிப் பார்க்க ஒரு துப்புரவு பணியாளர் பெண் ஒருவர் பாடுவதை கேட்டு கைதட்டி உற்சாகப்படுத்துகிறார். நீங்க நல்லா பாடுவீங்களா? கச்சேரியில பாட ஆசை இருக்கா? உங்களுக்கு நான் வாய்ப்பு தரேன் என ஆபிஸ் விசிட்டிங் கார்டை கொடுத்து தன்னை வந்து ஆபீஸில் சந்திக்குமாறு சொல்கிறான்.

ஆபீஸுக்கும் போன் போட்டு ராணி என்றவங்க வந்து பாப்பாங்க அவங்கள வச்சு கச்சேரி பண்ணனும் என்று விஷயத்தை சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சுபாஷ், அர்ச்சனாவை பிச்சை எடுக்க வைத்த மகள்கள்.. நான்சியிடம் சிக்கும் சீதா

சீதாராமன் சீரியலின் நேற்றைய எபிசோடில் நம்ப வேலை பண்றது நான்சிக்கு தெரியக்கூடாது என்று சீதாவும் மீராவும் பேசிக் கொண்டதை நான்சி கேட்டு விட்ட நிலையில் இன்று, சேது, மீரா மற்றும் சீதா என மூவரும் சாப்பிட்டு விட்டு ஆபீஸ்க்கு கிளம்ப தயாராக நான்சி சுபாஷ் மற்றும் அர்ச்சனாவை கூப்பிட்டு இவர்களை பின்தொடர சொல்ல சுபாஷ் இவங்கள ஃபாலோ பண்ணி பண்ண மாட்டிக்குவோம் எங்களால முடியாது என மறுக்கிறார்.

உடனே அர்ச்சனா நாம மாறுவேடத்துல பிச்சைக்கார வேஷம் போட்டு ஃபாலோ பண்ணி போகலாம் என்று ஐடியா கொடுக்க நான்சி அர்ச்சனா சொல்றது சரிதான் என்று சொல்ல இருவரும் பிச்சைக்கார வேஷம் போட்டு ராமின் புல்லட்டை எடுத்து கொண்டு பின் தொடர்ந்து செல்கின்றனர். இதைப் பார்த்து ராமின் தங்கைகள் மூவரும் யாரோ அண்ணாவோட புல்லட்ட திருடிட்டு போறாங்க என்று இவர்களை பின்தொடர்ந்து வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் சீதா எக்ஸ்போர்ட் கம்பெனியை கண்டுபிடித்து நான்சிக்கு தகவல் கொடுத்து விடுகின்றனர். அதைத்தொடர்ந்து அங்கு வரும் ராம் தங்கைகள் மூவரும் பிச்சைக்காரர்கள் என நினைத்து இவர்களைப் போட்டு அடித்து உதைக்க நாங்க அங்க அப்பா அம்மா தான், நான்சியை வீட்டை விட்டு வெளியே அனுப்ப கோவிலில் பிச்சை எடுத்து அதை கோவில் உண்டியலில் போடுவதாக வேண்டிக் கொண்டிருப்பதாக சொல்ல அப்படின்னா வாங்க வந்து பிச்சை எடுங்க என்று கோவில் வாசலில் உட்கார வைத்து பிச்சை எடுக்க வைக்கின்றனர்.

இங்கே ராம் எக்ஸ்போர்ட் கம்பெனியில் மகாவின் போட்டோவை கொண்டு வந்து வைத்து தைத்து முடித்த ஆடைகளின் தரத்தை செக் செய்ய தொடங்குகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment