Advertisment

மாமனார் செய்த சதி வேலை... மாமியாரை அவமதித்த மருமகன் : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
zee tamil Serial news

அண்ணா - கார்த்திகை தீபம் - சீதாராமன்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி  புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

ரியாவுடன் ஆனந்துக்கு கல்யாணம்.. தீபாவுக்கு நேரும் அவமானம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில், கார்த்திக் தர்மலிங்கம் மாமா குடும்பத்தோட இந்த நிலைமைக்கு நாமளும் ஒரு காரணம் அதனால தான் இங்கே கூட்டி வந்ததாக சொல்லி செல்கிறான். இதைத்தொடர்ந்து மறுபக்கம் அறியா ஆனந்திடம் நாளைக்கு ஒரு சப்ரைஸ் இருக்கு உங்களுக்கும் எனக்கு ரிஜிஸ்டர் ஆபீஸ் கல்யாணம் என்று சொல்கிறாள்.

அண்ணன் தங்கை ஏன் உங்களுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லையா என்று கேட்க இல்ல நாளைக்கு மீனாட்சிக்கும் எனக்கும் கல்யாண நாள் என்று சொல்ல, அதனால என்ன பாக்கணும்னு ஆசைப்பட்டா என்று சொல்ல ரியா ஆனந்தை மூளை சலவை செய்ய அவன் கல்யாணத்துக்கு ஒப்புக்கொள்கிறான்.  மறுபக்கம் மீனாட்சி மற்றும் தீபா என இருவரும் கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அங்கு வரும் ராஜேஸ்வரி திட்டம் போட்டு தான் உங்க அப்பா அம்மாவ இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்க, ஒன்னும் இல்லாத குடும்பம் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தான் இங்கு வந்து இருக்கீங்க என்று அவமானப்படுத்தி பேச தீபா தேவையில்லாம பேசாதீங்க என்று சொல்கிறாள். ஜானகி மற்றும் மைதிலி இதை கேட்டு வருத்தப்படுகின்றனர். மீனாட்சி சாக்கடையில் கல் எறிஞ்சா அது நம்ம மேல தான் மீண்டும் வரும் நீ வா என்று தீபாவை அழைத்துச் செல்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

சௌந்தரபாண்டி செய்த சூழ்ச்சி.. சண்முகம் சொன்ன வார்த்தை, பாக்கியம் எடுத்த அதிர்ச்சி முடிவு

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பாக்கியம் மற்றும் இசக்கி இருவரும் கனி வயசுக்கு வந்திருக்கும் விஷயம் அறிந்து சண்முகம் வீட்டுக்கு கிளம்ப சௌந்தரபாண்டி சண்முகத்துக்கு போன் போட்டு உன் வீட்டில் எது நடந்தாலும் என் வீட்டில் இருந்து ஒரு ஆள் அங்க வந்து நிற்கணும் என அவமானப்படுத்தி பேசிய நிலையில் இன்று, சண்முகம் உன் வீட்டில் இருந்து யாரும் வரத் தேவையில்லை, உங்க குடும்ப உதவி யாருக்கும் தேவையில்லை என்று சொல்லி போனை வைக்கிறான்.

இதனைத் தொடர்ந்து பாக்கியம் மற்றும் இசக்கியென இருவரும் மிகவும் சந்தோஷமாக சண்முகம் வீட்டிற்கு வர நில்லுங்க என்று தடுத்து நிறுத்துகிறான். உங்க குடும்பத்தில் இருந்து யாரும் இங்க வர தேவை இல்லை என்று சொல்ல பாக்கியம் நீ ஏதோ கோபத்தில் பேசுற நான் கனிக்கு செய்ய வேண்டியது செஞ்சிட்டு போறேன் என்று சொல்ல சண்முகம் யாரும் எதுவும் செய்யக்கூடாது என சொல்கிறான்.

ஒரு கட்டத்தில் பாக்கியம் மனமடைந்து இனிமே அத்தனை நீ அழுது கூப்பிட்டால் கூட நான் இதை வீட்டு வாசப்படியை மிதிக்க மாட்டேன் என இசக்கியை அழைத்துக் கொண்டு செல்கிறாள். இவர்களை வழியில் பார்த்து அண்ணன் வீட்டுக்கு விசேஷத்துக்கு போனீங்களே மரியாதை பலமா என்று நக்கலடித்து சண்முகத்தை வெறும் பையன் என்று சொல்லித் திட்ட இசக்கி எங்க அண்ணனை எதுக்கு வெறும் பையன்னு சொல்றீங்க அது என்ன சாப்பாட்டுக்கு வழி இல்லாம உங்க வீட்டு வாசல்ல வந்து நின்றுச்சா வேணும் திருப்பி கேள்வி கேட்கிறாள்.

பாண்டியம்மா ஆமா உங்க அண்ணன் வெறும் பையன் தான் என்று சொல்ல அவரது தலை முடியை பிடிக்கும் இசக்கி இன்னொரு முறை அப்படி சொன்னா ஒவ்வொரு முடியா புடுங்கி எடுத்துடுவேன். யாரு வெறும் பையன்? ஓசி சாப்பாடு சாப்பிட வந்து புருஷனை விட்டு வந்து உக்காந்துட்டு இருக்கியே நீ சொல்றியா அத என பாண்டியம்மாவை அவமானப்படுத்துகிறார்.

பிறகு பாக்கியம் சண்முகத்தை ஏத்திவிட்டு அந்த வீட்டு வாசப்படிய மிதிக்காத மாதிரி பண்ணிட்டீங்களா நம்ம பொண்ணும் அந்த வீட்ல தான் வாழ்ந்துகிட்டு இருக்கா அவளை நினைச்சு பார்த்தீங்களா என்று சொல்ல சௌந்தரபாண்டி அவ வாழாவெட்டியா இந்த வீட்டுக்கு வரட்டும் நான் பாத்துக்குறேன் என்று சொல்கிறார்.

அடுத்ததாக பாண்டியம்மா இவ்வளவு அசிங்கப்படுத்துறாங்க இதையும் நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன் என்று சொல்ல, சொல்லாதீங்க செய்யுங்க என்று சிவபாலன் பதிலடி கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீதா ராமன்:

பெத்த பிள்ளைகளால் சிக்கிய சுபாஷ், அர்ச்சனா.. போலீஸ் ட்ரீட்மென்டால் வெளிவந்த உண்மை

சீதாராமன் சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் அர்ச்சனா மற்றும் சுபாஷ் பிச்சைக்காரன் விஷயத்தை அவர்களது மகள் உளறி விட்ட நிலையில் இன்று, பிச்சைக்கார வேஷம் குறித்து அறிந்த ராம் அவர்கள் மீது சந்தேகப்படுகிறான். எந்த கோவில் வேண்டுதலுக்காக என்று கேட்க அவர்கள் சொல்லும் கோவில் எக்ஸ்போர்ட் கம்பெனி பக்கத்தில் இருப்பதாக மீரா சொல்ல ராமுக்கு சந்தேகம் அதிகமாகிறது.  

உடனே ராம் சுபாஷிடம் சித்தப்பா உங்ககிட்ட தனியா பேசணும் என்று சொல்லி ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று அடி கொடுத்து ஜெயிலுக்குள் தள்ளுகிறான். பிறகு சுபாஷை வைத்து அர்ச்சனாவுக்கு போன் போட்டு நான்சிக்கு தெரியாமல் வெளியே வா, போலீஸ் ஜூப் வரும் அதுல ஏறி ஸ்டேஷனுக்கு வா என்று சொல்ல நைசாக வெளியே செல்ல இதை நான்சி பார்த்து விடுகிறாள்.

அர்ச்சனாவையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வர ராம் உண்மைய சொன்னா சுபாஷ் அடிக்க மாட்டேன் என்று பயமுறுத்த நான்சிக்காக பிச்சைக்கார வேஷம் போட்டு வந்தோம். எக்ஸ்போர்ட் கம்பெனி இருக்கிற விஷயத்தையும் சொன்னோம் என உண்மையை உடைக்கின்றனர். அதோடு இல்லாமல் ராம் எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்யும் பெண்களை எங்கே எப்போது கைது செய்தார்கள் என்று விசாரிக்க அது லேடி போலீஸ் ஸ்டேஷன் என்பதை தெரிந்து ராம் அந்த ஸ்டேஷனுக்கு கிளம்பி செல்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment