Advertisment

அண்ணனை அடிக்க ஐடியா கொடுக்கும் தங்கை... மனைவிக்கு துரோகம் செய்யும் கணவன் : மாற்றம் இல்லாத சீரியல்கள்

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
zee tamil Serial

அண்ணா - கார்த்திகை தீபம் - சீதாராமன்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

ஆனந்த் செய்து கொடுத்த சத்தியம்.. தீபாவுக்காக அதிரடி காட்டிய கார்த்திக்

கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில் ஆனந்த் சூசைட் அட்டென்ட் பண்ண ரியாவை ஹாஸ்பிடலில் சென்று சந்திக்க அவள் உங்களுக்கு மீனாட்சியுடன் கல்யாணம் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சும் உங்க வாழ்க்கைல வந்தது என்னுடைய தப்பு தான். அதனால தான் நான் என் வாழ்க்கையை முடிச்சுக்க முடிவெடுத்தேன் என்று சொல்கிறான்.

இதை கேட்ட ஆனந்த் இல்ல நான் உன்னை பார்க்க வந்திருக்கணும் என் மேல தான் தப்பு என்று சொல்லி நான் உன்னுடைய ஆசைப்படியே உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என சத்தியம் செய்து கொடுக்கிறான். மறுபக்கம் தீபாவை பற்றி தவறான செய்தியை போட்ட பத்திரிக்கை ஆபீஸ்க்கு வரும் கார்த்திக் எதை வச்சு இந்த செய்தியை போட்டீங்க என்று சத்தம் போடுகிறான்.

இதை கேட்டு, மேனேஜர் எடிட்டரை கூப்பிட்டு கேட்கும் போது போட்டோவோட செய்தி வந்திருந்தது. அதனால் தான் போட்டதாக சொல்கிறார். ஒரே ஒரு போட்டோவை வச்சி தீர விசாரிக்காமல் எப்படி இப்படி நியூஸ் போடலாம் என்று மேனேஜர் சத்தம் போடுகிறார். உடனே கார்த்திக் தீபாவ பத்தி போட்ட இந்த செய்தி தப்புன்னு மன்னிப்பு கேட்டு நீங்க இன்னொரு செய்தி போடணும் இல்லனா நான் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்ட பத்திரிக்கை ஆபிஸில் மன்னிப்பு செய்தி வெளியிட ஒப்புக் கொள்கின்றனர்.

அதை தொடர்ந்து தர்மலிங்கம் மற்றும் ஜானகி இருவரும் நகை கடைக்கு சென்று தீபாவிற்காக ஒரு தங்க நகையை வாங்கிக் கொண்டு அபிராமி வீட்டிற்கு வந்து கொடுக்க அபிராமி நாங்க யாரும் இதை எதிர்பார்க்கலையே அப்படி இருக்கும்போது எதற்கு இதை வாங்கிட்டு வந்தீங்க என்று கேட்க தர்மலிங்கம் எனக்கும் என் பொண்ணுக்கு சீர் செய்யணும்னு ஆசை இருக்கும் இல்லையா என்று சொல்ல கார்த்திக் அதெல்லாம் எதுக்கு மாமா என்று சொல்கிறான். இருந்தாலும் தன்னுடைய ஆசைக்காக வாங்கிக்குமாறு தீபாவிடம் கொடுக்க தீபா தயங்கி நிற்க மாப்ள நீங்க சொன்னா தான் தீபா வாங்கிப்பா என்று சொல்லி அதை தீபாவிடம் கொடுக்கிறார்.

ராஜேஸ்வரி உங்க பொண்ணுக்கு சீர் செய்யறதுக்கு கூட நாங்க சொல்லி தான் செய்ய வேண்டியதா இருக்கு, அப்புறம் உங்க பொண்ணுக்கு ஏதோ மியூசிக் டைரக்டரோட தொடர்பு இருக்காமே என்று அவமானப்படுத்தி பேசுகின்றனர். தர்மலிங்கம் அது தப்பான செய்தியா இருக்கும் என்று சொல்ல கார்த்திக் ஆமா மாமா அது தப்பான செய்தி தான். இன்னைக்கு சாயங்காலமே அதே பத்திரிக்கையில் தீபா பற்றிய செய்தி தப்புன்னு மன்னிப்பு செய்தி வெளியாகும் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

மண்ணை கவ்விய முத்துப்பாண்டி.. வீடியோவை வைத்து வெளுத்தெடுத்த பரணி

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி வீட்டுக்கு வந்த பரணி இசக்கி அடித்ததற்காக அவனைத் திட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் போவதாக சொல்ல, முத்துப்பாண்டி அதிர்ச்சி அடைகிறான். மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் வேலை போய்விடும் என முத்துப்பாண்டி பயப்பட பரணி வீடியோ ஆதாரத்தை வைத்து இசக்கியிடம் மன்னிப்பு கேட்டால் மன்னித்து விட்டு விடுகிறேன் என்று வார்னிங் கொடுக்கிறாள்.

உடனே சௌந்தரபாண்டி பரணியின் போனை புடுங்கி வீடியோவை டெலிட் செய்ய அவள் நான் ஏற்கனவே கிளவுட் ஸ்டோரேஜில் வீடியோவை ஏத்தி தான் வச்சிருக்கேன் என்று காட்ட முத்துப்பாண்டி வேறு வழியின்றி மன்னிப்பு கேட்கிறான். அதைத்தொடர்ந்து இசக்கிக்கு கட்டு போடும் பரணி அவ அடிச்சா நீ திருப்பி அடிக்க மாட்டியா என்று திட்ட இனிமே அடிக்கிறேன் என சொல்கிறாள். இனிமே இசக்கிக்கு ஒன்னும் ஆகாது என்று பாக்கியம் சொன்ன ஏன் அவள் அடிக்கும்போது நீ வேடிக்கை பார்த்துட்டு இருக்கியா என்று திட்ட, இசக்கி அத்தை என்னை நல்லா தான் பாத்துக்கிட்டாங்க என்று சப்போர்ட் செய்கிறாள்.

மறுபக்கம் கனி பசியால் சாப்பிடாமல் உட்கார்ந்து இருக்க வைகுண்டம் ஏன் ஆத்தா சாப்பிட வேண்டியதுதானே என்று சொல்ல, கனி இன்னும் எதுமே சமைக்கல ரத்னா அக்கா ஸ்கூல்ல இருந்து வரல என்று சொல்கிறாள். இப்போ இசக்கி இருந்து இருந்தா இந்நேரம் எல்லாருக்கும் புடிச்சதை சமைச்சு வச்சிருப்பா என்று யோசிக்கின்றனர்.

சண்முகம் வீட்டுக்கு வர கனி சாப்பிடாமல் உட்கார்ந்து இருக்க பரணிக்கு போன் பண்ணு எடுக்கல என்று சொல்ல பரணி கையில் சாப்பாட்டுடன் வீட்டுக்குள் நுழைய அதை பார்த்து கனி சந்தோஷப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீதா ராமன்:

நான்ஸி விட்ட சவால்.. அக்ரிமெண்ட்டில் கையெழுத்து போட்ட சீதா

சீதாராமன் சீரியலின் நேற்றைய எபிசோடில் பேச வந்த சீதாவிடம் நான்சி என்ன முடிவு பண்ணி இருக்க என்று கேட்ட நிலையில் இன்று, கம்பெனி பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன் என்று சீதா சவால் விட இந்த சவாலை நான்சியும் ஏற்றுக் கொள்கிறாள். இந்த விஷயம் அறிந்த ராம் சீதாவை பிடித்து சத்தம் போடுகிறான். அதைத்தொடர்ந்து நான்சி வக்கீலை வரவைத்து அக்ரீமெண்ட் ரெடி செய்கிறார்.

அக்ரிமெண்ட் ரெடியானதும் எல்லோரையும் கூப்பிட்டு சீதாவை கையெழுத்து போட சொல்கிறாள். அக்ரிமெண்ட்டில் இந்த சவாலில் தோற்றுவிட்டால் ராமை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என எழுதி இருக்கிறது. இதைப் பார்த்து மீரா, துரை, சீதாவின் அம்மா உமா, சேது, ராம் ஆகியோர் கையெழுத்து போட வேண்டாம் என சொல்லி தடுத்து நிறுத்துகின்றனர். ஆனால் நான்சி இது எனக்கும் சீதாவுக்குமான சவால் என்ன பண்ணனும்னு அவளே முடிவு பண்ணட்டும் என சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment