Advertisment

அம்பலமான சதி வேலைகள்... இறுதியில் வந்த பெரிய ட்விஸ்ட் : சீதாராமன் க்ளைமேக்ஸ் எபிசோடு எப்படி?

ஜீ தமிழின் சீதாராமன் சீரியல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், க்ளைமேக்ஸ் எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை பார்ப்போம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
seetharaman Serial

சீதாராமன் சீரியல்

அம்பலமான சதி வேலைகள்.. சுட்டு கொள்ள துணிந்த மகா.. கிளைமாக்ஸில் நடக்க போவது என்ன? சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியன நிலையில், சீரியலின் க்ளைமேக்ஸ் எபிசோடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சுபாஷ் கை பட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்து ஜோசியர் உயிரிழந்த நிலையில், வீட்டில் எல்லாரும் கூடியிருக்க மகா சீதாவை பார்த்து எதுக்கு ஜோசியரை பார்க்க போய் இருந்த? அவரை மிரட்ட போனியா என்று கேள்வி கேட்கிறாள். அப்போது சீதா மிரட்ட போகல உண்மையை சொல்ல வைக்க போய் இருந்தேன் என்று சொல்கிறாள். சேது நீ மாறவே மாட்டியா மகா என்று மகாலட்சுமியை திட்டுகிறார்.

அதன் பிறகு பயத்துடன் வீட்டிற்கு வரும் சுபாஷ் அர்ச்சனாவையும் மகாவையும் ரூமுக்குள் அழைத்து சென்று ஜோசியரை கொன்று விட்ட விஷயத்தை சொல்லி உனக்காக தானே மகா பண்ணேன். பழியை சீதா மேலே போட்டுடு என்று சொல்லி கீழே அழைத்து வருகிறான். அதன் பிறகு ராம் போலீசுடன் வீட்டிற்கு வருகிறான். இதை பார்த்தசீதா எதுக்குங்க போலீசுடன் வந்து இருக்கீங்க என்று கேட்கிறாள்.

உன்கிட்ட பேசவே பிடிக்கல என்று சொல்லி ஜோசியர் இறந்து விட்டதாக சொல்ல, மகா ஏய் சீதா நீ தானே நைட் அவரை பார்க்க போய் இருந்த, கொன்னுட்டியா என்று கேட்க அர்ச்சனாவும் கூட சேர்ந்து சீதாவுக்கு எதிராக தாளம் தட்டுகிறாள். ராம் சீதா கையில் விலங்கு மாட்ட போய் கடைசியில் சுபாஷை கைது செய்ய மகாவும் அர்ச்சனாவும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ஜோசியரை கொன்னது சுபாஷ் சித்தப்பா தான், ஜோசியர் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் எல்லாம் பதிவாகி இருக்கு என்று அதிர்ச்சி கொடுக்கிறான். இதனால் மகா கோபமாக ரூமுக்குள் சென்று விட சீதா அவளை சந்தித்து என்னையும் என் குழந்தையையும் எதுக்கு கொல்ல பார்க்கறீங்க? எனக்கு என் குழந்தை தான் முக்கியம் நான் வீட்டை விட்டு போயிடுறேன் என்று வெளியே கிளம்பி வர ராம் எனக்கு குழந்தையும் என் பொண்டாட்டியும் தான் முக்கியம். நான் உங்களை என் அம்மாவாக தான் பார்த்தேன், ஆனால் நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல. நானும் இனி இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று கிளம்பி செல்கிறான்.

பிறகு சேது, துரை, மீரா என எல்லாரும் கிளம்பி செல்ல மகா தனிமரமாக நிற்க தனக்கு தானே தண்டனை கொடுத்து கொள்ள முடிவெடுத்து துப்பாக்கியை தலையில் வைத்து சுட சுடாமல் இருக்கிறது. பிறகு உள்ளே வரும் சீதா நான் தான் குண்டை எடுத்தேன் என்று சொல்ல மாகாண நான் உன்னை கொல்ல நினைத்தாலும் நீ என்னை காப்பாற்ற தான் நினைத்து இருக்க என்று மனம் மாறி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க செல்கிறாள்.

தடுத்து நிறுத்தும் சீதா சேது மாமா கிட்ட மன்னிப்பு கேளுங்க என்று சொல்ல மகாவை எல்லாரும் ஏற்று கொள்ள மொத்த குடும்பமும் ஒன்றாக சந்தோசமடைகின்றனர். இத்துடன் சீதா ராமன் சீரியலுக்கு சுபம் போட்டு மொத்தமாக நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment