/indian-express-tamil/media/media_files/hq8jLCoGlFb8v3sebYod.jpg)
சீதாராமன் சீரியல் ஷூட்டிங்
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான ஜீ தமிழில், ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கும் ரியாலிட்டி ஷோக்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனித்துவமான வரவேற்பு கிடைத்து வருகிறது. டிவி சேனலும் தொடர்ந்து மக்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.
தை பிறந்தால் வழி பிறக்கும், வாழ்க்கையில் நல்ல மாற்றம் வரும் என்பது தமிழர்களின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதற்கேற்றார் போல போல ஜீ தமிழ் சீரியல்களிலும் மக்கள் எதிர்பார்த்தபடி அதிரடியான கதைக்கள மாற்றங்கள் இடம் பெற உள்ளன. இது குறித்து ப்ரைம் டைம் சீரியல் நாயகிகள் இடம்பெறும் ப்ரோமோ வீடியோ ஒன்றும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனை தொடர்ந்து மக்களும் இந்த பொங்கலை மேலும் மகிழ்ச்சிகரமான கொண்டாடுவதற்காக சீதா வீட்டு சீதனம் என்ற பெயரில் பட்டுப் புடவை, பட்டு வேஷ்டி, பட்டு சட்டை, அரை சவரன் தங்க மோதிரம் ஆகியவை பொங்கல் சீதனமாக வழங்க உள்ளது ஜீ தமிழ். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியல் தொடரில் இறுதியில் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு சரியான பதிலை சொல்லி இந்த சீதனத்தை மக்கள் வென்று செல்லலாம்.
தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு 5 கேள்விகள் வீதம் ஐந்து அதிர்ஷ்டசாலி போட்டியாளர்கள் இந்த சீதனத்தை பெற உள்ளனர். சீதா ராமன் சீரியல் நாயகி பிரியங்கா விநாயகர் கோவில் ஒன்றில் பொங்கலை வைத்து இந்த வருடம் மக்களுக்கு எல்லா வளமும் நலமும் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த போட்டி குறித்த அறிவிப்பையும் கொடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.