/indian-express-tamil/media/media_files/SuMV2wqxUOdu83rY60bc.jpg)
முடிவுக்கு வரும் நளதமயந்தி.. மீண்டும் டப்பிங் சீரியல்களை களமிறக்கும் ஜீ தமிழ் - ஒளிபரப்பு நேரம் குறித்த தகவல் இதோ 
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அதே போல் இந்த சேனலில் தொடக்கத்தில் ஒளிபரப்பான டப்பிங் சீரியல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தன. 
தற்போது டப்பிங் சீரியல்கள் எதுவும் ஒளிபரப்பாகாத நிலையில் ரசிகர்களின் கோரிக்கைகளை ஏற்று இரண்டு டப்பிங் சீரியல்களை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது டிவி சேனல், அதன்படி வரும் திங்கள் (மே 27) முதல் மதியம் 3 மணிக்கு நானே வருவேன் என்ற டப்பிங் சீரியலும் இரவு 10.30 மணிக்கு லட்சுமி கல்யாணம் என்ற சீரியலும் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
நானே வருவேன் சீரியல் இந்தியில் ராதா மோகன் (Pyar Ka Pehla Naam ) என்ற பெயரில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சீரியலாகும், இதில் ஷபீர் நாயகனாக நடிக்க நிஹாரிகா ராய் நாயகியாக நடித்துள்ளார்.  அதே இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள லட்சுமி கல்யாணம் சீரியல் ஹிந்தியில் பாக்கியலட்சுமி என்ற பெயரில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சீரியலாகும். இதில் ரோஹித் சுசாந்தி நாயகனாக நடிக்க ஐஸ்வர்யா கரே நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
வரும் திங்கள் முதல் இந்த இரண்டு சீரியல்களையும் உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

 Follow Us