Advertisment

திருட்டுத்தனமாக தாலி கட்டிய ஹீரோ: நாயகி முடிவு என்ன? வீரா அப்டேட்

ஜீ தமிழின் வீரா சீரியலில் ஹீரோ திருட்டுத்தனமாக நாயகிக்கு தாலி கட்டிவிட்டதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Veera serial

அதிரடியான ட்விஸ்ட்.. வள்ளி சொன்ன வார்த்தை, வீரா கழுத்தில் தாலி கட்டிய மாறன் - வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் வீரா, அரவிந்த் மணமேடை ஏறி விட வள்ளி மாறனிடம் எப்படியாவது வீரா கழுத்தில் தாலியை கட்டி விடு என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, வீராவுக்கும் அரவிந்துக்கும் கல்யாண ஏற்பாடுகள் நடக்கிறது, ஐயர் மந்திரம் சொல்லி முடிக்க அரவிந்த் வீரா கழுத்தில் தாலி கட்ட செல்கிறான். இந்த சமயத்தில் வள்ளி மாறா தாலியை கட்டிடு என்று கத்த மாறன் பின்னாடியில் இருந்து வீரா கழுத்தில் தாலியை கட்டி விட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர், அரவிந்த் குடும்பத்தினர் ராமச்சந்திரனை அவமானப்படுத்தி விட்டு அங்கிருந்து கிளம்பி செல்கின்றனர்.

ராமசந்திரன் மாறனை போட்டு அடிக்க வள்ளி தடுத்து அவனுக்கு ஆதராவாக பேசுகிறாள். உச்சகட்ட கோபத்துக்கு சென்ற கண்மணி இந்த கல்யாணம் செல்லவே செல்லாது என்று சொல்லி வீரா கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டி எறிய செல்கிறாள். வள்ளி தடுத்து நிறுத்தி கண்மணியை திட்ட அவள் உங்க குடும்ப சவகாசமே வேண்டாம் என்று வீராவை அழைத்து கொண்டு கிளம்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொல்ல வந்த ரவுடி.. ஓடி ஓடி ஒளியும் மனோகரி, நோ சொன்ன எழில் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் சுடரை வெளிநாட்டுக்கு போக சொல்லி எழில் டிக்கெட் போட்டு அனுப்பி வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது, கனகவல்லி சுடர் போன வருத்தத்தில் அப்படியே உட்கார்ந்து யோசனையில் இருக்க சுடர் இருக்கும் ஞாபகத்தில் சுடர் என கூப்பிட்டு வருத்தப்படுகிறாள். அதேபோல் இன்னொரு பக்கம் நான்கு குழந்தைகளும் சுடர் வெளிநாடு போயிட்டா இனிமே வரமாட்டா என்று சொல்லி வருத்தப்படும்போது மேலே செல்லும் ஏரோபிளேனை பார்த்து சுடர் இதுல தான் வெளிநாடு போகிறாள் என டாட்டா காட்டி பீல் பண்ணுகின்றனர்‌.

அதேபோல் எழிலும் இன்னொரு பக்கம் சுடரை நினைத்து பீல் செய்து கொண்டிருக்க மனோகரி எழில் என கூப்பிட்டு உள்ளே வர எழில் வா சுடர் என்று கூப்பிட மனோகரி அதிர்ச்சி அடைகிறாள். பிறகு எழில் அவளை சமாளிக்கிறான். அதன் பிறகு மனோகரி நம்முடைய கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு.. துணி எடுக்க போகலாம் என்று சொல்லிக் கூப்பிட எழில், நான்கு குழந்தைகள், மனோகரி என எல்லோரும் கிளம்பி செல்கின்றனர்.

துணி கடைக்கு வெளியே மனோகரி அவளை கொல்ல வந்த ரவுடியை பார்த்து விட பயந்து போய் கடைக்குள் ஓடி ஓடி ஒளிகிறாள். குழந்தைகள் மனோகரி எதுக்கு இப்படி ஒளிகிறாய் என அவளையே பின் தொடர்கின்றனர். அடுத்ததாக சுடர் அப்பாவுடன் இதே கடைக்கு வருகிறாள். வெளிநாடு போறதால் துணி எடுக்க கூட்டிட்டு வந்ததாக அவளது அப்பா சொல்கிறார். சுடர் எழிலை பார்த்து விட எழிலிடம் குழந்தைகளை நல்லா பார்த்துக்கோங்க, ஒரே முறை அஞ்சலி கிட்ட பேசிக் கொள்ளவா என்று கேட்க எழில் வேண்டாம் குழந்தைங்க பீல் பண்ணுவாங்க என்று நோ சொல்கிறான்.

பிறகு அஞ்சலி மிரர் வழியாக சுடரை பார்த்து அவளை தேடி வர சுடர் ஒளிந்து கொள்கிறாள். அஞ்சலியை காணாமல் மற்ற குழந்தைகள் அவளை தேடி வந்து இங்கே என்ன பண்ற என்று கேட்க அஞ்சலி சுடரை பார்த்ததாக சொல்கிறாள். பிறகு சுடரெல்லாம் இங்க வர மாட்டா என்று சொல்லி அஞ்சலியை அழைத்துச் சென்று டிரஸ் எடுக்கின்றனர். எல்லோரும் துணி எடுத்து முடிந்ததும் எழில் போகலாமா என்று கேட்க மனோகரி வெளியில் ரவுடி இருப்பதை நினைத்து பதறுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment