/indian-express-tamil/media/media_files/tStYLnxLAbLliZp0Iafj.jpg)
வித்யா நம்பர் 1 சீரியல்
ஜீ தமிழின் பிரபல சீரியலான வித்யா நம்பர் 1 சீரியல் வரும் பிப்ரவரி 25-ந் தேதியுடன் முடிவடைய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜீ தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியலான வித்யா நம்பர் 1 சீரியல், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை 600-க்கு மேற்பட்ட எபிசோடுகளை கடந்துள்ள இந்த சீரியல்,தெலுங்கு சீரியலான 'நம்பர் 1 கோடலு'வின் ரீமேக்காக ஒளிபரப்பானது. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளது.
தேஜஸ்வினி கவுடா, நிஹாரிகா ஹர்சு மற்றும் புவியரசு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியல்,அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஏற்படுத்தியது. வெற்றிகரமான தொழில்முனைவோரான வேதவல்லி மற்றும் அவரது மருமகள் வித்யாவின் வாழ்க்கையில் நடக்கும் கதை தான் 'வித்யா நம்பர்.1'. கல்வி, குடும்பம் மற்றும் இளைஞர்கள் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரின் சமீபததிய எபிசோடுகளில்,ஷீலா மற்றும் நிஹாரிக்கா ரஞ்சித் ஆகியோரால் கொண்டுரப்பட்ட வேதவல்லியின் மருமகள் வித்யாவை ஏற்றுக்கொள்ளும் காட்சிகள் இருந்தது. இவர்களிடையே இருந்த நீண்டகால மோதல்களின் தீர்வும், அவர்கள் குணாதிசயங்களின் உச்சக்கட்டமும் உணர்ச்சிப்பூர்வமான இறுதிகட்டத்திற்கு வழி செய்துள்ளது.
தற்போது 'வித்யா நம்பர்.1' இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இந்த சீரியலின் க்ளைமேக்ஸ் எபிசோடு எப்படி இரக்கும்எ னப்து குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது மறக்கமுடியாத கேரக்டர்கள் மற்றும் எல்லா காலக்கட்டத்திலும் அனைவருக்கும் தேவைப்படும் முக்கிமான கல்வியை அடிப்படையாக கொண்ட இந்த சீரியல், ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடிக்கும் என்று நம்பலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.