பொதுவாக இல்லத்தரசிகள் மத்தியில் சின்னத்திரை சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதை கருத்தில் கொண்டு பல சேனல்கள் அடிக்கடி புதிய சீரியல்களை களமிறக்கி வருகின்றனர். இதில் டாப்பில் உள்ள ஒரு சில சேனல்களுக்கு இடையே சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் பெரிய போட்டி நடந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு சீரியலுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
அதிலும் கொரோனா தொற்று காலத்தில் அமல்படுத்தப்பட்ட லக்டவுன் சமயத்தில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் பெரியவர்கள் என அனைவருமே சீரியல் ரசிகர்களாக மாறிவிட்டார்கள். இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுதும் ஒரு முயற்சியாக சினிமாவில் பிரபலமான காட்சிகளை ரீ-கிரியேட் செய்து சீரியலில் புகுத்தும் வழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு நாள் படத்தில் இதய மாற்று அறுவை சிகிச்சை காட்சியை விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் ரீ-கிரியெட் செய்தது. ஆனால் குடும்ப நிகழ்வுகளை கொண்ட இந்த சீரியலுக்கு இந்த காட்சி அவசியம் தானா சீரியல் எதை நோக்கி செல்கிறது என்றே தெரியவில்லை என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.
அதற்கு முன்பே விஜய் டிவியின் மற்றொரு சீரியலில் ராஜா ராணி படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை அந்த படத்தின் பேக்ரவுண்ட் மியூசிக்குடன் ரீ-கிரியேட் செய்திருந்தனர். அதேபோல் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் ஆறு படத்தில் சூர்யா த்ரிஷா நடித்த காட்சிகளை ரீ-கிரியேட் செய்திருந்தனர். இதெல்லாம் இப்படி இருக்க விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் சீரியல் முத்து படத்தின் காப்பி என்றே சொல்லிவிட்டனர்.
தற்போது வெளியாகும் பெரும்பாலான சீரியல்கள் ஹிட்டான சினிமா படத்தின் டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி இருக்கும்போது சினிமாவில் இருந்து காட்சிகளை ரீ-கிரியேட் செய்ததை பார்க்கும் ரசிகர்கள் டைட்டில் தான் காப்பி என்றால் காட்சிகளும் காப்பியா என்று கேட்க தொடங்கிவிட்டனர். இந்த பட்டியலில் தற்போது புதிதாக இணைந்துள்ளது ஜீ தமிழின் சத்யா சீரியல்.
ரசிகர்களின் ரசனைக்கேற்ப சீரியல் ஒளிபரப்பும் சேனல்களில் ஒன்றான ஜீ தமிழில் சீசன் 1 முடிந்து சீசன் 2 ஹிட்டாக சென்றுகொண்டிருக்கும் சீரியல் தான் சத்யா. இந்த சீரியலின் டைட்டிலும் கமல் நடித்த படத்தின் டைட்டில் தான். ஜீ பெங்காலி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சிந்துரா பிந்து என்ற சீரியலின் ரீமேக் தான் இந்த சத்யா சீரியல். ஆயிஷா மற்றும் விஷ்ணு ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் தற்போது சீசன் 2-ல் அடியெடுத்து வைத்துள்ளது.
நல்ல வரவேற்பை பெற்று வரும் சத்யா சீரியல் சமீப தினங்களாக கடுமையாக கேலி கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது. மற்ற சீரியல்களை போல சத்யாவிலும் சினிமா காட்சிகளை ரீ-கிரியேட் செய்துள்ளனர். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்தது தெறி. இந்த படத்தின் பள்ளிக்கூட காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம். பள்ளியில் கலாட்டா செய்யும் ரவுடிகளை படிக்க சொல்லி திருத்தும் இந்த காட்சி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த காட்சியை அப்படியே சத்யா 2 சீரியலில் ரீ-கிரியேட் செய்துள்ளனர். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் சீரியலுக்கு இந்த காட்சி தேவையதான என்று கடுமையாக கேலியும் கிண்டலும் செய்தனர். ஆனாலும் மனம் தளராத சீரியல் டீம் தற்போது ரஜினிகாந்த் படத்தை கையில் எடுத்துள்ளது. ரஜினிகாந்த் நடித்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய படையப்பா படம் மாஸ் வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த படத்தில் ரம்யாக கிருஷ்ணனை பார்க்க அவரது வீட்டிற்கு வரும் ரஜினிக்கு நாற்காலி போடாமல் ரம்யா கிருஷ்ணன் மட்டும் அமர்ந்திருப்பார். இதை பார்த் ரஜினி மேலே கட்டி வைத்துள்ள ஊஞ்சலை இழுத்து அதில் அமர்ந்து பேசுவார். தற்போது இந்த சீனை பிஜிஎம் மியூசிக் மாறாமல் சத்யா 2 சீரியலில் ரீ-கிரியேட் செய்துள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் 2 முன்னணி நடிகர்களின் படங்களை இப்படியா கலாய்ப்பது என்று கூறி வருகின்றனர்.