தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மதியம் 12.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி தமிழா தமிழா. ஆவுடையப்பன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து மாறுபட்ட தலைப்புகளை கையில் எடுத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
Advertisment
அந்த வகையில் இந்த வாரம் ரியல் காதல் காவியங்களை கொண்டாடும் அரங்கமாக தமிழா தமிழா மேடை மாற உள்ளது. இது குறித்து வெளியான ப்ரோமோ வீடியோவில் மதம், இனம், நாடு, மொழி இவற்றையெல்லாம் கடந்து திருமணம் செய்து கொண்ட காதலிக்க ஜோடிகளின் காவியமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
வெளிநாட்டை சேர்ந்த நபரும் தமிழகத்தை சேர்ந்த பெண்ணும் சமூக வளைதளத்தின் மூலம் அறிமுகமாகி முதல் முறை நேரில் சந்தித்து காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்ட கதையை தெரிவித்துள்ளனர். அதே போல் கேரளாவை சேர்ந்த பெண்ணும் தமிழகத்தை சேர்ந்த ஆணும் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் தங்களுக்குள் பாஷை ஒரு பிரச்சனையாக இல்லை, காதலுக்கு பாஷை எல்லாம் கிடையாது எனவும் பேசியுள்ளனர்.
Advertisment
Advertisements
இது குறித்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“