Bharathi Kannamma Venba Farina Azad Quit Abi Taylor Serial : விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வரும் இந்த சீரியலில், பாரதியாக அருண்பிரசாத், கண்ணம்மாவாக வினுஷா தேவி, வெண்பாவாக ஃபரீனா ஆசாத் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சந்தேகத்தை அடிப்படியாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல், விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில, கடந்த சில எபிசோடுகள் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் விதமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் இந்த சீரியலக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில், வினுஷா தேவிக்கு முன்பாக இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷ்னி ஹரிப்பிரியன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென சீரியலில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து சீரியல்ல அவரது தங்கை அஞ்சலி கேரக்டரில் நடித்து வந்த நடிகை கண்மணி மனோகரன் விலகினார். இவர்களுக்கு முன்பாகவே பாரதியின் தம்பி அகிலாக நடித்து வந்த அகிலன் இந்த விலகலுக்கு அச்சாரம் அமைத்து வைத்தார்.
ஆனால் ஃபரீனா ஆசாத் தான் கர்ப்பமாக இருந்த காலத்திலும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்தார். அப்போது அவர் சீரியலை விட்டு வெளியேறுவார் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், ஃபரீனா ஆசாத் டெலிவரிக்கு முன்பு வரை பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். அவர் டெலிவரிக்கு சென்றபோது கூட அவரது கேரக்டர் ஜெயிலுக்கு சென்றுவிட்டது போல் காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் டெலிவரி முடிந்து வரும்போது ஜெயிலில் இருந்து விடுதலையாகி வருவது போல் காட்சிகள் வைக்கப்பட்டது.
இப்படி பாரதி கண்ணம்மா சீரியலின் முக்கிய ஐகானாக திகழ்ந்து வந்த ஃப்ரீனா ஆசாத், கலர்ஸ் தமிழின் அபி டெய்லர் தொடரிலும் நடித்து வந்தார். ஆனால் தற்போது தற்போது இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காரணம் என்ன என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ள நிலையில், இது குறித்து ஃப்ரீனா ஆசாத்தில் விரைவில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலான அபி டெய்லர் தொடரில் ராஜபார்வை சீரியலின் கீர்த்தி கமிட் ஆகியுள்ளார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “