DMDK Leader Vijayakanth Medical Report : கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து கேப்டன் என்ற அந்தஸ்துடன் திரைத்துறையில் வலம் வந்த விஜயகாந்த், அடுத்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலிலும் கால் பதித்தார் திரைத்துறையை போல் அரசியலில் வெற்றிகண்ட் விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் என்ற உயரிய அந்தஸ்தை பெற்றார்.
தொடர்ந்து சினிமா அரசியல் என பிஸியாக் இருந்த விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு. அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்களும் தொண்டர்ளும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த வார இறுதியில் விஜயகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் இது வழக்கமான மருத்துவ பரிசோதனைதான் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவார் என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில். விஜயகாந்த்க்கு நீரிழிவு நோய் இருப்பதன் காரணமாக அவரது வலது காலில் இருந்து விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில்.
நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாநதின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் இரத்த ஓட்டம் சீராக இல்லாததால். மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்கானிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.
மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து கேப்டனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து கேப்டன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். மேலும் கேப்டன் உடலிநலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள். தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதே அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்து வந்த நிலையில். தற்போது அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டது தொடர்பான தகவல் அக்கட்சியினர் மற்றும் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.