Advertisment

விஜயகாந்துக்கு அஞ்சலி; ஒன்று கூடிய நடிகர் சங்கம்: பிரபலங்கள் பேசியது என்ன?

கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த். அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகிய நிலையில், கடந்த டிசம்பர் 28-ந் தேதி மருத்துவமனையில் மரணமடைந்தார்.

author-image
WebDesk
New Update
Vijayakanth Condelance Actress.jpg

கேப்டன் விஜயகாந்த்

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி அடையாளத்தை பெற்றுள்ள கேப்டன் விஜயகாந்த், கடந்த டிசம்பர் 28-ந் தேதி மரணமடைந்த நிலையில், அவரது மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

Advertisment

கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த். அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகிய நிலையில், கடந்த டிசம்பர் 28-ந் தேதி மருத்துவமனையில் மரணமடைந்தார். அரசியல் தலைவர்கள்திரையுலக பிரபலங்கள் அவரது மறைவுக்கு நெரில் அஞ்சலி செலுத்திய நிலையில்தனுஷ்சூர்யாகார்த்திவிஷால்அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் வெளிநாட்டில் இருப்பதால் சமூகவலைதளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்திருந்தனர்.

பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடல்டிசம்பர் 29-ந் தேதி 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்றுமுதல் பல பிரபலங்கள்விஜயகாந்த் ரசிகர்கள்தேமுதிக தொண்டர்கள் என பலரும் அங்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே வெளிநாட்டில் இருந்து திரும்பிய நடிகர்கள் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இதனயடுத்து நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை காமராஜர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இரங்கல் கூட்டத்தில் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் பங்கேற்று கேப்டன் விஜயகாந்த் குறித்து தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

அந்த வகையில் இந்த இரங்கல் கூட்டத்தில் பேசிய நடிகர் சரத்குமார்,

இந்த கூட்டத்தில் நான் கலந்துகொள்வேன் என்று நினைக்கவே இல்லை. கேப்டனின் மரணம் தமிழகத்திற்கு மாபெரும் இழப்பு. 90-களில் நான் திரைத்துறையில் சரிவை சந்தித்தபோது, விஜயகாந்த் என்னை அழைத்து அவரது படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்திற்கு நடிப்பதற்காக மீசை எடுத்தேன். அதேபோன்று இப்போது மீசை எடுத்துள்ளேன்.

புலன் விசாரணை படத்தில் உங்களுக்குதான் முதல் பெயர் என்று விஜயகாந்த் சொன்னார். இந்த மாதிரி யாரும் பெருந்தன்மையாக தன்னை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். கேப்டன் மறைவுக்கு வடிவேலு வரவில்லை என்று பேச்சு உள்ளது. வடிவேலு வராமல் வீட்டில் இருந்து அழுதிருக்கலாம். யாரையும் எதிர்த்து குறைகூறுபவர் கேப்டன் விஜயகாந்த் அல்ல. வந்தால் திட்டுவார்கள் என்பதால் வடிவேலு வீட்டில் இருந்து அழுதிருக்கலாம் என்று சரத்குமார் பேசினார்.

நடிகர் கமல்ஹாசன்

விஜயகாந்தை நான் முதலில் சந்தித்தபோது, அவர் என்னிட்டம் எப்படி பழகினாரோ அதேபோல் போல் தான் உச்ச நட்சத்திரம் ஆன பிறகும் என்னிடம் பழகினார். பல விமர்சனங்கள் அவமானங்களை தாண்டி வெற்றி பெற்றவர். அதற்காக எந்த காழ்புணர்ச்சியும் வைத்துக்கொள்ளாமல், தனக்கு ஏற்பட்ட அவமானம் வேறு யாருக்கும் ஏற்பட்டுவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர். மற்றவர்களுக்காக போராடும் குணம் அவருடையது. எனக்கு அவரிடம் பிடித்த குணமே அவரது நியாயமான கோபம் தான்.

அவருடைய கோபம் நடிகர் சங்கத்திற்கு உதவி இருக்கிறது. அவர் நடித்த தூரத்து இடி முழக்கம் படம் திரைப்பட விழாவுக்கு போக வேண்டிய படம். அதில் இருந்து ஒரு கமர்ஷியல் ஹீரோவாக வந்தது அவரது திறமை. தனக்கு பிடிக்காதவர்களையும் அழைத்து பேசும் குணம் அவருக்கு உண்டு. அவர் மாதிரியான குணாதிசயங்களை அவரிடம் இருந்து காப்பி அடிக்கலாம். அவர்போல் இருக்க முயற்சியாவது செய்ய வேண்டும். குட் பை கேப்டன் என்று பேசியுள்ளார்.

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி

சாதாரண திரைப்பட கல்லூரி மாணவராக இருந்த என்னை ஆர்.கே.செல்வமணி என்று அடையாளம் காட்டியவது கேப்டன் விஜயகாந்த் தான். சமூகத்திற்கு பயன்படாமல் இருப்பவன் மனிதனே இல்லை. நெய்வேலி போராட்டத்திற்கு நடிகர் சங்க உறுப்பினர்களை அழைத்து சென்றார். இந்த நிகழ்வை அனைவரும் பாராட்டினார்கள். நடிகர் சங்கம் தலைநிமிர்ந்து நடப்பதற்கு காரணம் விஜயகாந்த் தான். ஆகவே நடிகர் சங்கத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும்.

இதற்காக ஆலோசனை நடத்துவோம் என்று கூறினால் எனது பதவியை கூட ராஜினாமா செய்வேன். இதே மேடையில் கூடி முடிவு எடுக்க வேண்டும். பொதுக்குழு கூடி அவரது பெயரை சூட்ட முடிவு செய்ய வேண்டும். நடிகர் சங்கம் தனது நன்றிக்கடனை செலுத்த இதுதான் வழி. பொது சொத்தை எடுத்துக்கொள்ளாத ஒரு தலைவன். காந்தி கூட பொது இடத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டார். ஆனால் விஜயகாந்த் பொது சொத்து வேண்டாம் என்று தனது சொந்த இடத்திலேயே அடக்கமாக்கியுள்ளார். மீண்டும் அழுத்தமாக சொல்கிறேன். நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் சார் பெயரை தான் வைக்க வேண்டும்.

நடிகர் கருணாஸ்

1987-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சின்ன கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்தேன். விஜயகாந்தின் உதவியாளர் சுப்பையா மூலம் எனக்கு அவரின் பழக்கம் கிடைத்தது. இதுவரை நான் இதை எங்கேயும் வெளிப்படுத்தியது கிடையாது. திரைத்துறைக்கு வந்தபிறகு, நெய்வேலி போராட்டம். நடிகர் சங்க கடனை அடைக்க நிகழ்ச்சி ஆகியவற்றில் விஜயகாந்துடன் பங்கேற்றுள்ளேன். அதன்பிறகு அவருடன் சுதேசி படத்தில் நடித்திருக்கிறேன்.

அந்த படத்தில் நடிக்கும்போது நிறைய படங்கள் நடித்தால் தான் உனக்கென்று ஒரு படம் வொர்க்அவுட் ஆகும் என்று எனக்கு நிறைய அறிவுரைகள் வழங்கினார். எண்ணம் நல்லதாக இருந்தால் யாராக இருந்தாலும் விஜயகாந்தாக இருக்கலாம். எனது 23 ஆண்டு திரை பயணத்தில் 160-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். ஆனால் நான் பார்த்த நடிகர்களில் உண்மையான சூப்பர் ஸ்டார் விஜயகாந்த் தான் என்று பேசியுள்ளார்.

நடிகர் ஜெயம்ரவி

சத்ரியனுக்கு சாவே இல்லை என்று அவரது வசனத்தை தான் இங்கு சொல்ல வேண்டி உள்ளது. பள்ளி பாட புத்தகத்தில் கேப்டன் பற்றி இடம்பெற வேண்டும். மனிதன் என்றால் எப்படி வழ வேண்டும் என்பதை பற்றி அந்த பாடம் இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

நடிகர் விஷால்

எங்கள் சாமி விஜயகாந்த் அண்ணன் வாழ்ந்த பூமியில் வாழும் மனிதனாகவும், கேப்டன் விஜயகாந்த் ரசிகனாகவும், இவருடைய நடிகர் சங்கத்தில் நானும் ஒரு உறுப்பினராகவும், தே.மு.தி.க கட்சிக்கு வாக்களித்த வாக்காளராகவும் இருப்பதில் மகிழ்ச்சி. அவர் வாழும்போதே கடவுளாக இருந்தவர். உதவி இயக்குனர்கள் அனைவரும் விஜயகாந்த் ஆபீஸ்க்கு சென்றால் சாப்பாடு கிடைக்கும் என்று போய் சாப்பிடுவார்கள். எங்களை மாதிரி இளைஞர்களை ஊக்கப்படுத்தியவர்.

அவர் இறப்பின்போது நான் ஊரில் இருந்திருக்க வேண்டும். ஆனால் இல்லாமல் போனதற்கு அவரது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு ஒரு தலைவனை மிஸ் பண்ணிடுச்சி. நடிகர் சங்கத்தை மீட்டு ஒரு குடும்பமாக கொண்டுவந்தார். 54 புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியவர் விஜயகாந்த். இவர் செய்த சாதனைகளை இந்தியாவில் யாரும் செய்ததில்லை என்று பேசியுள்ளார். அதேபோல் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் படத்தில் நடிக்க தயார் எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம் என்று கூறியுள்ளார்.

நடிகர் நாசர்

விஜயகாந்த் அணியும் வெள்ளை வேட்டி சட்டையில் ஒரு சின்ன கரும்புள்ளி இல்லால் பார்த்துக்கொண்டவர். நடிகர் சங்கத்தை மீட்டெடுத்து, சிறிய நடிகர்கள் பெரிய நடிகர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் கோழி தன் குஞ்சுகளை அடைகாப்பது போல், அனைவரையும் அரவணைத்தவர். அவர் கொடுத்த ஊக்கம், யோசனை, தைரியம் நம்மாலும் அதை செய்ய முடிந்தது. அதற்காக அவருக்கு நான் காலம் முழுவதும் நன்றியுடன் இருப்பேன். இன்று தென்னிந்திய நடிகர் சங்கம் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது என்றால், இங்கு அவரது வருகை எங்களுக்கு ஒரு பெரிய மேடையை அமைத்து கொடுத்தது என்று கூறியுள்ளார்.

விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்

என் அப்பா இல்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அவர் இல்லாமல் வாடும் உங்களுக்காக தான் அவர் எங்களை விட்டு சென்றுள்ளார். எங்கள் அப்பாவின் ஆசையை நானும் சண்முகபாண்டியனும் கண்டிப்பான நிறைவேற்றுவோம். அவர் இறப்பதற்கு முன்பு சுயநினைவு இல்லை, பேசமாட்டார் என்றெல்லாம் வலைதளங்களில் யூடியூப் சேனலிகளில் செய்திகள் பரவியது. ஆனால் அவரது இழறப்பதற்கு முன் டிசம்பர் 25-ந் தேதி அவரின் பழைய பாடல்களை கேட்டு ரசித்துள்ளார். இது எனக்கே தெரியாது எங்கள் வீட்டு டிரைவர் தான் சொன்னார் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment