Advertisment

நடிகர் சத்யராஜ் தாயார் மரணம் : முக்கிய அமைச்சர்கள் நேரில் அஞ்சலி

நடிகர் சத்தியராஜின் தாயார் மறைந்த நாதாம்பாள்(93) வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் மரணமடைந்தார்.

author-image
WebDesk
New Update
sathyaraj

நடிகர் சத்யராஜ்

நடிகர் சத்தியராஜின் மறைந்த தாயார் உடலுக்கு அமைச்சர்கள் முத்துச்சாமி, ரகுபதி, வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் மலர் மாலை அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

தமிழ் சினமாவில் தற்போது முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வரும் நடிகர் சத்தியராஜின் தாயார் மறைந்த நாதாம்பாள்(93) வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில்,  அவரது உடலுக்கு திமுக துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக வீட்டுவசதி நகர்புற வளர்ச்சி, மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துச்சாமி, தமிழக செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் சத்தியராஜின் தாயார் உடலுக்கு மலர் மாலை அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து நடிகர் சத்தியராஜிற்கு ஆறுதல் கூறிய அவர்கள், மறைந்த திருமதி நாதாம்பாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் பாப்பநாயக்கன் பாளையம் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sathyaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment