scorecardresearch

உதயநிதியை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்

உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற அன்றே இனி திரைப்படங்களில் நடக்க போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

உதயநிதியை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்

நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவர் அமைச்சராக பொறுப்பேற்ற அன்றே இனி திரைப்படங்களில் நடக்க போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனாலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக உதயநிதி இருந்து வருகிறார்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று (ஜனவரி 12) தலைமைச் செயலகத்தில் அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த சந்திப்பில், தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சச்சு, லதா, சோனியா, விக்னேஷ், நந்தா, பிரேம்குமார், ஶ்ரீமன், தளபதி தினேஷ், ஹேமச்சந்திரன், பிரகாஷ், காளிமுத்து, வாசுதேவன், நடிகர் சங்க மேலாளர் தாம்ராஜ், துணை மேலாளர் ரத்தினகுமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu actors association administrators meet minister udhayanithi