Advertisment

அமைச்சர் துரைமுருகன் மீது அஜித் ரசிகர்கள் திடீர் கோபம்: கலைஞர் விழாவில் அஜித் பேசியதை ட்ரெண்ட் செய்து பதிலடி

சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரும் காலக்கட்டத்தில் தங்களுக்கு அரசியல் வேண்டாம், அரசியலுக்கு வர வேண்டும் என்ற கட்டாயப்படுத்த வேண்டாம் என்று நடிகர் அஜித் பேசியுள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ajith Durai Murugan

அஜித்குமார் - துரைமுருகன்

சினிமாவில் நடிகராக இருந்து அரசியலுக்கு வரும் நிகழ்வு எம்.ஜி.ஆர் காலத்தில் தொடங்கப்பட்டது என்றாலும் கூட அந்த முறை இப்போதும் தொடர்ந்து வருகிறது. இன்றைய காலக்கட்டத்தில் சமூகவலைதளங்கள் மற்றும் மீடியாக்கள் பெருகிவிட்டாலும் சினிமாவின் மூலமே தங்களுக்கென தனி கூட்டத்தை உருவாக்குவதும் பாமர மக்களைிடையே தங்களது முகத்தை பதிய வைப்பது போன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.

Advertisment

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த எம்.ஜி.ஆர் தொடர்ந்து 3 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். அதேபோல் கலைஞர் கருணாநிதியும் சினிமாவில் தனது அழுத்தமான வசனங்கள் மூலம் புகழ் பெற்று அரசியலுக்கு வந்து பின்னாளில் முதல்வராக பொறுப்பேற்றிருந்தார். அதேபோல் தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் தொடக்கத்தில் ஒருசில படங்களில் நடிகராக தன்னை முன்னிலை படுத்திக்கொண்டார்.

அந்த வகையில் வந்த ஜெயலலிதாவும் தமிழகத்தில் முதல்வராக இருந்த நிலையில், சமீப காலத்தில் விஜயகாந்த் அரசியல் கட்சி குறுகிய காலத்தில் எதிர்கட்சி தலைவராக பொறுப்பெற்று அசத்தினார். அந்த வரிசையில் தற்போது நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவதாகவும் அதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

இந்த மாதிரி சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரும் காலக்கட்டத்தில் தங்களுக்கு அரசியல் வேண்டாம், அரசியலுக்கு வர வேண்டும் என்ற கட்டாயப்படுத்த வேண்டாம் என்று நடிகர் அஜித் கலைஞர் முன்னிலையில் பேசிய வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் முதல் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அனைவருமே கலைஞர் கருணாநிதி குறித்து புகழ் பேசிய நிலையில், நடிகர் அஜித் மட்டும் அதற்கு நேர்மாறாக எங்களுக்கு அரசியல் வேண்டாம் அரசியலுக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தவும் வேண்டாம் என்று பேசியிருந்தார். இந்த பேச்சை கேட்ட கருணாநிதியின் அருகில் அமர்ந்திருந்த நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைத்தட்டினார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதற்கு திமுகவின் மூத்த தலைவரும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தான். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, துரைமுருகனிடம் தொகுப்பாளர் அஜித் விஜய் படங்களை பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார். இதற்கு அஜித்துன்னா யாரு என்று துரைமுருகன் கேட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

மேலும் துரைமுருகனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அஜித் கருணாநிதி நிகழ்ச்சியில் பேசிய வீடியோ பதிவை வெளியிட்டு இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment