தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக கவிஞர் கபிலனின் மகள் தூரிகை (28) நேற்று திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆங்கில ஊடகம் ஒன்றில் கட்டுறை எழுதி வந்த தூரிகை பீயிங் வுமன் என்ற இணைய இதழை நடத்தி வந்துள்ளார். எழுத்தாளரான இவர், சில படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இதனிடையே தூரிக்கை தற்கோலை செய்துகொண்டது தமிழ் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பதிவில்,
புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான அன்புத்தம்பி கபிலன் அவர்களின் மகள் தூரிகை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனத்துயரமும் அடைந்தேன்.
தன் உயிருக்கினிய அன்புமகளைப் பறிகொடுத்துவிட்டு, பேரிழப்பில் சிக்கித்தவிக்கும் தம்பியை ஆற்றுப்படுத்தவும் தேற்றவும் சொற்களின்றி கலங்கித்தவிக்கிறேன். கொடுந்துயரில் சிக்குண்டிருக்கும் தம்பி கபிலனுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆறுதலைத்தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்
மக்கள்கவி கபிலன் அவர்களின் அன்புமகள் தூரிகையின் மறைவு பெருந்துயரமளிக்கிறது. செப்-16 அன்று அவரது பீயிங் வுமன் இதழின் சார்பில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கும்படி அலைபேசிவழி எனக்கு அழைப்பு விடுத்தார். தன் தந்தையைப்போல பெரும்புகழுடன் பெருமகிழ்வுடன் வாழவேண்டிய இளநங்கைக்கு வீரவணக்கம் என்று தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“