வருமான வரி தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக நடிகர் விஜய் தாக்கல் செய்த ரிட் மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை 3 வார காலத்திற்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது அவர் தனது வருமானம் குறித்த கணக்குகளை சரியாக காட்டவில்லை என்பதை குறிக்கும் வகையில் அவது வீட்டில் இருந்து சில பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
2015-ம் ஆண்டு சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்த புலி படம் வெளியானது. இந்த படத்தை எஸ்.கே.டி ஸ்டுடியோவின் மூலம் பி.டிசெல்வகுமார் மற்றும் ஷிபு ஆகியோர் தயாரித்திருந்தனர். இந்த படத்திற்காக விஜய்க்கு காசோலை மூலம் ₹16 கோடி சம்பளம் தவிர ₹4.93 கோடி பணம் வழங்கியுள்ளனர். இதில் காசோலையில் உள்ள பணத்திற்கு மட்டுமே வரி (டிடிஎஸ்) செலுத்தப்பட்டது.
இது குறித்து அவரிடம் கேட்டபோது ரூ5 கோடி ரொக்கமாக பெற்றதை ஒப்புக்கொண்டதாகவும், அதற்கான வரியை செலுத்துவதாக சொன்னதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அவரது வருமானத்தைத் தாக்கல் செய்யும் போது, அவர் தனது ரசிகர் மன்றத்திற்காக செலவழிக்கப்பட்ட ரூ64.71 லட்சம் போன்ற சில செலவுகளுக்கு வரி விலக்கு கோரியதே அவருக்கு அபராதம் விதிக்க வழிவகுத்தது.
இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ1.5 கோடி அபாராதம் விதித்து உத்தரவிட்டிருந்தனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் வருமாவரித்துறை அதிகரிகள் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் நீதிமன்றத்தில் மது தாக்கல் செய்திருந்தார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வழக்கை ஒத்திவைக்கக் கோரியதை அடுத்து, அக்டோபர் 30-ம் தேதி வழக்கை பட்டியலிட உயர் நீதிமன்றப் பதிவுத்துறைக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டார்.
முன்னதாக ஆகஸ்ட் 16, 2022 அன்று இந்த வழக்கு சேர்க்கைக்கு பட்டியலிடப்பட்டபோது, வரம்புக்குட்பட்ட காலத்திற்கு அப்பால் அபராதம் விதிக்கப்பட்டதன் அடிப்படையில் அபராதத் தொகையை வசூலிப்பதில் இருந்து வருமானவரித்துறைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி அனிதா சுமந்த் வருமான வரிச் சட்டம், 1961 இன் 275(1) பிரிவின்படி, அபராதம் ஜூன் 30, 2019 அல்லது அதற்கு முன் விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
அதன்பிறகு, I-T துறையின் மூத்த நிலை வழக்கறிஞர் ஏ.பி.ஸ்ரீநிவாஸ், அபராதம் விதிக்கப்பட்டதற்கான காரணங்களை விளக்கி விரிவான எதிர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார். பின்னர், பிப்ரவரி 21, 2023 அன்று, நீதிபதி அப்துல் குத்தோஸ், ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்பட்ட இடைக்காலத் தடை, மறு உத்தரவு வரும் வரை தொடரும் என்று உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.