Advertisment

சிறுவர்களை கொடூரமாக தாக்கிய விவகாரம்: பாடகர் மனோவின் 2 மகன்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு

தனது நண்பர்களுடன் இணைந்து சிறுவர்களை தாக்கியதாக கூறி பாடகர் மனோவின் மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Singer Mano

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகராக இருக்கும் மனோ தற்போது சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வரும் நிலையில், இவரது மகன், குடிபோதையில் சிறுவர்களை தாக்கியதாக கூறி 3 பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

1986-ம் ஆண்டு தமிழில் வெளியான பூவிழி வாசலிலே என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானவர் மனோ. தொடர்ந்து வேலைக்காரன், நாயகன், கரகாட்டக்கரான் உள்ளிட்ட பல பெரிய வெற்றிப்படங்களில் பாடல்கள் பாடியுள்ள இவர், கடைசியாக, கடந்த 2016-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காதலும் கடந்து போகும் படத்தில் அக்கம் பக்கம் பார் என்ற பாடலை பாடியிருந்தார். 

தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல பாடல்கள பாடியுள்ள மனோ, தற்போது விஜய் டிவியின் மயூசிக் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வருகிறார். இதனிடையே மனோவின் மகன் நேற்று இரவு மதுபோதையில் சிறுவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு தனது நண்பர்கள் சிலருடன் சென்ற பாடகர் மனோவின் மகன், அங்கு 2 சிறுவர்களை சராமரியாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 16 வயது சிறுவன் ஒருவனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் பாடகர் மனோ வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதில் முதற்கட்ட விசாரணையில், மனோவின்’ மகன் குடிபோதையில் இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மனோவின் மகன் மற்றும் அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவின் புகழ்பெற்ற பாடகராக இருக்கும் மனோவின் மகன், சிறுவர்களை தாக்கிய சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான மனோவின் மகன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே பாடகர் மனோவின் இரு மகன்களும் தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment