/tamil-ie/media/media_files/uploads/2021/12/Jaguar-Thangam.jpg)
Stunt Master Jaguar Thangam Compliant Against Former Members : நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு வீசியதாக தன்மீது அவதூறு பரப்புமட் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சினிமா சண்டை பயற்சியாளர் ஜாக்குவார் தங்கம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சமீப வருடங்களாக பிரபலங்கள் வீட்டிற்கு வெடிக்குண்டு மிரட்டல் குறித்த தகவல்கள் தொடர்ந்து வருகிறது. இப்படி வரும் அனைத்து தகவல்களும் கடைசியில் புரளியில் முடிந்துள்ளது. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் வீட்டிற்கு சினிமா சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் வெடிகுண்டு வீசியதாக சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும், இந்த அவதூரை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜாக்குவார் தங்கம் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த ஜாக்குவார் தங்கம் அளித்த புகாரில்,
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும் நான் 1600-க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறேன். இந்த சங்கத்தில் உறுப்பினாகளாக இருந்த சேகர், துரைசாமி உள்ளிட்ட 4 பேர், முறைகேடாக போலி லெட்டர் பேடு தயார் செய்து அதில் என் கையெழத்து இல்லாமல் சங்கத்தின் நிதியில் இருந்து கையாடல் செய்ய முயற்சித்த விவகாரத்தில் சங்க அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.
ஆனால் பாலசுப்பிரமணியன் என்பவர் சங்கத்தில் லோகோவை முறைகேடாக பயன்படுத்தி வருகிறார். அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இவர்கள், சமூக வலைதளங்களில், நான் நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு வீசியதாக அவதூறு தகவல்களை பரப்பி வருகின்றனர். மேலும் தனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us