கொரோனா தேவி சிலையா, வனிதா சிலையா? அம்மணி ரெஸ்பான்ஸை பாருங்க!

Corona Devi Statue Same Vaitha Vijayakumar : கோவையில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தேவி சிலை நடிகை வனிதா விஜயகுமார் போன்று உள்ளதாக மீம் வெளியானியுள்ளது.

தமிழில் விஜய்யுடன் 1995-ம் ஆண்டு வெளியான சநதிரலேகா படத்தின் மூலம் சினிமாவில் அறமுகமான வனிதா விஜயகுமார் அதன்பிறகு ஒரு சில படங்களில் நாயகியாக நடித்தார். அதன்பிறகு சினிமாவில் இருந்து விலகிய அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு புகழ்பெற்றார். அதனைத் தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

பிக்பாஸ’ நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், அவற்றை எல்லாம் கடந்து அந்தகன், அனல்காற்று, உள்ளிட்ட சில படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். மேலும் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வரும் இவர், அந்த சேனலில், சமையல், அழகுக்கலை, உடல் எடை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி வீடியோ வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் 2-வது அலை நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வரும் நிலையில், தினசரி பாதிப்பு மற்றும் பலி எணிணிக்கை கனிசாமாக உயர்ந்து வருகிறது. இதனால் கொரோனாவில் ஆக்ரோஷத்தை தனிக்கும் வகையில், கோயம்பத்தூரில் கொரோனா தேவி சிலை வைக்கப்பட்டு கோவிலில் யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொரோனா தேவி சிலையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால் தற்போது இந்த சிலையுடன் வனிதா விஜயகுமாரை இணைத்து மீம்க்கள் இணைத்தில் வெளியாகி வருகிறது. வடிவமைக்கப்பட்ட கொரோனா தேவி சிலை வனிதா விஜயகுமார் போன்று இருப்பதாக கூறி நெட்டிசன்கள் மீம்கழள பறக்கவிட்டு வருகின்றனர். “என்னடா கொரோனா தேவிக்கு சிலை வைக்குறேன்னு வனிதாவுக்கு சிலை வச்சிருக்கீங்க” என ஒரு மீமில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மீம்க்கு பதில் அளித்து வனிதா விஜயகுமார், தனது ட்விட்டரில் பகிர்ந்து ‘ஜெய் கொரோனா தேவி’ என குறிப்பிட்டு உள்ளார். மேலும் கொரோனா தேவி சிலை போட்டோவையும் மீம்களையும் பலரும் தனக்கு அனுப்பி வருவதால் டென்ஷன் ஆன வனிதா, ‘எனக்கு ஏன் அனுப்புகிறீர்கள்’ (“Omg whats this everyone has been sending me this pic and memes”) என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu coimabatore corona devi statue same vaitha vijayakumar

Next Story
ஒளிபரப்பு நேரம் திடீர் மாற்றம்: கண்ணம்மாவுக்கு நேரடி போட்டியாக ரோஜா!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com