Advertisment

குடும்பத்தினரை மிரட்டும் போலீஸ் : தலைமறைவாக இருந்த ரவுடி கோவை நீதிமன்றத்தில் சரண்

தன் மீது 15"வழக்குகள் இருப்பதால் போலீசார் தொடர்ந்து தேடி வருவதாகவும், எனவே தானாக முன் வந்து சரண் அடைவதாகவும் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Coimbatore Rowdy Saravanan

நீதிமன்றத்தில் சரணடைந்த சரவணன்

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் மீது சரவணம்பட்டி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை,கஞ்சா கடத்தல்  உட்பட 15 வழக்குகள் இருக்கின்றது. இந்த வழக்குகள் தொடர்பாக போலீசார் சண்முகத்தை தேடிய போது அவர் திடீரென தலைமறைவாகவிட்டார். ஆனாலும் அவரை பல இடங்களில் தேடிய காவல்துறையினர் ஒரு கட்டத்தில், அவரது குடும்ப உறுப்பினர்களை கைது செய்து விடுவதாகவும் சண்முகத்தை என்கவுன்டர் செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகின்றது.

Advertisment

இந்நிலையில் இன்று ரவுடி சண்முகம் தனது வழக்கறிஞர்களுடன் கோவை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மேலும் போலீசார் சுட்டு விடுவேன் என மிரட்டுவதாகவும், குடும்பத்தினர் மீது கஞ்சா விற்பதாக  பொய் வழக்கு போட்டு விடுவதாக மிரட்டுவதாகவும், குடும்பத்தினருக்காக நீதிமன்றத்தில் சரண் அடைவதாகவும் குறிப்பிட்டுள்ள சரவணன, தன் மீது 15"வழக்குகள் இருப்பதால்  போலீசார் தொடர்ந்து தேடி வருவதாகவும், எனவே தானாக முன் வந்து சரண் அடைவதாகவும் கூறியுள்ளார். 

மேலும், தான் சிறையில் இருந்து வெளியில் வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகின்றது என்றும், திருந்தி வாழ்ந்து வரும் தன்னை  போலீசார் தொடர்ந்து தேடி வருவதால் வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்தில் சரண் அடைவதாகவும் கூறியுள்ள ரவுடி சண்முகம்  தனது சகோதரர் மீதும் 5"வழக்குகள் இருப்பதாகவும் சமீபத்தில் அவரை பிடித்த போலீசார் கை,கால்களை உடைத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

தற்போது தனக்கு எதுவும் ஆகாமல் இருக்கவே மக்கள் முன்னிலையில் நீதிமன்றத்தில் சரண் அடைவதாக சிறையில் இருந்தே மற்றதை பார்த்து கொள்வதாக ரவுடி சண்முகம் சரணடைந்தது குறித்து தகவல் தெரிவித்தார்.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamilnadu Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment