Advertisment

புஸ்ஸி ஆனந்த் விரைவில் நலம் பெற வேண்டும்... கோவை விஜய் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என்று கூறி விஜய ரசிகர்கள் கோவையில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்

author-image
WebDesk
Nov 03, 2023 16:55 IST
New Update
Vijay Fans

விஜய் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் நலம் பெற வேண்டி கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கோணியம்மன் கோவிலில் மண்டியிட்டு வழிபாடு செய்தனர்.

Advertisment

தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின்  மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு நேரில் சென்ற நடிகர் விஜய் புஸ்ஸி ஆனந்திடம் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். இதனிடையே கோவை தெற்கு மாவட்ட உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பூரண நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

தெற்கு மாவட்ட தலைவர் கோவை விக்கி, இளைஞரணி தலைவர் பாபு ஆகியோர்  தலைமையில்,முன்னதாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோணியம்மன் கோவிலில் திரண்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் தங்கள் இயக்கத்தின் தேசிய பொது செயலாளர் உடல் நலம் பூரண நலன் பெற வேண்டி கால்களை மண்டியிட்டு சிறப்பு பிரார்த்ரனை செய்தனர்.இதே போல ஆலயங்களிலும்,சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். புஸ்ஸி ஆனந்த் தற்போது  நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
#Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment