சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ள நிலையில், ரூ1.1 கோடி நஷ்டஈடு கேட்டு மாணவர் ஒருவர் அமரன் படக்குழுவுக்கு எதிராக வழங்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் என்ன?
தமிழ்நாட்டை நேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்த படத்தில், சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் கேரக்டரில் நடித்திருந்தார். சாய் பல்லவி அவரது மனைவி இந்து கேரக்டரில் நடித்திருந்தார். கமல்ஹாசன் தயாரித்த இந்த படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ந் தேதி அமரன் படம் வெளியானது.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்து வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த பொறியியல் மாணவர் வி.வி.வாகீசன், சாய் பல்லவியின் தன்னை இடைவிடாமல் தொலைபேசியில் அழைத்து வருவதாக கூறி, அமரன் தயாரிப்பாளர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் தனது தொலைபேசி எண்ணைக் காட்டியதால் தான் தனக்கு இந்த அழைப்புகள் வருவதாக கூறிய அவர், தனக்கு ரூ1.1 கோடி நஷ்டஈடு வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமரன் படத்தில் ஒரு காட்சியில், சாய் பல்லவி தனது மொபைல் எண் எழுதப்பட்ட ஒரு காகிதத்தை ஹீரோ சிவகார்த்திகேயன் மீது வீசுவார். உண்மையில், அந்த எண் மாணவர் வாகீசனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. படம் வெளியான அக்டோபர் 31 ஆம் தேதி மாணவர் தனது குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது, சாய் பல்லவியிடம் பேச வேண்டும் என்று அவருக்கு பல அழைப்புகள் வர ஆரம்பித்தன.
முதலில் காரணம் தெரியாமல் தவித்த அந்த மாணவர், தனக்கு வரும் கால்களின் எண்ணிக்கை அதிகரித்த பிறகு தனது மொபைல் எண் படத்தில் காட்டப்பட்டுள்ளதாக உணர்ந்துள்ளார். தனது ஆதார் எண்ணை வைத்து வாங்கிய இந்த நம்பரை தனது வங்கி கணக்கு முதல் பல்வேறு பயன்பாட்டுக்கான பதிவு செய்து வைத்துள்ளதால், இந்த நம்பரை மாற்றுவது கடினமான செயலாக உள்ளது. இதனால் அவர் தனது கஷ்டங்களுக்கும் மன வேதனைக்கும் ரூ1.1 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் படத்திலிருந்து தனது எண்ணை உடனடியாக நீக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
படம் வெளியானதில் இருந்து தன்னால் தூங்கவோ, படிக்கவோ, எனது அடிப்படை செயல்பாடுகளை இடையூறு இல்லாமல் செய்யவோ முடியவில்லை. இந்த பிரச்னையை தீர்க்க, முதலில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனை டேக் செய்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். ஆனால் அவரது கோரிக்கைகள் பதிலளிக்கப்படவில்லை.
இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. 2003 ஆம் ஆண்டு பூரி ஜெகநாத்தின் நாகார்ஜுனா நடித்த ஷிவாமணி திரைப்படம் வெளியானபோது, படத்தில் காட்டப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை வைத்திருக்கும் நபர் வழக்கு தொடர்ந்தார். 2018 ஆம் ஆண்டில், ஜார்கண்ட்டைச் சேர்ந்த ஒருவர் நாகார்ஜுனாவின் மகன் அகில் அக்கினேனி நடித்த ஹலோ படத்திற்கு எதிராக அவரது தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி வழக்கு தொடர்ந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.