தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த், கடந்த இரு தினங்களுக்கு முன்பு உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது உடல்நலம் குறித்து, அவரது நெருங்கிய நண்பரும் மருத்துவருமான சொக்கலிங்கம் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
Advertisment
ஜெயிலர் மற்றும் லால் சலாம் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம், ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு வரும் அக்டோபர் 10-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அடுத்து ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஜெயிலர் படத்தின் 2-ம் பாகத்திற்கான படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதனிடையே கூலி படத்தின் ஷூட்டிங்கில் இருந்த ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலில், இதயத்திற்கு அருகே, பிரச்னை இருந்ததாகவும், தற்போது அந்த பிரச்னை சரி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியானது. இந்த தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரஜினிகாந்துக்கு என்ன ஆச்சு என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால நண்பரும், மருத்துவருமான டாக்டர் சொக்கலிங்கம், அளித்துள்ள பேட்டியில், ரஜினிகாந்தின் இதயத்தில் மகாதமனி என்ற இடத்தில் சிறு அடைப்பு இருந்தது. நேற்று காலை அந்த பிரச்னை சரி செய்யப்பட்டது. நேற்று மாலை அவரை நான் சந்தித்தேன். அவரது உடல்நிலை சீராக உள்ளது. நலமாக இருக்கிறார். என் கையை பிடித்துக்கொண்டு எப்படி இருக்கீங்க என்று என்னிட்ம் கேட்டார். நீங்கள் மிகவும் முக்கியம் என்று நான் சொன்னேன்.
Advertisment
Advertisements
எல்லா சேனல்களில் இருந்தும் ரஜினிக்கு என்ன ஆச்சு என்று என்னை கேட்கிறார்கள் என்று நான் அவரிடம் சொன்னேன். நடந்ததை சொல்லுங்கள். மக்களுக்கு தெரியட்டும். நான் நலமாக இருக்கிறேன் என்று சொல்லுங்கள். ரொம்ப சந்தோஷப்படுவாங்க. இதில் இருந்து மக்கள் எதாவது பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அதையும் சொல்லுங்கள். உங்க மூலமாக சொன்னால் எளிதில் அனைவருக்கும் புரியும். அதை கேட்டு பயன்பெறுவார்கள். மறுபடியும் ரஜினிகாந்தாக நான் நடிக்க வருவேன் என்று சொல்லுங்கள் என்று சொன்னார்.
இப்போது அவர் 2-3 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். ஆனால் விட்டால் அவர் நடிக்க கிளம்பிவிடுவார். ஆனால் அவர் உறுதியாக இருக்கிறார். 73 வயதாகும் அவர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுவிட்டால் தனக்கு 30 வயதாகிறது என்ற நினைப்பில், நடித்துக்கொண்டு இருக்கிறார். அவர் சரியாக ஓய்வு எடுத்தவிட்டு திரும்பி வந்தால் முன்பு இருந்ததை விட சிறப்பாப இருப்பார் என்று டாக்டர் சொக்கலிங்கம் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“