திரைத்துறை தொழில் சார்ந்த அனைத்து திறன்களை மாணவர்கள் தெரிந்த கொள்ளும் விதமாக தமிழகத்தில் முதன் முறையாக திரைப்பட மையம் கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஆரி அர்ஜூனன், அந்நிய மொழி திரைப்படங்களுக்கு கொடுக்கக்கூடிய வரவேற்பை தமிழ் படங்களுக்கு ரசிகர்கள் கொடுப்பதில்லை என கூறியுள்ளார்.
உலக அளவில் தமிழ் சினிமா துறை சாதித்து வரும் நிலையில், தமிழகத்தில் முதன் முறையாக திரைப்பட தொழில் சார்ந்த இளம் தலைமுறை மாணவர்கள் திரைப்படங்கள் தொடர்பான தயாரிப்பு மற்றும் விநியோகம் என திரைத்துறை தொழில் சார்ந்த திறன்களை தெரிந்த கொள்ளும் விதமாக தமிழகத்தில் முதன் முறையாக கோவை இரத்தனம் கல்லூரி வளாகத்தில் "ஃபிலிம் இன்குபேஷன்" சென்டர் எனும் திரைப்பட வளர்ப்பு மையம் கோவையில் துவங்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்பட மையம் குறித்து நடிகர் ஆரி அர்ஜுனன் ஒளிப்பதிவாளர் செந்தில் குமார், இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு, நடிகர் தயாரிப்பாளர் மாதம்பட்டி ரங்கராஜ், மற்றும் கல்லூரியின் தலைவர் மதன் செந்தில் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நடிகர் ஆரி கூறுகையில், திரைப்பட துறையில் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் திரைப்பட கருத்துக்களை வளர்த்துக் கொள்ளவும் திறமையான திரைக்கதையை எழுதவும் இந்த மையத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
அனுபவம் வாய்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களிடமிருந்து வழிகாட்டுதல் மற்றும் ஆதரவைப் பெறலாம். மேலும் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி அறிய பட்டறைகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகள் இங்கு நடத்த உள்ளோம்.இதில் திரைப்படம் சார்ந்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள் தொழில் நுட்ப வல்லுனர்கள் என அனுபவம் வாய்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.திரைப்படங்களை தயாரிக்க நிதியுதவி பெறுவது முதல், தங்கள் திரைப்படங்களை பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்வது வரையிலான வர்த்தக விவரங்களை இந்த திரைப்பட வளர்ப்பு மையம் தெரிந்து கொள்ள முடியும்.
குறிப்பாக எழுத்தாளர்களை ஊக்குவித்தல் இல்லாத காரணத்தினால் தான் தமிழ் சினிமாவில் நல்ல கதைகள் உருவாகுவதில்லை. அதனால் தான் அந்நிய மொழி படங்கள் நன்றாக உள்ளது என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு வியுக பிம்பம் உருவாகியுள்ளது இந்த சூழல் நீடித்தால் வரும் காலங்களில் தமிழ் திரைப்படங்கள் வெளியிடும் போது அந்நிய மொழி படங்கள் கதைகள் போன்று தமிழ் கதைகள் உள்ளது என்று கூறினால் மட்டுமே ரசிகர்கள் தமிழ் திரைப்படங்களுக்கு வரவேற்பு அளிக்கக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது வேதனை அளிக்கிறது.
இத்தகைய சூழ்நிலையை மாற்றுவதற்காக தான் தற்போதுள்ள இளம் மாணவர்கள் திரைப்படங்கள் தொடர்பான அனைத்தையும் தயாரிப்பு மற்றும் விநியோகம் என தொழில் சார்ந்த அனைத்திலும் திறன்களை தெரிந்து கொள்ளும் விதமாக தான் திரைப்பட வளர்ப்பு மையத்தை ஒரு குழுவாக சேர்ந்து ஒன்றிணைந்து அடியெடுத்து வைத்துள்ளோம் திறமையான மற்றும் ஆர்வமுள்ள இளம் திரைப்படத் துறை சார்ந்த மாணவர்களுக்கு அவர்கள் கனவுகளை நனவாக்க உதவும் வகையில் இம்மையம் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று நடிகர் ஆரி கூறியுள்ளார்.
பி. ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.