தமிழகத்தில் முதல்முறையாக பிரபல பாடகியின் இசை நிகழ்ச்சி : கோவை கொடிசியாவில் ஏற்பாடு | Indian Express Tamil

தமிழகத்தில் முதல்முறையாக பிரபல பாடகியின் இசை நிகழ்ச்சி : கோவை கொடிசியாவில் ஏற்பாடு

பீஸ்ட் படத்தில் ஜொனிதா காந்தி பாடிய அரபி குத்து பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது.

தமிழகத்தில் முதல்முறையாக பிரபல பாடகியின் இசை நிகழ்ச்சி : கோவை கொடிசியாவில் ஏற்பாடு

இந்தியர்களால் கொண்டாடப்படக் கூடிய இளம் பின்னணி பாடகியான ஜொனிதா காந்தியின் இசை கச்சேரி கோவை கொடிசியா மைதானத்தில் பிப்ரவரி 26″ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தோ-கனடிய பாடகரான இவர் தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி என 10 க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார்.

யூடியூப்பில் உள்ள இவரது கவர் பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கவனம் ஈர்த்து வருகிறத.  மேலும், பீஸ்ட் திரைப்படத்தில் இவர் பாடிய அரபி குத்து பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது. தமிழகத்திலேயே கோவையில் முதல் முறையாக ஜொனிதா காந்தியின் நேரடி இசை கச்சேரி நடைபெறுகிறது.  இந்த நிகழ்விற்க்கான ஏற்பாடுகளை அருண் ஈவென்ட்ஸ் ஈவென்ட்ஸ் மற்றும் ராஜ் மெலோடிஸ் செய்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து ஒருங்கிணைப்பாளர்கள்  கூறுகையில்,

இன்றைய தலைமுறை இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் ஜொனிதா காந்தி இடைவிடாமல் தொடர்ந்து இரண்டரை மணிநேரம் தனது இசை குழுவினர்களோடு பாட உள்ளார்.இதில் 60 சதவீதம் தமிழ் பாடல்கள் பாடப்படும்.  மேலும் கோவையில் பல தரப்பட்ட மக்கள் உள்ளதால் பிற மொழி (தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி, ஆங்கிலம்) சார்ந்த பாடல்களும் கச்சேரியில் இடம்பெறும்.

25,000 முதல் 40,000 க்கும் மேற்பட்டவர்கள் நிகழ்வை காண வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் சர்வதேச அளவிலான இசை கச்சேரிக்கு இணையாக இருப்பதோடு, உலக தரம் வாய்ந்த ஒலி மற்றும் ஒளி அமைப்புகள் நிகழ்வில் பயன்படுத்தப்படுகிறது.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது பாடகி ஜொனிதா காந்தி நேரடியாக ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த காணொலி திரையிடப்பட்டது.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu first music function in coimbatore singer jonitha gandhi